2 தேசிய விருது பெற்ற சூர்யா படம் குறித்து விமர்சனம் செய்த பிரசாந்த் – முட்டாள் என்று திட்டிவிட்டு பதிவை நீக்கிய ஸ்ரீனிவாஸ்.

0
109
srinivas
- Advertisement -

ஒரு திரைப்படம் வெளியாகி ஒருவாரம் கழித்து தான் அந்த திரைப்படம் எப்படி உள்ளது சூப்பரா, சுமாரா என்ற விமர்சனத்தை நாளிதழ்களிலும், தொலைக்காட்சியிலும் வெளியிடுவார்கள். இதனால் ரசிங்கர்கள் வார கணக்கில் காத்திருக்க வேண்டும். ஆனால், தற்போது ஒரு திரைப்படம் வெளிவந்து ஒரு சில மணி நேரத்திலேயே அந்த படம் எப்படி உள்ளது என்ற விமர்சனத்தை யூடுயூப் என்ற சோசியல் மீடியா மூலம் தெரிந்து கொண்டு விடுகின்றனர். மேலும், படங்களை விமர்சித்து அது குறித்த தகவல்களை சமூக வலைத்தளங்களில் ஒளிபரப்பு செய்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இதை பல்வேறு நபர்கள் செய்து வருகிறார்கள். அதில் சில பேர் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் ப்ளூ சட்டைக்கு பின்னர் தமிழ் விமர்சகர்களின் சமூக வலைத்தளங்களில் பிரபலமானர் என்று பார்த்தால் படங்களை விமர்ச்சிக்கும் “பிரசாந்த் ரங்கசாமி” தான்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் சூர்யா நடிப்பில் வெளியான ’24’ படத்தை பிரசாந்த் விமர்சனம் செய்த வீடியோ சமீபத்தில் வைரலானது. இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து, தயாரித்த படம் 24. இந்த படம் 2016 ஆம் ஆண்டு திரையரங்களில் வெளியானது. இந்த படத்தில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன், சரண்யா பொன்வண்ணன், சத்யன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் டைம் டிராவல் கதையை மையமாகக் கொண்டது. இந்த படத்தில் நடிகர் சூர்யா அவர்கள் மூன்று வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் சூர்யாவின் நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல பாராட்டைப் பெற்று தந்தது.

- Advertisement -

அதுமட்டும் இல்லாமல் இந்த படம் 2 தேசிய விருதைத் தட்டிச் சென்றது. இந்நிலையில் இந்த 24 படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து இயக்குனர் விக்ரம் குமார் இடம் கேட்டபோது அவர் கூறியது, முதலில் நான் தெலுங்கில் வெளியான மனம் படத்தை தான் சூர்யாவை வைத்து இயக்குவதாக இருந்தேன். அதற்கு பிறகு என்னிடம் இருந்த 24 படத்தின் கதையை அவரிடம் சொன்ன போது இந்த படம் எடுக்கலாம் என்று சூர்யா சொன்னார்.

மேலும், பெரிய பட்ஜெட் படம் என்பதால் சூர்யாவே படத்தை தயாரித்தார். நாங்கள் எதிர்பார்த்ததை விட நன்முறையில் இந்த படம் வெளியே வந்தது. இந்த படத்திற்காக சூர்யா நிறைய ஒத்துழைப்பு கொடுத்தார். அவருடன் பணி புரிந்ததை என்னால் மறக்கவே முடியாது. அந்த அளவிற்கு சூர்யா கடின உழைப்பாளி. மேலும், 24 படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் பிளான் ரொம்ப நாளாவே இருக்கு. அதற்க்கான கதையும் எழுதிகொண்டு இருக்கிறேன் என்றும் கூறி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் சூர்யாவின் நடிப்பை தாண்டி படத்திற்கு மிகவும் பக்க பலமாக இருந்தது ஏ ஆர் ரஹ்மானின் இசை தான். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை விமர்சனம் செய்துள்ள பிரசாந்த், இந்த படத்தின் இசையை கேலி செய்யும் வகையில் பேசி இருந்தார். அந்த குறிப்பிட்ட வீடியோவை ட்விட்டரில் நெட்டிசன் ஒருவர் பகிர்ந்து இருந்தார். அதில் இந்த வீடியோவை கண்ட பின்னர் தான் பிரசாந்தின் விமர்சனத்தை பார்ப்பதையே நிறுத்திவிட்டேன் என்று கூறி இருக்கிறார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவ இந்த வீடியோவை கண்டு பிரபல பின்னணி பாடகரான ஸ்ரீநிவாஸ் இந்த வீடியோவிற்கு கமன்ட் செய்து இருந்தார். அதில் ‘இவர் படங்களை எந்த அளவிற்கு தரமாக விமர்சனம் செய்வார் என்பது எனக்கு தெரியாது. ஆனால், இசை என்று வரும் போது கண்டிப்பாக இவன் ஒரு முட்டாள். அதற்கு இதான் சான்று.’என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால், அந்த பதிவை உடனே நீக்கிவிட்டார்.

Advertisement