அழகிய தீயே, சக்கரை நிலவே – 90ஸ் ரசிகர்கள் மறக்க முடியாத  ஹரிஷ் ராகவேந்திரா என்ன ஆனார். அவரின் லேட்டஸ்ட் பேட்டி

0
3278
Harish
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான பாடகராக திகழ்ந்தவர் ஹரிஷ் ராகவேந்திரா. இவர் பாடகர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். தேவதையை கண்டேன், சர்க்கரை நிலவே, மெல்லினமே மெல்லினமே போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை இவர் பாடியிருக்கிறார். அதோடு திருப்பதி படத்தில் அஜித்திற்கு அண்ணன் வேடத்தில் இவர் நடித்திருந்தார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல மொழி படங்களில் பாடியிருக்கிறார்.

-விளம்பரம்-

இவருடைய இசை திறமைக்கு மாநில அரசு விருதுகளும் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஹரிஷ் ராகவேந்திரா பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், தன்னுடைய திரை பயணம் குறித்து கூறியிருந்தது, இந்த மியூசிக் பீல்டுக்கு வந்த புதிதில் இளையராஜா சாருக்கு ரெண்டு வரிகள் ஆவது பாடி காட்டணும் என்பது என்னுடைய கனவாக இருந்தது. இதற்காக நான் பல மாதங்கள் காத்திருந்தேன். அதற்கு பிறகு தான் வாய்ஸ் டெஸ்ட்டுக்காக அவரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.

- Advertisement -

முதன்முறையாக அவரைப் பார்த்து நான் பிரம்மித்து போனேன். இதனால் எனக்குள் நடுக்கம் வந்து வாய்ஸ் டெஸ்டில் சரியாக பாடினேனா என்று கூட எனக்கு தெரியவில்லை. நான் சொல்லி அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டார். நல்ல வாய்ப்பு மிஸ் பண்ணி விட்டேன் என்று நான் வருத்தப்பட்டேன். அதோடு மறுபடியும் அவர் என்னை கூப்பிட வாய்ப்பில்லை என்று நினைத்தேன். ஆனால், நான்கு மாதங்களுக்கு பின்னர் அவரிடம் இருந்து எனக்கு மறுபடியும் அழைப்பு வந்தது. சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக அன்று சரியாக ரெக்கார்டிங் நடக்கவில்லை.

இரண்டாவது முறையும் எனக்கு ஏமாற்றம் கிடைத்தது. பின் மறுபடியும் சில மாதங்கள் கழித்து அவரிடம் இருந்து அழைப்பு வந்தது. பாரதி படத்தில் வரும் நிற்பதுமே நடப்பதுமே என்ற பாடல் ரெக்கார்டிங் சிறப்பாக முடிந்தது. அதேபோல் நடிகர் கவுண்டமணி சார் சினிமாவில் அவமானம் படவில்லை என்றால் பெரிய வெற்றிகள் கிடைக்காது என்று பல இடங்களில் சொல்லியிருக்கிறார். அது போல தான் நான் வாய்ப்புகளை தேடி அலைந்து கொண்டிருந்த போதும் நிறைய அவமானங்களை சந்தித்து இருக்கிறேன். அந்த நேரத்தில் பாடல் ஆசிரியர் நா. முத்துக்குமாரும் என்னுடன் ஒன்றாகவே வாய்ப்பு கேட்டு அலைந்தார்.

-விளம்பரம்-

அவர் எழுதிய பாடல்கள் வெற்றியை கொடுத்திருக்கிறது. காலம் எவ்வளவு மாறினாலும் மெலோடி பாடல்கள் என்றென்றும் நிலைத்து நிற்கும். அந்த வகையில் நிறைய மெலோடி பாடல்களை நான் பாடியிருப்பதை நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது. மேலும், எனக்கு எஸ்பிபி பாலசுப்ரமணியம் சாரின்குரலுக்கு நான் தீவிர வெறி கொண்ட பக்தன். இப்போது என்னை ரொம்ப கவர்ந்த குரல் ஸ்ரேயா கோஷல். சினிமா உலகில் புகழ்பெறுவதும், அதை கடைசி வரையும் தக்க வைப்பதும் சுகமான சுமை தான். மேலும், பவுன்ஸ் ஆன செக்கை எல்லாம் சேமித்து வைக்க நான் ஒரு தனி வீடு தான் வாங்கணும் என்று ஆச்சி மனோரமா விளையாட்டாக சொல்லி இருந்தாங்க.

மனோரமா குறித்து சொன்னது:

அதுபோல தான் என்னிடமும் செல்லாமல் போன செக் நிறைய இருக்கிறது. கலைஞர்களுக்கு இது மாதிரியான ஏமாற்றங்கள் தவிர்க்க முடியாத ஒன்று. மாறிப்போன நிலைமையால் பலருடைய வாழ்க்கையில் பொருளாதார சிரமங்கள் ஏற்பட்டு இருக்கிறது. வாழ்க்கையில் நிறைய நேரத்தில் தடுமாறி நின்றாலும் வலிகளை மறக்க தவறான பழக்க வழக்கங்களை கையாண்டாலும் வாழ்க்கை தடம் மாறிவிடும். அதற்கு இடம் கொடுக்காமல் வடிவேல் சார் சொல்கிற மாதிரி திரிஷா இல்லனா நயன்தாரா என்ற காமெடியாக இலக்கை கெட்டியாக பிடித்துக் கொண்டு ஓட வேண்டும். அப்படித்தான் இப்போது வரைக்கும் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

Advertisement