தகாத முறையில் நடந்து கொண்டார் அதான் சீரியலில் இருந்து விலகி – நடிகை பகீர் புகார்.

0
1309
simran
- Advertisement -

பாலிவுட்டில் டி.வி தொடரில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சிம்ரன் சச்தேவா. இவர் தன்னிடம் பட அதிபர் தவறாக நடந்தார் என்று கூறி புகார் கொடுத்துள்ளார். ஹிந்தி தொடரின் மூலம் தனெக்கென ஒரு ரசிகர் படையை கொண்டவர் நடிகை சிம்ரன் சச்தேவா. ஹிந்தியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சோட்டி சர்தார்னி என்ற தொடரில் நடித்து பிரபலமானார் சிம்ரன் சச்தேவா. இந்த தொடரில் சிம்ரன் சச்தேவா நடித்த கதாபாத்திரத்தில் ஏற்கனவே நடிகை மான்சி சர்மா நடித்து வந்தார். அவருக்கு திடீர் என்று உடல்நலம் குன்றியதால் சீரியலில் இருந்து விலகினார்.

-விளம்பரம்-
Simran Sachdeva to enter Hum Ne Li Hai...Shapath

பின் அவருக்கு பதிலாக தான் இந்த தொடரில் சிம்ரன் சச்தேவாவை நடிக்க வைத்தனர். இவர் ஏற்கனவே ஹிந்தியில் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார். மேலும், கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு உள்ளதால் அனைத்து விதமான படப்பிடிப்புகள் முடங்கி உள்ளன. இதனால் தயாரிப்பாளர்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

- Advertisement -

இதையடுத்து தயாரிப்பாளர்கள் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் நடிகைகளை டி.வி தொடர்களில் இருந்து நீக்கி விட்டு அவர்களுக்கு பதிலாக குறைந்த சம்பளத்துக்கு ஓகே சொல்பவர்களை நடிக்க வைக்க இருப்பதாக திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் நடிகை சிம்ரன் சச்தேவாவுக்கு 40 சதவிதம் சம்பளத்தை குறைத்துள்ளனர். இதனை சிம்ரன் சச்தேவா அவர்கள் ஏற்க மறுத்து விட்டார். பின் தொடரில் இருந்து விலகி விட்டார்.

Simran Sachdeva

இது குறித்து சிம்ரன் சச்தேவா அவர்கள் சமீபத்தில் பேட்டி அளித்து இருந்தார். அதில் அவர் கூறியது, நான் தொடரில் நடித்து கொண்டு இருக்கும் போதே சம்பளத்தை ஒழுங்காக தரவில்லை. இப்போது 40 சதவீதம் சம்பளத்தை குறைத்து உள்ளார் தயாரிப்பாளர். அதோடு தயாரிப்பாளர் ஒருவர் என்னிடம் தகாத முறையில் தவறாக நடக்க முயன்றார். மரியாதை இல்லாமலும் நடத்தினார். இதனால் தான் நான் அந்த தொடரில் இருந்து விலகினேன் என்று கூறினார்

-விளம்பரம்-
Advertisement