பப்பில் சித் ஸ்ரீராம் மீது பாட்டில்களை எறிந்துள்ள நபர்கள். கடுப்பாகி எச்சரித்த சித் – வைரலாகும் வீடியோ. இவருக்கா இந்த நிலை.

0
2224
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகராக திகழ்ந்துவருபவர் பாடகர் சித் ஸ்ரீராம். சென்னையில் பிறந்த இவர், 1991ஆம் ஆண்டு குடும்பத்துடன் கலிபோர்னியாவின் பே ஏரியாவில் குடியேறினார். தன்னுடைய 3ஆவது வயதில் தாயிடம் கர்நாடக இசையை சிறுது சிறிதாக கற்க ஆரம்பித்து, பின்பு 2001ஆம் ஆண்டு தன்னுடைய 11 வயதில் முழு முயற்சியுடன் கர்நாடக இசை கற்க துவங்கினார். 2010 ஆண்டு சொந்தமாக இசை எழுதி இயக்கி அதை youtube மூலமாக வெளியிட்டு வந்தார். கல்லூரிக்கு பிறகு சென்னைக்கு வருவதையும் மார்கழி மாத உற்சவத்தில் பங்கேற்பதையும் வழக்கமாக்கி கொண்டார்.

-விளம்பரம்-

இவருக்கும் சினிமாவில் பாடும் வாய்ப்பு கொடுத்தது இசைப்புயல் தான். மணிரத்னம் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாக அறிமுகமான ‘அடியே அடியே பாடல் தான்’ இவரது முதல் பாடல். அந்த பாடலுக்கு பின் இவர் எண்ணெற்ற பாடல்களை பாடி இருக்கிறார் அது அனைத்துமே படு ஹிட் தான். தமிழ் மட்டுமல்லாது தெலுகு, கன்னடம், மலையாளம் என்று பல மொழிகளில் பாடி வருகிறார்.

இதையும் பாருங்க : வினையான விளையாட்டு, கையில் மாவுக்கட்டு. என்ன ஆச்சி ஜெனிலியாவிற்கு. இதோ அந்த சோகமான வீடியோ.

- Advertisement -

அது மட்டுமல்லாமல் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பாடி வரும் சித், கடந்த 6 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ‘sunburn super club’ என்ற கிளப்பில் பாடி இருந்தார். இந்த நிகழ்ச்சியின் போது சித் ஸ்ரீராம் பாடிக்கண்டு இருக்கும் போது போதையில் இருந்த சில இளைஞர்கள் மதுவை ஊற்றியுள்ளனர். மேலும், மது பாட்டில்களையும் எறிந்துள்ளனர். இதனால் கடுப்பான சித் ஸ்ரீராம் அந்த இளைஞர்களை வெளியேற சொல்லி இருக்கிறார்.

மேலும், அவர்கள் வெளியேறாவிட்டால் நான் பாடப் போவது இல்லை என்றும் கூறினார் சித் ஸ்ரீராம். இந்த விவாகரத்திற்கு பின்னர் சித் ஸ்ரீராம் போலீசிடம் புகார் அளிக்க போவதாக கூறியதாக கூறப்படுகிறது. ஆனால், கிளப் நிர்வாகிகளோ இங்கே பல்வேறு பிரபலங்கள் பாடி இருக்கிறார்கள். நீங்கள் போலீசை வரவைத்தால் பிரச்சனை ஆகிவிடும். இதனால் இந்த பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால் சித் ஸ்ரீராமும் இந்த பிரச்சனையை விட்டுவிட்டாராம்.

-விளம்பரம்-
Advertisement