தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளிவந்த படம் ‘விடா முயற்சி’.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தைபெற்றது. இந்த படம் மொத்தமாக 150 கோடி வரை வசூல் செய்து இருக்கிறது. தற்போது நடிகர் அஜித் அவர்கள் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் உடைய தீவிர ரசிகர். குட் பேட் அக்லி படத்தை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது.
குட் பேட் அக்லி படம்:
இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பல அர்ஜுன் நடித்திருக்கிறார்கள். சில தினங்களுக்கு முன் வெளியான இந்த படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும், இந்த படத்தில் இடம்பெற்ற தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்த இந்தப் பாடல் கடந்த 1999 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் வெளிவந்த எதிரும் புதிரும் படத்தில் இடம்பெற்றது. இந்த படத்தில் டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரமும் சிம்ரனும் சூப்பராக நடன மாதிரி இருப்பார்கள். அப்போதே இந்த பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது.
புஷ்பவனம் குப்புசாமி பேட்டி:
தற்போது மீண்டும் குட் பேட் அக்லி படத்தில் டிரெண்டிங் ஆகிக் கொண்டிருக்கிறது. சிம்ரனுக்கு பதிலாக இந்த பாடலில் பிரியா வாரியர் நடனம் மாறி இருக்கிறார். இந்நிலையில் இந்த பாடலை பாடிய நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி அளித்த பேட்டியில் , நான் பாடிய பாடல்களில் எனக்கு ரொம்ப பிடித்தது தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடல் தான். இது நான் சினிமா துறைக்கு வந்த ஆரம்பத்தில் பாடிய இரண்டாவது பாடல். எதிரும் புதிரும் படத்தில் வித்தியாசாகர் சார் மியூசிக்கில் காத்து பச பச பாடலை தொடர்ந்து இந்த பாடலை பாடியிருந்தேன். அப்பவே அந்த பாடல் பெரிய ஹிட்.
பாடல் பற்றி சொன்னது:
அதற்கு பிறகு தான் தொடர்ந்து வாய்ப்புகள் எனக்கு வந்தது. கச்சேரிகளிலும் இந்த பாட்டை நிறைய பேர் பாட சொல்லி கேட்பார்கள். நாட்டுப்புறப் பாடகரான என்னால் ஸ்டைலிஷ் பாடலை பாட முடியும் என்று நம்பிக்கை கொடுத்தது. தரணி சாருக்கும் வித்யாசாகர் சாருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தரணி சார்தான் வித்யாசாகர் சாருக்கு என்னை ரெகமெண்ட் பண்ணி அனுப்பினார். நான் சினிமாவிற்கு வந்த புதிதில் பாடவே பயமாக இருந்தது.
வித்யாசாகர் சார் தான் என்கரேஜ் பண்ணி என்னை பாட வைத்தார். நான் பாடினேன் என்பதை விட வித்தியாசாகர் அற்புதமாக இசையமைத்தார். தொட்டு தொட்டு பேசும் சுல்தானா எல்லோருடைய மனதையுமே தொட்டுப்பேசி ஹிட்டாகி கொடுத்தது. எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் எதிரும் புதிரும் ரிலீஸ் ஆகி 25 கழித்து இப்போது ட்ரெண்டிங்க்கு ஏற்ப ரிதம் போட்டு இருந்தார்.
அஜித் பற்றி சொன்னது:
அதனால் எல்லா பெருமையும் வித்யாசாகர் சாருக்கு தான் போய் சேரும். நான் இன்னும் குட் பேட் அக்லி படம் பார்க்கவில்லை. இனிமேல் குடும்பத்தோடு போய் பார்க்கலாம் என்று இருக்கிறேன். அஜித் சார் எனக்கு ரொம்ப பிடிக்கும். ரொம்ப தன்னடக்கமானவர். ஏற்கனவே நான் அவருக்கு ரெண்டு பாடல்களை பாடி இருக்கேன். இப்ப மூனாவதாக அவரோட படத்தில் நான் பாடின பாட்டு வருவது நினைத்தால் சந்தோசமாக இருக்கிறது. இது ஒரு பெரிய பாக்கியமாக நினைக்கிறேன். அவரை மீட் பண்ணணும் என்பது எனக்கு ரொம்ப நாள் ஆசை. ஆனால், அதற்கான சூழல் அமையவில்லை. அஜித் என்றால் தல, அவருக்கு இணை இல, புகழின் உச்சத்தில் இருந்தாலும் தலைகணமே இல்லாதவர். அவரை பார்ப்பதற்கு எப்போது கிடைக்கும் அவரது தல. இது நான் அவருக்காக எப்போதும் சொல்வது, அவருக்காக காத்திருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.