தன்னைப் பற்றிய நெகடிவ் விமர்சனங்களுக்கு பாடகர் சத்யன் மகாலிங்கம் கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாக சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்கே இசைக் கச்சேரியில் ரோஜா ரோஜா என்ற பாடலை அசால்டாக பாடி இருந்த பாடகர் சத்யன் மகாலிங்கம் பற்றி தான். இவருக்கு சின்ன வயதில் இருந்து இசையில் ஆர்வம் கொண்டவர். 15 வயதிலேயே இவர் இசைக் குழுவில் சேர்ந்து கொண்டு பாடி வருகிறார். கிட்டத்தட்ட 2,500 க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சியில் பாடி இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=65UfRmVtb2Q
பின் இவர் வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்ற படத்தில் இடம்பெற்ற கலக்கப்போவது யாரு என்ற பாடலின் மூலம் பின்னணி பாடகராக சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சரோஜா படத்தில் தோஸ்த், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் பாஸு பாஸு, கழுகு படத்தில் ஆம்பளைக்கும் பொம்பளைக்கும், மாற்றான் படத்தில் தீய தீயே உட்பட 200-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார். இருந்தாலும் இவருக்கு பெரிதாக சினிமாவில் வாய்ப்பு அடையவில்லை. இவர் தொடர்ந்து தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டுதான் வருகிறார்.
சத்யன் மகாலிங்கம் குறித்த தகவல்:
இப்படி இருக்கும் நிலையில் சத்யன் மகாலிங்கம் 26 வருடங்களுக்கு முன்பு ஒரு இசை குழுவில் பாடி இருந்த ரோஜா ரோஜா என்ற பாடல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதை பார்த்த பலருமே இவரை பற்றி சோசியல் மீடியாவில் தேட ஆரம்பித்தார்கள். பின் இது தொடர்பாக பாடகர் சத்யன் மகாலிங்கம், 26 வருடங்களுக்கு பிறகு எனக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைத்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. பாதம் தொட்ட நன்றிகள் என்றெல்லாம் எமோஷனாக பேசி இருந்தார்.

சத்யன் சர்ச்சை:
அதன் பின் இவர் பல்வேறு சேனல் தளத்திற்கு பேட்டி அளித்து இருக்கிறார். அதில் அவர், சினிமா வாய்ப்புகள் மறுக்கப்பட்டதை எமோஷனலாக பேசி இருந்தார். அதன் பின் தற்போது இருக்கும் இசையமைப்பாளர்கள் மீண்டும் பாடகர் சத்யன் மகாலிங்கத்திற்கு வாய்ப்புகள் தர வேண்டும் என்றெல்லாம் கூறி வருகிறார்கள். அதோடு சத்யன் பாடிய பழைய பாடல்களெல்லாம் தேடி சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள். இதற்கிடையில் பாடகர் சத்யனை பற்றி சில நெகட்டிவ்வான விமர்சனங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
சத்யன் பதிலடி:
இந்நிலையில் இது தொடர்பாக பாடகர் சத்யன், என் மீது அக்கறையுள்ள ரசிகர்களுக்கு நன்றி. உள்ளதை உள்ளபடி சில ஊடகங்கள் வெளியிடுகிறது. ஆனால், சில மீடியாக்கள் அவர்களுடைய சுயநலத்திற்கான தவறான தகவல்களையும் செய்திகளையும் பரப்புகிறார்கள். நான் சொல்லாததை எல்லாம் சொன்னதாக வதந்திகள் பரப்புகிறார்கள். இது இத்தனை ஆண்டு காலம் உழைத்து முன்னேறிய ஒருவனை குழி தோண்டி புதைப்பது மாதிரி இருக்கிறது. தயவுசெய்து இதை செய்யாதீர்கள். நல்ல விஷயங்களுக்கு காலம் எடுக்கும். ஆனால், கெட்டவை உடனே பரவும். ஆகவே அடிப்படை அறத்துடன் நடந்து கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.






