அவன் அப்பனை கொலை பண்ணட்டுமானு அவன் பையனே சொல்றான் – வடிவேலு குறித்து சிங்கமுத்து.

0
18540
singamuthu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான காமெடி நடிகர்களில் சிங்கமுத்தும் ஒருவர். இவர் 1987 ஆம் ஆண்டு வெளியான நேரம் நல்லாயிருக்கு என்ற படத்தின் மூலம் தான் நகைச்சுவை நடிகராக சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதற்கு பிறகு தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரும் வடிவேலும் இணைந்து நிறைய படங்களில் நடித்துள்ளார்கள். இந்நிலையில் நடிகர் சிங்கமுத்து அவர்கள் வடிவேலுவை பற்றி சில விஷயங்களை நடிகரும், இயக்குனருமான மனோபாலா நடத்தி வரும் யு டியூப் சேனலில் பகிர்ந்து உள்ளார். நடிகர் வடிவேலு மற்றும் சிங்க முத்து இருவருக்கும் இடையே ஏற்கனவே நிலம் தொடர்பாக தகராறு இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

-விளம்பரம்-

சமீபத்தில் நடிகர் மனோபாலா நடத்திய யூடியூப் பேட்டியில் நடிகர் சிங்க முத்து கலந்து கொண்டார். அதில் அவர் வடிவேலு குறித்து சில கருத்துக்களை கூறினார். மேலும், வடிவேலு அவர்கள் தன்னை பற்றி அவதூறாக பேசியதாக நடிகர் சங்கத்திற்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. வடிவேலு பற்றி சிங்கமுத்து அப்படி என்ன பேசினார் என்று பல கேள்விகள் எழுந்தது. அந்த பேட்டியில் சிங்க முத்து கூறியது, என் வாழ்க்கை கதையை பங்காளி வடிவேலு இல்லாமல் எழுத முடியாது.

- Advertisement -

அந்த அளவிற்கு நானும் அவரும் உயிருக்கு உயிரான நண்பர்களாக இருந்தோம். இப்போதும் நான் வடிவேலுவை வெறுக்கவில்லை. அவருடன் நடிக்க தயாராகவே இருக்கிறேன். நான் சந்தானத்துடன் இணைந்து நடித்ததில் இருந்துதான் இந்த பிரச்சினை ஆரம்பமானது. சந்தானத்துடன் இணைந்து நான் நடித்தது அவருக்கு பிடிக்கவில்லை. என்னுடைய மகனை நான் ஹீரோவா நடிக்க வைத்தேன். வடிவேலுக்கும் அவருடைய மகனை ஹீரோவாக நடிக்க வைக்க ஆசை. ஆனால், அவர் மகனுக்கு யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. அவர் மகனை ஹீரோவாக்க முடியவில்லை என்றால் அதற்கு என் மகனும் ஹீரோவாகக் கூடாதா என்ன? என்னுடைய பையன் விஜய் மாதிரி பெரிய ஹீரோவாகிடுவான் என்று அவர் பயந்து விட்டார்.

வீடியோவில் 3:33 நிமிடத்தில் பார்க்கவும்

மேலும், அவன் பையன் நடிகராக வந்து விட்டால் அவன் அப்பனை கொலை பண்ணுவேன்னு என்கிட்ட சொன்னான். நான் வடிவேலுவை பற்றி குறை சொல்லவில்லை. இது அவர் அறியாமையில் செய்துவிட்டதாகத் தான் நினைக்கிறேன். வடிவேலு நல்ல நடிகர், நல்ல திறமைசாலி. ஆனால், கேட்பார் பேச்சை கேட்பவர். அதனால் தான் அவர் இந்த நிலைமையில் உள்ளார். நான் 8 லட்சத்துக்கு வாங்கிக் கொடுத்த இடத்தை அவர் 22 கோடிக்கு விற்றுவிட்டார். அவர் தர வேண்டிய 40 லட்ச ரூபாய் கமிஷன் பணத்தை நான் கேட்பேன் என்று நினைத்து என் மீது வழக்கு தொடர்ந்தாரா என்று நடிகர் சிங்கமுத்து கூறியிருந்தார். நடிகர் சிங்கமுத்துக்கு வாசன் கார்த்திக் என்ற மகன் உள்ளார். 2007 ஆம் ஆண்டு வெளியான மா மதுரை என்ற படத்தில் வாசன் கார்த்திக் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

-விளம்பரம்-
Advertisement