கோலிவுட்டில் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் தல அஜித். கடந்த ஆண்டு நடிகர் அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் நேர்கொண்ட பார்வை. ஆணாதிக்கம் சிந்தனை கொண்ட சமூகத்துக்கு எதிராக 2016-ம் ஆண்டு இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான “பிங்க்” படத்தை தான் தமிழில் தீரன் பட இயக்குனர் வினோத் “நேர்கொண்ட பார்வை” என்ற பெயரில் படத்தை இயக்கி உள்ளார். மேலும்,இந்த பிங்க் படம் இந்திய அளவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் தான் நேர்கொண்ட பார்வை. மறைந்த நடிகை ஸ்ரீ தேவி கணவர் போனி கபூர் தான் இந்த நேர்கொண்ட பார்வை படத்தின் தயாரிப்பாளர்.
மேலும், இந்த படத்திற்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா டரியங், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்தில் தல அஜித்தின் பெயர் பாரத் சுப்பிரமணி. ஏனென்றால் பாரதியை போல பெண்களுக்காக போராடும் ஒரு புரட்சி நாயகனாக அஜித் இந்த படத்தில் நடித்துள்ளதால் தான் சுப்பிரமணிய பாரதியின் பெயரை அஜித்திற்கு வைத்து உள்ளார்களாம். அதோடு இந்த படத்தில் தல அஜித் அவர்கள் வழக்கறினராக நடித்து உள்ளார். அஜித்துடன் போட்டி போட்டு நடிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே நடித்திருக்கிறார். இது ரங்கராஜ் பாண்டே அவர்களின் முதல் படம் ஆகும்.
இதையும் பாருங்க : என் லவ் ப்ரோபோசலை பிரியா பவானி சங்கர் நிராகரித்தாரா ? எஸ் ஜே சூர்யா விளக்கம்.
மேலும்,இந்த படம் ரசிகர்கள் கொண்டாடும் விதத்திலும் இன்றைய காலகட்டத்துக்கான அழுத்தமான கருத்தை சொன்ன விதத்திலும் உள்ளது. இந்த படத்தில் நாட்டிற்கு தேவையான பல மெசேஜ்களை சொல்லி இருக்கிறார் இயக்குனர். இந்த படம் அதிகமாக கோர்ட் காட்சிகள் தான் கொண்டு உள்ளது. இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டுக் கொடுத்து பிளாக் பஸ்டர் அடித்தது. இந்நிலையில் நேர்கொண்டபார்வை படத்தில் அஜித்துடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் எதிர் தரப்பு வக்கீலாக டிவி நியூஸ் சேனலில் பிரபலமான ரங்கராஜ் பாண்டே நடித்திருப்பார்
ரங்கராஜ் பாண்டே அவர்கள் 2012 இல் தந்தி டிவி தொடங்கியபோது அதன் தலைமை செய்தி ஆசிரியராக நியமிக்கப்பட்டார். குறுகிய காலத்தில் மிக பிரபலமான ஊடகவியலாளராக உருவெடுத்தார். தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலின்போது பிரதமர் மோடியையும் பேட்டி எடுத்து உள்ளார். சில மாதங்களுக்கு முன்பு ரங்கராஜ் பாண்டே பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அவர் மீது குற்றச்சாட்டு எழுந்ததாகவும் கூறப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் மீண்டும் தந்தி டிவி யில் சேர்க்கப்பட்டதாகவும் செய்தி வெளியாகியது.
பின் ரங்கராஜ் பாண்டே தலைமை செய்தியாசிரியர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் ரங்கராஜ் பாண்டே அவர்கள் தற்போது சினிமா உலகிலும் காலடி எடுத்து வைத்து உள்ளார்.நேர்கொண்ட பார்வை படத்தில் இவருடைய காட்சிகள் எல்லாம் பாராட்ட கூடிய வகையில் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார். அதில் இவருக்கு சிறந்த வில்லன் நடிகருக்கான விருதை இவர் பெற்றார். இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நன்றியையும் தெரிவித்து உள்ளார்.