99 சூப்பர் ஹிட் அடித்த பாடலை டிக் டாக்கில் ரீ-கிரீயேட் செய்த சிம்ரன். வைரலாகும் வீடியோ.

0
12792
simran
- Advertisement -

தமிழ் சினிமாவின் இடுப்பழகி என்ற பட்டத்துடன் 90ஸ் காலகட்டத்தில் முன்னனி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை சிம்ரன். தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களான விஜய், அஜித், விக்ரம், சூர்யா என்று பல்வேறு முன்னனி நடிகர்களுடன் கை கோர்த்து நடித்துவிட்ட சிம்ரன், தமிழ் சினிமாவையும் தாண்டி தென்னிந்திய சினிமாவிலும் கொடி கட்டி பறந்து வந்தார் சிம்ரன் என்றதும் நம் நினைவில் முதலில் வருவது அவரது நடனம் தான். இதனால் சிம்ரனை பலரும் இடுப்பழகி என்று அழைத்து வந்தனர்.

தமிழில் முன்னணி நடிகையாக இருந்த சிம்ரன் நடித்த பல்வேறு படங்களுக்கு இவரது சிறப்பான நடிப்பில் இவருக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்தது. சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த வில்லி கதாபாத்திரம் என்று நடிகை சிம்ரன் ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். சிம்ரன் கடந்த 2003 ஆம் ஆண்டு சதீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் காதல் திருமணம் என்றும் கூறப்பட்டது. திருமணத்திற்கு பின்னர் இவருக்கு 2 ஆண் குழந்தைகளும் பிறந்தனர்.

- Advertisement -

இதையும் பாருங்க :பாண்டியன் ஸ்டோர்ஸில் குமரன் மற்றும் சித்ராவிற்கு பிடித்த எபிஸோட்ஸ்கள் இது தானாம்.

திருமணம் முடிந்து குழந்தை குட்டி என்று செட்டில் ஆன பின்னரும் தனது நடிப்பை கைவிடாமல் இருந்து வந்தார். மேலும், தனது செகண்ட் இன்னிங்ஸ்ஸை தொடர்ந்த சிம்ரன் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்குபெற்று வருகிறார். அத்தோடு சினிமாவில் நடிப்பதையும் நிறுத்தாமல் நடித்து வருகிறார். இறுதியாக சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தில் நடித்திருந்தார். சமீபகாலமாக சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்த சிம்ரன் தற்போது டிக்டாக்கில் கால் பதித்துள்ளார்.

-விளம்பரம்-

டிக் டாக்கில் அடிக்கடி தனது வீடியோக்களை பதிவிட்டு வரும் சிம்ரன் சமீபத்தில் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா என்ற பாடலை கிரியேட் செய்துள்ளார்.கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான எதிரும் புதிரும் என்ற படத்தில் இடம்பெற்ற இந்த பாடலில் ராஜு சுந்தரத்துடன் இணைந்து சிம்ரன் இந்த பாடலில் நடனமாடி இருப்பார் இந்த படத்தை விட இந்த பாடல் தான் இளசுகள் மத்தியில் மாபெரும் ரீச் ஆனது என்று சொன்னாலும் நிகரில்லை.

Advertisement