இன்னும் யாரும் திருந்தவில்லை.! கேரள மக்களுக்கு சின்மயி செய்த விஷயம்.! நெகிழ்ச்சி சம்பவம்.!

0
594
Chanmayi
- Advertisement -

கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி ஆரம்பித்த மழை, விடாமல் பல நாள்கள் பெய்ததால், மத்திய – வட கேரளப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வருகிறது. அணைகள் அனைத்தும் நிரம்பியதால், 22 அணைகள் திறக்கப்பட்டன. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவருகிறது.

-விளம்பரம்-

Kerala

- Advertisement -

கடந்த 26 ஆண்டுகளுக்குப் பிறகு, முழுக் கொள்ளளவை எட்டிய இடுக்கி அணை திறக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி இன்று(ஆகஸ்ட் 16) காலை நிலவரப்படி 11 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை 70 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் , பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் ஏற்பட்டுள்ள கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு திரைப்பட கலைஞர்கள் எவ்வளவு நிதி அளித்துள்ளார்கள் என்பதை காணலாம்.

-விளம்பரம்-

* ராம் சரண் – 60 லட்சம்

* கமலஹாசன் – 25 லட்சம்

* மம்முட்டி, துல்கர் சல்மான்- ரூ. 25 லட்சம்

* மோகன்லால்- ரூ. 25 லட்சம்

* சூர்யா, கார்த்தி- ரூ. 25 லட்சம்

* அல்லு அர்ஜுன்- ரூ. 25 லட்சம்

* விஷால்- ரூ. 10 லட்சம்

* சிவகார்த்திகேயன்- ரூ. 10 லட்சம்

* விஜய் தேவரகொண்டா- ரூ. 5 லட்சம்

* அனுபமா பரமேஸ்வரன்- ரூ. 1 லட்சம்

chinmayi-sripaada

இவர்களை தொடர்ந்து பிரபல பின்னணி பாடகி சின்மயி தற்போது தெலுங்கு படம் ஒன்றிற்க்கு டப்பிங் பேசி வருவதாகவும், அதன் மூலம் கிடைக்கும் சம்பளம் அனைத்தையும் கேரள முதலமைச்சரிடம் வெள்ள நிவாரண நிதியாக கொடுப்பதாக தெரிவித்திருக்கிறார். இதனால் சினிமா வட்டாரங்கள் இவரை பாராட்டும் வண்ணம் இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, இதே போன்று சில வருடங்களுக்கு முன் சென்னையிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, மீனவர்களை தங்கள் படகுகளுடன் வந்து தண்ணீரில் தவித்த மக்களுக்கு உதவினார், ஆனால் அந்த நன்றி கடனுக்காக, மீனவர்களின் படகுகளை அவர்கள் இடத்திற்கு மீண்டும் கொண்டு சேர்க்கலாம் என்ற எண்ணம் தோன்றவில்லை. இவர்கள் யாரும் திருந்தவில்லை என்ற சோக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் என்னதான் சொன்னாலும், ஏரி குளம் சார்ந்த இடங்களில் வீடு கட்ட வேண்டாம் என கூறினாலும், இவர்கள் அதை கேட்கமாட்டார்கள், என்ற பதிவையும் சேர்த்து இணைத்துள்ளார்.

Advertisement