ராப் பாடகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தெருக்குரல் அறிவு. இவர் பாடகர் மட்டும் இல்லாமல் பாடல் ஆசிரியரும் ஆவார். இவர் பா. ரஞ்சித் கூட்டத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த காலா படத்தில் உரிமையை மீட்போம் என்ற பாடலை எழுதி இருந்தார். இதன் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆகி இருந்தார். அதன் பின் இவர் விஜயின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி ரெயிடு மாஸ்டர் பாடலை எழுதி இருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் தனுஷ், ஜீவா உள்ளிட்ட சில முன்னணி நடிகர்களின் படங்களிலும் பாடகராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.

இன்னொரு பக்கம் இவர் நிறைய ஆல்பம் பாடல்களை எழுதி இருக்கிறார். அந்த வகையில் இவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணணின் மகளும் பிரபல பாடகியுமான தீ உடன் சேர்ந்து என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடி இருந்தார். இந்த பாடல் 2021 ஆம் ஆண்டு யூடியூபில் வெளியாகி இருந்தது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பல பிரபலங்கள் இந்தப் பாடலுக்கு நடனமாடி, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்கள். நிலத்தை இழந்த பூர்வக்குடிகளை மையப்படுத்தியதாக இந்த பாடல் இருந்தது.
என்ஜாய் எஞ்சாமி பாடல்:
இந்த பாடல் எந்த அளவிற்கு பிரபலமோ அதே போல் இந்த பாடலை பாடிய தீ மற்றும் அறிவு ஆகியோருக்கும் இடையே மிகப்பெரிய அளவில் சர்ச்சை நிலவி வருகிறது. இந்த பாடலுக்கான அங்கீகாரம், ஊதியம் கொடுக்கவில்லை என்று ஐந்து ஆண்டுகளை கடந்தும் ராப் பாடகர் அறிவு கூறிக் கொண்டு வருகிறார். இந்நிலையில் இது தொடர்பாக அறிவு மீண்டும் தன்னுடைய ஆதங்கத்தை சொல்லி இருக்கிறார். அதில் அவர், இந்த பாடலுக்கான மெட்டு எனக்கு அனுப்பப்பட்டது.
https://www.youtube.com/watch?v=S_mtuLMBUx0
அறிவு பதிவு:
என்னுடைய சொந்த பண்பாட்டு வரலாறு மற்றும் வாழ்வியல் அனுபவங்களின் அடிப்படையில் நானே அந்த பாடலின் வரிகளை எழுதி முதன்மை மெட்டையும் அமைத்து பாடினேன். இசை என்பது ஒரு கூட்டு முயற்சி தான். அதற்கான அங்கீகாரமும் ஊதியமும் நியாயமான முறையில் பகிர வேண்டும். இந்த பாடல் கிராமத்தில் என்னுடைய மண்ணின் மற்றும் மக்களின் கதைகளை கொண்டு படமாக்கப்பட்டது. அந்த வரலாறு மக்களை சென்றடையும் என்ற நம்பிக்கையில் தான் நான் பகிர்ந்து கொண்டேன். ஆனால், அந்த பாடலை முழுமையாக எழுதியும் முதன்மை மெட்டை அமைத்து இருந்தும் கூட நான் ஒரு கொலாபிரேட்டிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவே மட்டும் அடையாளப்படுத்தப்பட்டேன்.
அப்போது அதன் அர்த்தம் எனக்கு தெரியவில்லை.
For clarity regarding “Enjoy Enjaami” (released 5 years ago):
— Arivu (@Arivubeing) March 13, 2026
The beat was sent to me. I wrote the lyrics, composed the main vocal melody and performed the song based on my own cultural history and lived experience.
Music is collaborative. But credit and compensation must also
அறிவு ஆதங்கம்:
ஐந்தாண்டுகளுக்கு பிறகு அந்த பாடலில் என்னுடன் பணியாற்றியவர்கள் அதன் உரிமைகளை வைத்துக்கொண்டு ராயல்டி வாங்கி இருக்கிறார்கள். ஆனால், என்னுடைய உழைப்பிற்கு எந்த ஊதியமோ அல்லது உரிமை வழங்கப்படவில்லை. இது அனுதாபத்திற்கான கோரிக்கை கிடையாது. இது அங்கீகாரம் உரிமைகள் மற்றும் உழைப்பின் கண்ணியம் சார்ந்த கோரிக்கை. சுயாதீன கலைஞர்களே உங்கள் படைப்புகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள். முறையான ஒப்பந்தங்களை செய்து கொள்ளுங்கள். உங்கள் உரிமைகளையும் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.






