வினையான விளையாட்டு, கையில் மாவுக்கட்டு. என்ன ஆச்சி ஜெனிலியாவிற்கு. இதோ அந்த சோகமான வீடியோ.

0
756
genelia
- Advertisement -

தமிழில் 2003 ஆண்டு இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியானது பாய்ஸ் படம். இந்த படத்தில் பல புது முக நடிகர்களை இயக்குனர் ஷங்கர் அறிமுகம் செய்தார். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாகியாக ஜெனிலியா என்ற புதுமுகத்தையும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தார் ஷங்கர். இந்த படத்திற்கு பின்னர் இவர் தமிழில் நடித்த சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற படங்களில் இவரது சுட்டி தனமான நடிப்பிற்கு பல ரசிகர்கள் உருவாகின. தமிழ் படங்களை தவிர ஹிந்தி, தெலுங்கு,கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

இவர் தனது முதல் ஹிந்தி படத்தில் நடித்த போதே இந்தி நடிகர் ரிதீஸ் தேஸ்முக் உடன் நெருக்கம் ஏற்பட்டது.பின்னர் இவர்கள் இருவரரின் காதலும் 2012 ஆண்டு திருமணத்தில் முடிந்தது. பின்னர் இவர்களுக்கு 2014 ஆம் ஆண்டு ரியான் என்ற மகனும், 2016 ஆம் ஆண்டு ராய்ல் என்று மகனும் பிறந்தார்கள். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வந்தார் ஜெனிலியா.

இதையும் பாருங்க : இன்னிக்கு, இது என் பொண்ணு. சென்னையில பெரிய செலிப்பிரிடீன்னு சொல்றாங்க. மேடையில் அடிச்சிவிட்ட ஜூலி.

- Advertisement -

இறுதியாக கடந்த ஆண்டு வெளியான ‘Its My life ‘ என்ற படத்தில் நடித்திருந்தார். இரண்டு குழந்தைக்கு தாயானாலும் இன்னும் அதே இளமையுடன் இருந்து வரும் ஜெனிலியா, தற்போதும் தனது சுட்டித்தனத்தை இழக்காமல் இருந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இவர் சமீபத்தில் ஸ்கேட்டிங் செய்த போது விழுந்து வாரி கை எலும்பை முறித்துக்கொண்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுளளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அந்த பதிவியில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நான் ஸ்கேட்டிங் கற்றுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். காரணம் என்னுடைய குழந்தைகளுக்கு நான் கம்பெனியாக இருக்கலாம் என்று எண்ணினேன். அப்போது ஏற்பட்டது தான் இந்த சம்பவம். இன்ஸ்டாகிராமில் சக்சஸ் ஸ்டோரி மட்டும் தான் போடவேண்டுமா என்ன. ஒரு சில நேரங்களில் பறப்பதற்கு முன்னாள் நீங்கள் விழலாம், அதிலிருந்து எப்படி எழுகிறீர்கள் என்பது தான் முக்கியம். நான் வெற்றி பெறும் வரை முயற்சி செய்வேன் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement