தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடகராக திகழ்பவர் அந்தோணி தாசன். சிறு வயதில் இருந்த இவருக்கு இசையின் மீது காதல் என்றே சொல்லலாம். இதனால் இவர் நாட்டுப்புறப் பாடகராக அவதாரம் எடுத்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் பல கச்சேரிகள் செய்து இருக்கிறார். தெருக்கூத்து நிகழ்ச்சியிலும் இவர் பாடி இருக்கிறார். அதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் இவருக்கு சினிமாவில் பாட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்காக இவர் கடுமையாக உழைத்தார்.

இவருடைய திறமையை புரிந்து கொண்ட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இவருடைய இசைக்கு வாய்ப்பு தந்தார். இவர் முதன்முதலாக விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாகியிருந்த சூது கவ்வும் என்ற படத்தில் காசு பணம் துட்டு என்ற பாடலை பாடி இருந்தார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்திருந்தது. அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் குத்தாட்ட பாடல்களை பாடி இருந்தார். தற்போது இவருடைய குரலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
அந்தோணி தாசன் திரைப்பயணம்:
அதுமட்டுமில்லாமல் இவர் பாடிய எல்லா பாடல்களுமே ஹிட் கொடுத்திருக்கிறது. இதனை அடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய சமையல் திறமையை காண்பித்து இருந்தார். இதன் மூலமும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட்டாகி பாடி கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி படத்தில் சவதீகா என்ற பாடலை பாடியிருக்கிறார்.

அந்தோணி தாசன் பேட்டி:
தற்போது இந்த பாடல் தான் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் அந்தோணி தாசன், விடாமுயற்சி படத்தில் நான் பாட்டு பாடுவேன் என்று கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லை. அந்த படம் ரிலீசாக போகிறது என்ற சந்தோஷத்தில் நான் இருந்தேன். திடீரென்று அனிருத் சார் ஆபீஸ்ல இருந்து எனக்கு போன் வந்தது. ஒரு பாட்டு இருக்கு பாட வாங்க என்று சொன்னார். எனக்கு ஒண்ணுமே புரியலை. சந்தோஷத்தில் சரி என்று பாடப் போனேன். இதற்கு முன்னாடி அனிருத் சார் கொடுத்த பாட்டு எல்லாம் எனக்கு பெரிய அளவு பேர் கொடுத்தது.
https://www.youtube.com/watch?v=rgbVoAppoXg
விடாமுயற்சி பட அனுபவம்:
மேலும், அனிருத் சாரை பார்க்க போனப்ப தலைவன் டான்ஸ் ஆடிட்டு அப்படியே கம்போஸ் பண்ணிட்டு இருந்தாரு. நானும் அப்படியே ஆடி பாட்டு பாடிட்டு வந்து விட்டேன். சவதீகா என்பது தாய்லாந்து மொழி. இந்த வார்த்தைக்கு வாங்க வாங்கன்னு அர்த்தம். எல்லோரையும் அழைப்பது தான் இந்த பாட்டு. அதே மாதிரி தான் அவங்க போகும்போதும் கப்பூங்கா என்று சொல்லுவாங்க. அப்படின்னா போயிட்டு வாங்கன்னு அர்த்தம். நான் மலாய் மொழியில் பாட்டு பாடணும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் எனக்கு தாய்லாந்து மொழிலேயே பாடக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இத நினைத்தால் கெத்தாக இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=b_Iax98q2LU
கலை குறித்து சொன்னது:
அதேபோல் நான் என்னுடைய சினிமா வாழ்க்கையில் நிறைய பேருக்கு நன்றி சொல்லணும்னு ஆசைப்படுகிறேன். முதலில் நான் அனிருத்சாக்கு தான் நன்றி சொல்லணும். அவர் கொடுத்த எல்லா பாட்டுமே என்னை அடுத்தடுத்த இடத்துக்கு கொண்டு போக வைத்தது. நான் கரகாட்டக்காரனாக இருந்த போதே அதிக சம்பளம் வாங்கினதில் நானும் என் மனைவியும் ஒருத்தர். மற்ற கலைஞர்கள் ஆயிரம் ரூபாய் வாங்கினால் நாங்க ரெண்டு பேருமே 4000 ரூபாய் வாங்குவோம். அதற்கு கடவுளுக்கு தான் நன்றி. நாங்க உழைப்பை நம்பினோம். கலைமகள் நம்பினோம். அதனால் எங்கள் பாக்கெட் நிறைய காசு இருக்கும். தென் மாவட்டங்களில் அந்தோணி என்றால் எல்லோருக்குமே தெரிகிறது. எங்களுக்குன்னு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது என்று பல விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார்.






