நிறைவேறாத குழந்தை ஆசை, முதன் முறையாக பிரசவ வலி குறித்து பேசிய சமந்தா – வைரல் வீடியோ.

0
215
samantha
- Advertisement -

குழந்தை பெற்றுக்கொள்ளும் வலி குறித்து சமந்தா பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழிகளில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து இருந்தார்.

-விளம்பரம்-

பின் சமந்தாவுக்கும், நாகா சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும், இருவரும் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் என பல சர்ச்சைகள் எழுந்த வந்த நிலையில் இருவரும் பிரிவதாக தங்கள் சமூக வலைதளத்தில் அறிவித்து இருந்தனர். இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் சமந்தா அவர்கள் அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தார். ன் இவர் தன்னுடைய தோழியுடன் சேர்ந்து ஆன்மீக சுற்றுலா சென்று இருந்தார்.

- Advertisement -

பிரசவ வலி குறித்து சமந்தா :

தற்போது நடிகை சமந்தா அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சமந்தா பிரசவ வலி குறித்து பேசி இருக்கிறார். இதுகுறித்து பேசியுள்ள அவர் ‘ உண்மையில் பெண்கள் மிகவும் வலிமையானவர்கள். ஆனால் குழந்தை பெற்றுக்கொள்வது மிகவும் வேதனையான ஒரு செயல்முறையாகும். குழந்தை பிரசவத்தின்போது ஆபரேசன் இல்லாமல் டாக்டர் அறையில் குழந்தை பெற்றுக்கொள்வது மிகவும் வேதனையான ஒன்றாகும் என்று பேசியுள்ளார்.

சமந்தாவிற்கு இருந்த குழந்தை ஆசை :

சமந்தாவின் விவாகரத்து விவகாரத்தில் பல விதமான வதந்திகள் எழுந்தது அதிலும் குறிப்பதாக நடிகை சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ள தடை வித்தித்தால் தான் விவகாரத்து ஏற்பட்டது என்றெல்லாம் வதந்திகள் பரவியது என்பது குறிபிடத்தக்கது. ஆனால், சமந்தாவின் விவாகரத்துக்கு பின்னர் ‘சகுந்தலம்’ படத்தின் தயாரிப்பாளர் நீலிமா இந்த ஆண்டு இறுதியில் சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டத்தில் இருந்தார் என்று ஒரு அதிர்ச்சி தகவலை அறிவித்து இருந்தார். இதுகுறித்து பேசிய அவர் ‘சகுந்தலம் படத்திற்காக நானும் என்னுடைய தந்தை குணசேகரும் சமந்தாவை சந்தித்தோம். அவருக்கு சகுந்தலம் படத்தின் கதை மிகவும் பிடித்துவிட்டது.

-விளம்பரம்-

சமந்தாவின் குழந்தை திட்டம் :

ஆனால், படத்தை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க முடியுமா? என்று எங்களிடம் கேட்டார்.நான் ஏன் என்று கேட்டதற்கு சமந்தா அவர்கள் நாங்கள் இந்த ஆண்டு குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டிருக்கிறோம். தாயாக விரும்புவதற்கு தான் முன்னுரிமை நான் அளிப்பேன். குழந்தை பிறந்தால் அது தான் என் உலகம் ஆக இருக்கும் என்று கூறியிருந்தார். அதோடு சகுந்தலம் சரித்திர கதை அம்சத்தை கொண்டது. இதனால் இது முடிவடைய நீண்ட காலம் ஆகும் என்பதால் சமந்தா ஆரம்பத்திலேயே இந்த படத்தில் நடிக்க தயங்கினார்.

நிறைவேறாமல் போன பிளான் :

ஆனால், திட்டமிட்டபடி படத்தை முடித்து விடுவோம் என்று நாங்கள் சொன்ன பிறகு தான் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.இது தான் அவருடைய கடைசி படம் என்றும் அதற்கு பிறகு நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள இருப்பதாகவும் அறிவித்திருந்தார். இதனால் நாங்கள் ஓய்வெடுக்காமல் படத்தை விரைவாக முடிக்க முடிவு செய்தோம் என்று கூறி இருந்தார் நீலிமா .

Advertisement