என் மகன்கள் தலைமறைவாகவில்லை, சம்பவம் அன்று இது தான் நடந்தது- கண்ணீருடன் பாடகர் மனோவின் மனைவி சொன்னது

0
288
- Advertisement -

சிறுவர்களை தாக்கிய வழக்கில் பாடகர் மனோவின் மனைவி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது. பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் மதுபோதையில் சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கும் சம்பவம் தான் கடந்த சில தினங்களாக சோசியல் மீடியா முழுவதும் பேசப்பட்டு வருகிறது. சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் கிருபாகரன்(20), மதுரவாயிலை சேர்ந்தவர் நிதிஷ்(16). இவர்கள் இருவருமே வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் உள்ள கால்பந்து டிரைனிங் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

-விளம்பரம்-

சில தினங்களுக்கு முன் இரவு இவர்கள் இருவருமே பயிற்சி முடிந்து வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் அருகே உள்ள உணவகத்தில் சாப்பாடு வாங்க சென்றிருந்தார்கள். அப்போது அங்கிருந்த 5 பேர் கொண்ட கும்பல் கிருபாகரன், நிதிஷ் ஆகிய இருவரிடமும் தகராறு செய்து குடிபோதையில் சரமாரியாக தாக்கி இருக்கிறது. இந்த சண்டையில் கிருபாகரனுக்கு தலையிலும், நிதிஷுக்கு பல இடங்களிலும் காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது. இதை அறிந்த வளசரவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து அந்த கும்பல் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

- Advertisement -

சிறுவர்கள் மீது தாக்குதல்:

அதோடு இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி இருந்தது. பின் விசாரணையில் அந்த சிறுவர்களை தாக்கிய ஐந்து பேர் கொண்ட கும்பலில் பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் ரஃபீக் மற்றும் சாஹிர் இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதை அடுத்து போலீசார் பாடகர் மனோவின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தி இருந்தார்கள். அப்போது ரஃபீக், சாகிர் இருவருமே வீட்டில் இல்லை என்பது தெரிய வந்தது.

பாடகர் மனோ மகன்கள் மீது புகார்:

அதுமட்டுமில்லாமல் இரண்டு பேருமே தலைமறைவாக இருப்பதால் அவர்கள் மீது மட்டும் மூன்று பிரிவுகளில் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றார்கள். மேலும், பாடகர் மனோவின் மகன்களுடைய நண்பர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் மிக பெரிய அளவில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாடகர் மனோவின் மனைவி ஜமீலா பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், என்னுடைய மகன்களைப் பற்றி தவறாக சோசியல் மீடியாவில் சித்தரித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பாடகர் மனோவின் மனைவி பேட்டி:

சம்பவம் நடந்த அன்று என்னுடைய மகன்களும், அவருடைய நண்பர்களும் வீட்டுக்கு வந்திருந்தார்கள். அவர்களை வழியனுப்ப நானும் என்னுடைய மகன்களும் வெளியே சென்றிருந்தோம். அப்போது எங்களை குறுகுறு என்று அந்த சிறுவர்கள் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். அதற்கு என் மகன்கள், ஏன் பார்க்கிறாய்? என்று கேட்டதற்கு, அவர்கள் தகாத வார்த்தையால் பேசி, சினிமாக்காரர்கள் தானே என்றெல்லாம் கேவலமாக பேசி இருந்தார்கள். பின் அந்த சிறுவர்கள் 15-க்கும் அதிகமான பேரை அழைத்து வந்து எங்களை தாக்கினார்கள். அதற்கு பிறகு தான் நாங்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வர வைத்தோம்.

மகன்கள் குறித்து சொன்னது:

பின் என்னுடைய கணவரும் நானும் பிரச்சினையை பெரிதுபடுத்த வேண்டாம் என்று போலீசில் புகார் அளிக்கவில்லை. அதே போல அந்த தாக்குதலில் எனக்கும், என்னுடைய மகன்களுக்கும், அவருடைய நண்பர்களுக்கும் காயம் ஏற்பட்டது. எனக்கு கை முகத்தில் எல்லாம் காயம், மகன்களுக்கும் கை, கால்கள் எல்லாம் காயம் ஏற்பட்டது. ஒரு தாய் உள்ளத்துடன் தான் நான் புகார் அளிக்கவில்லை. என்னுடைய மகன்கள் தலைமறைவாக எல்லாம் இல்லை. என்னுடைய மகன்களைப் பற்றி தவறான செய்திகள் வெளிவருவதால் அவமானத்தில் அவர்கள் வெளியே சென்றிருக்கலாம். தற்போது வரை என்னுடைய மகன்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கடந்த 40 ஆண்டுகளாக சென்னையில் இருக்கிறோம். தேவையற்ற அவதூறுகள் எல்லாம் பரப்ப வேண்டாம். உண்மையைத் தெரிந்து கொண்டு பேசுங்கள் என்று கண்ணீருடன் கூறி இருக்கிறார்.

Advertisement