சிறு வயதில் மறைந்த தன் மகளின் பிறந்தநாளில் பாடகி சித்ரா உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். தமிழ் சினிமாத் துறையில் சின்னக் குயில் சித்ரா என்று சொன்னால் தெரியாதவர் யாரும் இருக்க முடியாது. மனதை வருடும் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார். இவர் பல்வேறு மொழிகளில் 25,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ளார். தனது பாடலுக்காக 6 முறை தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். பாடகி சித்ரா அவர்கள் சினிமா துறைக்குள் நுழைந்து 40 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.
இவருடைய குரலை வைத்தே சித்ரா தான் பாடியிருக்கிறார் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இவருடைய குரல் மிகவும் பரிச்சயம். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, பெங்காலி, ஒரியா, பஞ்சாலி, குஜராத்தி என அனைத்து மொழிகளிலுமே பாடியுள்ளார்.இவரது பாடலுக்கும் இனிமையான குரலுக்கும் இன்றளவும் லட்சக் கணக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
இதையும் பாருங்க : குடும்ப பிரச்சனையால் பிரிகிறார்களா ஆர்யன் – ஷபானா ஜோடி – ஷாபனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா பதிவு.
மகள் நந்தனா :
தன் இனிமையான மிகவும் பிரபலமான சித்ரா அவர்கள் விஜய சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பாடகி சித்ராவிற்கு ஒரே மகள் நந்தனா இருந்தார். சித்ரா அவர்கள் தனது மகளை எந்தவொரு நிகழ்ச்சிக்குச் சென்றாலும் கூடவே அழைத்துச் செல்வார். 2011-ம் ஆண்டு சித்ரா ஏ ஆர் ரஹமான் நிகழ்ச்சி ஒன்றில் பாட துபாய் சென்றிருந்த போது அவரது மகள் நந்தனாவையும் அழைத்து சென்று உள்ளார்.
நீச்சல் குளத்தில் இறந்த மகள் :
அப்போது சித்ரா மகள் நந்தனா நீச்சல் குளத்தில் மூழ்கி அநியாயமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது. தன் ஒரே மகள் இறந்த பிரிவில் இருந்து இன்றளவும் மீள முடியாமல் இருந்து வருகிறார் சித்ரா. சித்ரா சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பல சீசன்களில் நடுவராக பங்கேற்றுள்ளார்.
மகளின் பிறந்தநாள் :
அப்போது குழந்தைகள் பாடும் போது தன் மகளின் நினைவு வந்து பல முறை அழுதுள்ளார் சித்ரா. அதே போல பேட்டி ஒன்றில் பங்கேற்ற சித்ரா, எனக்கு இறைவன் ஒரு பிள்ளையை என்னிடம் இருந்து பிரித்தாளும் எனக்கு 100க்கணக்கான பிள்ளைகளை கொடுத்து இருக்கிறார் என்று உருக்கமாக கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் நேற்று தன் மகளின் பிறந்தநாளை முன்னிட்டு பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
உருக்கமான பதிவு :
அதில் தன் மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘உன் வாழ்க்கை ஒரு ஆசீர்வாதம் உன்னுடைய நினைவுகள் ஒரு பொக்கிஷம் உன் மீது கொண்ட அன்பை வார்த்தைகளால் சொல்ல முடியாது உன்னுடைய பிரிவு அளக்க முடியாதது பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தனா’ என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் சோகக் கடலில் ஆழ்ந்து சித்ராவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.