அடிச்சி துன்புறுத்தி மோசமா பேசினாங்க – குடியுரிமை அதிகாரிகள் மீது புகார் அளித்த பிக் பாஸ் அசல் கோலார்

0
156
- Advertisement -

மத்திய அரசின் மீது பிக் பாஸ் அசல் கோலார் வைத்திருக்கும் குற்றச்சாட்டு தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் பரிச்சியமில்லாத நபராக கலந்து கொண்டு இருந்தவர் அசல் கோலார் என்னும் வசந்த். வசந்த குமார் என்ற தனது பெயரை அசல் கோலார் என மாற்றிவைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் ‘ஜோர்த்தாலே’ என்ற பாடல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து மூலம் நாராயணன், யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் இசையிலும் பாடல்களை அசல் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படத்தில் நா ரெடி தான் என்ற பாடலை அசல் பாடியிருந்தார். அதற்கு பின் இவர் யார் அந்த பையன் நான் தான் அந்த பையன், என்னை சண்டைக்கு கூப்பிட்டா போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

- Advertisement -

அசல் கோலார் குறித்த தகவல்:

இதற்கிடையில் இவர் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து இருந்தார். இவர் இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே பெண்களிடம் வழிவது, திமிராக பேசுவது என்று இருந்தார். குயின்சி மீது ஆரம்பத்தில் இருந்தே அசல் கோலாருக்கு ஒரு கண் இருந்தது. ஆனால், குயின்சி செட் ஆகவில்லை என்று நினைத்து நிவாசினிடம் கடலை போட ஆரம்பித்தார். அதுமட்டுமில்லாமல் இவர் பெண்கள் அருகில் படுத்து கொண்டு பேசுவது, அவர் மடியில் உட்காருவது, அவரை கடிப்பது போன்ற பல முகம் சுழிக்கும் அசல் வேலைகளை செய்து இருந்தார்.

அசல் கோலார் பேட்டி:

இது எல்லாம் ரசிகர்களுக்கு கடுப்பேற்றி இருந்தது. இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்து இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய நண்பருக்காக செய்தியாளர்களை சந்தித்து அசல் கோலார் அளித்திருக்கும் புகார் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை அளித்து வருகிறது. அதில் அவர், என்னுடைய நண்பர் மலேசிய சிட்டிசன். அவர் கடந்த இரண்டு மாதமாக சென்னையில் தான் தங்கி இருக்கிறார். இவர் டூரிஸ்ட் விசாவில்தான் இந்தியா வந்தார். பின் டூரிஸ்ட் விசா எக்ஸ்பைரியாக போகிறது என்பதால் அவர், தன் நாட்டிலிருந்து டூரிஸ்ட் விசாவை ரினிவல் பண்ணுகிறார்.

-விளம்பரம்-

நண்பரின் நிலை பற்றி சொன்னது:

டூரிஸ்ட் விசாவை எக்ஸ்டெண்ட் பண்ண முடியாது என்று எங்களுக்கு இன்றைக்கு தான் தெரியும். அதுக்காக என்னுடைய நண்பர் பல அலுவலகங்களுக்கு அலைந்து முயற்சி செய்தார். இன்று கடைசியாக குடியுரிமை அலுவலகம் வந்தபோது குடியுரிமை அதிகாரிகளிடம் இதைப் பற்றி நாங்கள் பேசினோம். அவர்கள், எங்க தங்கியிருக்கிற என்று கேட்டார்கள். அதற்கு நான், என் வீட்டில் தான் தங்கி இருக்கிறார் என்று சொன்னேன். பின் அவர்கள் எடக்கு முடுக்காக மாத்தி மாத்தி வாக்குவாதம் வரும் அளவிற்கு கேள்வி கேட்டார்கள்.

குடியுரிமை அதிகாரிகள் செய்த வேலை:

அதுமட்டுமில்லாமல் குடியுரிமை அதிகாரிகள் என்னுடைய நண்பரை ரூமுக்குள் அழைத்து போய் ரொம்பவே துன்புறுத்தி, கீழ்த்தரமாக பேசியிருக்கிறார்கள். எல்லா ஆவணங்களையும் தந்த பிறகு இரண்டு நாட்களுக்குள் எல்லாம் சரி பண்ணித் தருகிறோம் என்றார்கள். ஆனால், அதற்குள்ளே என் நண்பரை அடித்து துன்புறுத்தி கஞ்சா வச்சிருக்கியா? என்றெல்லாம் மிரட்டி இருக்கிறார்கள். தமிழ்நாடு காவல்துறை தான் எங்களுக்கு உதவியது. ஆனால், மத்திய அரசு அதிகாரிகள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? நான் பிரபலமாக இருப்பதால் செய்தியாளர்கள் உதவியுடன் இந்த பிரச்சனையை எதிர்கொண்டேன். ஆனால், சாமானிய மக்களாக இருந்தால் என்ன செய்வார்கள் என்று ஆவேசமாக கூறியிருக்கிறார்.

Advertisement