திருப்பதியில் முடி காணிக்கை கொடுத்துவிட்டு நடக்க முடியாமல் வந்த பாடகி சுசீலா- வைரலாகும் வீடியோ

0
70
- Advertisement -

திருப்பதியில் தன்னுடைய வேண்டுதலை பாடகி சுசிலா நிறைவேற்றி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான பின்னணி பாடகியாக இருந்தவர் சுசிலா. இவர் தென் இந்தியாவின் இசைக்குயில் என்றும் மெல்லிசை அரிசி என்றும் அழைக்கப்படுகிறார்.

-விளம்பரம்-

இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், என பல மொழிகளில் பாடி அசத்திருக்கிறார். இவர் இதுவரை 25 ஆயிரம் பாடலுக்கு மேல் பாடியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவரை பலரும் இசை அரசி, கான கோகிலா, கான சரஸ்வதி என்றெல்லாம் அழைக்கிறார்கள். இவர் 1950 முதல் 1990 வரை காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகியாக இருந்தவர்.

- Advertisement -

சுசிலா திரைப்பயணம்:

மேலும், இவர் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடியிருக்கிறார். அதோடு இவர் உயர்ந்த மனிதன் படத்தில் இடம்பெற்ற ‘பால் போலவே’ என்ற பாடலுக்கு முதன்முறையாக தேசிய விருதை பெற்றிருந்தார். அதுமட்டுமில்லாமல் பாடகிக்கான முதல் தேசிய விருதை வென்ற பாடகி என்ற பெருமையை கொண்டவர் சுசீலா.

சுசிலா குறித்த தகவல்:

இவர் தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார். இவரின் இசைக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும், அந்த காலத்தில் இருந்த முன்னணி நடிகைகள் சாவித்திரி, பத்மினி, சரோஜா தேவி ஆகியோர் பி சுசிலா குரல் தான் வேண்டும் என்று ஆசைபடுவார்களாம். அந்தளவிற்கு உச்சத்தில் இருந்தவர் சுசிலா. பின் வயது மூப்பின் காரணமாக இவர் பாடுவதை நிறுத்தி விட்டார்.

-விளம்பரம்-

சுசிலா வீடியோ:

தற்போது இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வருகிறார். அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் இவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் பி சுசீலா உடைய வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏழுமலையான் கோவிலில் சுசிலா:

அதாவது, சுசிலா அவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தன்னுடைய முடியை காணிக்கையாக செலுத்தி இருக்கிறார். அதனை அடுத்து இவர் ஏழுமலையான் கோவில் வளாகத்தில் நடக்க முடியாமல் இரண்டு பேருடைய துணையுடன் நாராயண மந்திரம் சொல்லி நடந்து கொண்டு வந்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து சுசிலாவின் ரசிகர்கள், நீண்ட ஆயுளோடு அவர் இருக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

Advertisement