சிங்கப் பெண்ணே சீரியல் மீது ஜூனியர் ஆர்டிஸ்ட் கொடுத்திருக்கும் புகார் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவாகவே சின்னத்திரை சீரியல் ரசிகர்கள் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் புதுப்புது வித்தியாசமான கதைகளத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
இதனால் சமீப காலமாக சன் டிவியில் புதுமுக நடிகர்களை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தொடர் தான் சிங்கப் பெண்ணே. தன்னுடைய குடும்ப சூழ்நிலைக்காக கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸ்சில் வேலைக்கு செல்கிறார் ஆனந்தி. இவருடன் சில பெண்களும் வேலை செய்கிறார்கள். அங்கு அவர்கள் தைரியமாக எதிர்கொள்ளும் பிரச்சனையை மையமாக வைத்து தான் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
சிங்கப்பெண்ணே சீரியல்:
சீரியல் ஒளிபரப்பான சீரியல் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த தொடரில் நடிக்கும் நடிகர்கள் பலருமே புதுமுகம் தான். இருந்தாலும் இந்த தொடர் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை டிஆர்பியில் முன்னிலை பிடித்திருக்கிறது. தற்போது சீரியலில் காதல் டிராக் தான் சென்று கொண்டிருக்கின்றது.
சீரியல் கதை:
மகேஷ், அன்பு, ஆனந்தி இவர்களுடைய லவ் தான். இவர்களில் யார் ஜோடி சேரப் போகிறார்கள் என்பது தான் சீரியல் உடைய கதையே. இதை பார்க்க ரசிகர்களும் ஆவலுடன் இருக்கின்றார்கள். இந்த நிலையில் சிங்கப்பெண்ணே சீரியல் மீது ஜூனியர் ஆர்டிஸ்ட் கொடுத்திருக்கும் புகார் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிங்கப் பெண்ணை சீரியல் நடிக்கும் ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்கள்.
ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் வீடியோ:
அதில், பெண்களை ரொம்ப மட்டமாக நடத்துகிறார்கள். இயக்குனர், தயாரிப்பாளர், செடியூல் இயக்குனர் எல்லோருமே ரொம்ப மோசமாக நடத்துறாங்க. பெண்கள் மட்டமாக நடத்துகிறார்கள், மோசமாக பேசுகிறார்கள். எதுக்கு இவர்கள் சீரியல் எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. எத்தனையோ சீரியல்களில் நாங்கள் நடத்தி இருக்கிறோம். இந்த மாதிரி யாருமே நடத்துனது கிடையாது. ஏன் என்று கேள்வி கேட்டால் எங்களை அடிக்க வருகிறார்கள். கொஞ்சம் கூட மரியாதை கொடுக்கவில்லை. பெண்களுக்கும் சரியான மரியாதை இல்லை. எங்களுக்கு வேலை இல்லாமல் நாங்கள் வரவில்லை.
சீரியல் குறித்து சொன்னது:
எங்களுக்கு ஒரு வேலை இருக்கிறது. இருந்தாலும் சினிமாவின் மீதுள்ள ஆசையினால் தான் நாங்கள் எல்லாத்தையும் விட்டு இங்கு வந்து நடித்துக் கொண்டிருக்கிறோம். எங்களைப் போன்ற வளரும் கலைஞர்களை இப்படி மோசமாக நடத்துவதா? ஜூனியர் ஆர்டிஸ்ட் என்றால் அவ்வளவு கேவலமா? இந்த மாதிரி எல்லாம் எந்த சீரியலிலும் மோசமாக நடத்தியதே கிடையாது. எல்லோருமே கேவலமாக நடத்துகிறார்கள். ஒரு டாப் சீரியலாக இருந்து கொண்டு இப்படி நடத்துவது சரியா என்று ஆவேசத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட் எல்லாம் பேசி இருக்கிறார்கள்.