பிரபல பாடகி அனுராதா ஸ்ரீராம் அவர்களின் பேட்டி தான் தற்போது மீண்டும் வைரல் ஆகி வருகிறது. இவர் தன்னுடைய 6 வயதிலேயே அவரது இசைப் பயிற்சியை தொடங்கியவர். பின் கச்சேரிகள், இசை நிகழ்ச்சிகள் என்று அனைத்திலும் அனுராதா பங்கு பெற்றிருந்தார். மேலும், ஏ. ஆர். ரஹ்மானின் 'பம்பாய்' திரைப்படத்தில் இடம்பெற்ற மலரோடு மலரிங்கு என்ற பாடலை குரூப் பாடகராக பாடி சினிமாவிற்கு அறிமுகமானார் அனுராதா. அதன் பின்னர் இவர் 'மின்சார கனவு' படத்தில் இடம்பெற்ற அன்பென்ற மழையிலே என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். அதன் பின்னர் இவர் பல படங்களில் பின்னணி பாடல்களை பாடி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று பல மொழிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார் அனுராதா. தற்போது இவர் விஜய் டிவியில் பல ஆண்டு காலமாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். அனுராதா திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி கர்நாடக இசைக் கச்சேரிகளையும் நடத்தி வருகிறார். இவர் இதுவரை 1000-க்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகள் நடத்தியுள்ளார். அனைத்து மொழிகளிலும் சேர்த்து இவர் சுமார் 4000 பாடல்கள் பாடியுள்ளார்.
அனுராதா ஸ்ரீராம் பேட்டி:
அந்தப் பேட்டியில் அவர், என் அம்மா தான் ஜேசுதாஸுக்கு தமிழ் கற்றுக் கொடுத்தாங்க. என்னுடைய அம்மா ட்ரூம்ல தான் ஆன்மீக பாடல் பாடும் வீரமணி எல்லாம் பாடுனாங்க. இளையராஜா சார் கூட எங்க அம்மாவுக்கு மியூசிக் போட்டு இருக்காரு. நான் பொறந்த அப்போ எங்க அம்மா அதிகமா பாட்டு பாடவில்லை. எங்க அம்மா சொல்லுவாங்க நான் பேசுறதுக்கு முன்னாடியே பாடுவேன்னு. எங்க அம்மா ஜீன் தான் நினைக்கிறேன். மேலும், என்னுடைய அம்மாவிற்கு நான் பாடிக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசை என்று கூறியுள்ளார்.
https://www.youtube.com/watch?v=4GiQJEnm-2Y
காளி படம்:
மேலும், நான் ரஜினி சாரோட 'காளி' படத்தில் நடித்ததை பற்றி கேட்கிறீர்கள். ஆனால், நான் சிங்கர் என்றே இங்க பாதி பேருக்கு தெரியல. எல்லாரும் அந்த டிவில வந்த ஜட்ஜ் தானே நீங்க என கேக்குறாங்க. இதுல நான் நடிச்சது எங்க தெரியப்போகுது. நான் ரஜினி சாரோட நடிச்சது எல்லாம் ஆக்சிடென்ட் தான். நான் குடும்பத்தோட ஊட்டி போகும் போது, ரஜினி சாரோட காளி படத்துல நடிக்க வேண்டிய பொண்ணு வரல. அந்த சமயம் டூர் போன எங்களைப் பார்த்து டைரக்டர் கேட்டவுடனே, உங்க அப்பா ஓகே சொல்லிட்டாரு. நானும் நடித்தேன்.
கணவர் குறித்து:
அதற்கு பிறகு கூட நான் 4, 5 படங்கள் தெலுங்கு, ஹிந்தியில நடித்திருக்கிறேன். மேலும், நான் யூ எஸ் யுனிவர்சிட்டில மியூசிக் படிக்கப் போகும்போது தான் என்னுடைய கணவரை பார்த்தேன். அப்போது, யுனிவர்சிட்டி சார்பாக எனக்கு ரூம் பார்க்க, பேங்க் அக்கவுண்ட் எல்லாம் கிரியேட் பண்ண தேவையான உதவி எல்லாம் செய்ய இவர அசைன் பண்ணாங்க. அது சம்பந்தமா எனக்கு இவர் போட்டோ லெட்டர் எங்க அப்பாவுக்கு ராம நவமி அன்று கிடைத்தது. அப்போ, எங்க அப்பா ராமரே லெட்டர் போட்டு இருக்காருன்னு சொன்னது ஞாபகம் இருக்கிறது.

நிச்சயம் பண்ணிட்டாங்க:
மேலும், என் கணவரின் குடும்பமே பாட்டு பத்தி தான் பேசுவாங்க. இதெல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. அவங்கள பாத்து தான் எனக்கு இவரை பிடித்து போச்சுன்னு நினைக்கிறேன். அதுக்கப்புறம், நாங்க ஒரு குரூப்ல படிச்சோம். மூணாவது மாதமே நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து மராட்டிய கச்சேரி ஒன்னு பண்ணினோம். அப்பவே அவர பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டேன். எனக்கு டைம் வேஸ்ட் பண்ண பிடிக்காது. இது குறித்து நான் என் அப்பாவிடம் சொல்ல, அவர் நான் யாரை லவ் பண்றேன்னு பார்க்க உடனே கிளம்பி அமெரிக்கா வந்துட்டாரு. அதுக்கப்புறம் நாங்க அமெரிக்காவில் இருந்த சமயத்துலயே, எங்க அப்பா அம்மா, என் கணவரோட குடும்பம் எல்லாம் பேசி நிச்சயம் பண்ணிட்டாங்க என்று கூறியிருக்கிறார்.






