பென்னி தயாளை கரம்பிடித்து 7 ஆண்டுகளுக்கு பின் – திருமண சீக்ரெட்டை பகிர்ந்த மனைவி. அட, இவங்க தான் அவர் மனைவியா ?

0
1668
- Advertisement -

எங்களின் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க இது தான் காரணம் என்று பென்னி தயாளின் மனைவி பகிர்ந்து இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான பாடகராக திகழ்பவர் பென்னி தயாள். இவர் மேற்கத்திய பாணியில் பாப் இசை பாடுவதில் வல்லவர். இவர் 2002 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து ஹிட் கொடுத்த படங்களில் ஒன்று பாபா. இந்த படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான மாயா மாயா என்ற பாடலை பாடி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பென்னி.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து இவர் ஏ ஆர் ரகுமான் இசையில் பல பாடல்களை பாடி இருக்கிறார். பின் இவர் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜய், சிம்பு போன்ற பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் பாடி இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி, பெங்காலி என பல மொழிகளில் பாடியிருக்கிறார். பின் இவர் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.

- Advertisement -

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி:

விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். பல ஆண்டு காலமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இது ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஒன்பதாவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. மேலும், பென்னி கடைசியாக “தி லெஜெண்ட்” திரைப்படத்தின் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் “வாடி வாசல்” என்ற பாடலை பாடியிருந்தார்.

பென்னி தயாள் குடும்பம்:

இதனிடையே பென்னி தயாள் அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு கேத்ரின் பிலிப் என்ற மாடல் அழகியை திருமணம் செய்து கொண்டார். இவர் நியூயார்க்கில் வசித்து வருகிறார். இவர் குவைத்தில் பிறந்து வளர்ந்தவர். அமெரிக்காவில் இவர் பல்வேறு பேஷன் ஷோ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கூட இவர் ஒரு முறை கலந்து கொண்டிருந்தார். மேலும், சமீபத்தில் கேத்ரின்-பென்னி தயாள் இருவரும் தங்களுடைய திருமண நாளை கொண்டாடி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

கேத்ரின் பதிவு:

இந்நிலையில் தங்களுடைய திருமணம் குறித்து பலரும் அறிந்திடாத சில விஷயங்களை கேத்ரின் பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, திருமணத்திற்கு பிறகு நான் என்னுடைய பெயரை மாற்றிக் கொள்ளவில்லை. காரணம், நாங்கள் இருவரும் வெவ்வேறு நாட்டை சார்ந்தவர்கள். அதனால் என்னுடைய பாஸ்போர்ட், ஓசிஐ கார்டு, சோசியல் செக்யூரிட்டி கார்டு என அனைத்து டாக்குமெண்ட்டுகளையும் மாற்றுவதில் கடினம் இருக்கிறது. என்னுடைய ஒரிஜினல் பெயர் கேத்ரின் பிலிப். பணி நிமித்தம் காரணமாக தான் கேத்ரின் தயாள் என பெயர் வைத்திருக்கிறேன்.

திருமண வாழ்க்கை குறித்து சொன்னது:

எங்களுடைய குடும்ப செலவுகளையும், வீட்டு நிர்வாகத்தையும் நான் தான் பார்த்துக் கொள்கிறேன். பென்னி வேலையில் பிஸியாக இருப்பதால் வீட்டுக்கு தேவையான பொருட்கள், கரண்ட் பில், மளிகை சாமான்கள் வாங்குவது போல அனைத்து வேலைகளையும் நான் தான் செய்கிறேன். இதுதான் எங்களுடைய திருமண வாழ்க்கை சிறப்பாக இருப்பதற்கு காரணம். வேலை காரணமாக நாங்கள் இருவரும் தூரமாக இருப்பதால் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது சில முறை மட்டும் தான் நேரில் பார்க்க முடிகிறது. இது கஷ்டமான விஷயம் அல்ல. நிறைய தியாகம் தேவைப்பட்டாலும் நாங்கள் திருமண பந்தத்தில் வலிமையுடன் தான் இருக்கிறோம். நாங்கள் எங்கள் திருமண வாழ்க்கையில் மென்மேலும் வளர்ந்து எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை காண ஆவலுடன் இருக்கிறோம் என்று கூறி இருக்கிறார்.

Advertisement