இசைக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது..!பேட்ட படத்தின் இசை விழாவை விமர்சித்த பிரபல பாடகர்?

0
670
pettaaudio
- Advertisement -

2.0 படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர்–நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் ரஜினியை பாராட்டி பேசினார்கள். 

-விளம்பரம்-

இந்த நிலையில் பேட்ட படவிழா குறித்து பின்னணி பாடகர் சீனிவாஸ் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு ரஜினிகாந்தை விமர்சித்ததாக சர்ச்சைகள் கிளம்பின. ‘‘இசை வெளியீட்டு விழாக்களில் இப்போதெல்லாம் இசைக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது’’ என்று அவர் பதிவிட்டு இருந்தார். 

- Advertisement -

பேட்ட விழாவில் ரஜினியை மற்றவர்கள் பாராட்டி பேசியதைத்தான் மறைமுகமாக அவர் விமர்சித்து இருப்பதாக கருதி ரசிகர்கள் கண்டித்தனர். இதனால் சமூக வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தனது கருத்துக்கு சீனிவாஸ் மீண்டும் டுவிட்டரில் விளக்கம் அளித்தார். 

அதில் அவர் கூறும்போது, ‘‘நான் பேட்ட படம் பற்றி எதுவும் பேசவில்லை. ரஜினி படம் என்றால் ரஜினி மட்டுமே கவனத்தை ஈர்ப்பவராக இருப்பார். அதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனாலும் இசை வெளியீட்டு விழாக்கள் என்பது இசை மற்றும் இசைக்கலைஞர்களை பற்றியதாக இருக்க வேண்டும். அந்த வகையில் கவுதம் மேனனின் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படம்தான் முறையாக நடந்த கடைசி இசை வெளியீட்டு விழா’’ என்றார். சீனிவாஸ் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளன

-விளம்பரம்-
Advertisement