குடிபோதையில் சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்திய பிரபல பாடகரின் மகன்கள்- தீவிர விசாரணையில் போலீஸ்

0
371
- Advertisement -

பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் மதுபோதையில் சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் கிருபாகரன். இவருக்கு 20 வயதாகிறது. மதுரவாயிலை சேர்ந்தவர் நிதிஷ். இவருக்கு 16 வயது ஆகிறது. இவர்கள் இருவருமே வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் உள்ள கால்பந்து டிரைனிங் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

-விளம்பரம்-

நேற்று இரவு இவர்கள் இருவருமே பயிற்சி முடிந்து வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் அருகே உள்ள உணவகத்தில் சாப்பாடு வாங்க சென்றிருந்தார்கள். அப்போது அங்கிருந்த 5 பேர் கொண்ட கும்பல் கிருபாகரன், நிதிஷ் ஆகிய இருவரிடமும் தகராறு செய்திருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் இருவரையுமே அந்த கும்பல் குடிபோதையில் சரமாரியாக தாக்கி இருக்கிறது. இந்த சண்டையில் கிருபாகரனுக்கு தலையிலும், நிதிஷுக்கு பல இடங்களிலும் காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது .

- Advertisement -

பாடகர் மனோ மகன்கள் செய்தது:

இதை அறிந்த வளசரவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து அந்த கும்பல் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அதோடு இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பின் விசாரணையில் அந்த சிறுவர்களை தாக்கிய ஐந்து பேர் கொண்ட கும்பலில் பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் இருப்பது தெரிய வந்திருக்கிறது.

தலைமறைவான மனோ மகன்கள்:

பாடகர் மனோவின் மகன்கள் ரஃபீக் மற்றும் சாஹிர் என்பது குறிப்பிடத்தக்கது . இதை அடுத்து போலீசார் பாடகர் மனோவின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தி இருக்கிறார்கள். அப்போது ரஃபீக், சாகிர் இருவருமே வீட்டில் இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இரண்டு பேருமே தலைமறைவாக இருப்பதால் அவர்கள் மீது மட்டும் மூன்று பிரிவுகளில் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றார்கள்.

-விளம்பரம்-

தீவிர விசாரணையில் போலீஸ்:

மேலும் , பாடகர் மனோவின் மகன்களுடைய நண்பர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பாடகர் மனோ தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் . தமிழ் சினிமாவில் எண்ணெற்ற பாடல்களை பாடி மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் மனோ.

மனோ குறித்த தகவல்:

இவரை பெரும்பாலும் spbயின் மகன் என்று தான் நினைத்து இருந்தனர். தமிழ் சினிமாவில் பாடகர் மனோ ஃபாஸில் இயக்கத்தில் வந்த பூவிழி வாசலிலே படத்தில் வரும் பாடலின் மூலம் தமிழில் அறிமுகமானார். பிறகு இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் பாடி இருக்கிறார். அதோடு இவர் முதலில் 1970ம் ஆண்டு முதல் தெலுங்கு படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரம் நடித்தார் . அப்படியே இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். தற்போது இவர் சினிமா, இசை நிகழ்ச்சிகள் என்று பிசியாக இருக்கிறார்.

Advertisement