‘மகாராஜா’ படம் குறித்து பாடகர் ஸ்ரீனிவாஸ் போட்ட பதிவுதான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில் விஜய் சேதுபதியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தான் ‘மகாராஜா’. இது இவரின் 50வது படம். இந்தப் படத்தை இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கியிருக்கிறார்.
மேலும், இப்படத்தில் மம்தா மோகன் தாஸ், முனிஷ் காந்த், சிங்கம் புலி, அனுராக் காஷ்யப், அபிராமி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது மட்டுமில்லாமல் நல்ல வசூல் சாதனையும் செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி மகாராஜா படம் Netflix ல் வெளியாகி இருந்தது. ஓடிடி யில் மீண்டும் மகாராஜா படத்தை மக்கள் கொண்டாடி இருந்தார்கள்.
ஸ்ரீநிவாஸ் பதிவு:
இந்நிலையில் சமீபத்தில் பாடகர் ஸ்ரீநிவாஸ் மகாராஜா படம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில், Netflix தளத்தில் மகாராஜா படத்தைப் பார்த்தேன். இது விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம். விஜய் சேதுபதி அவரின் கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார். ஆனால், இந்தப் படத்தின் ஹீரோ இயக்குனர் தான் என்று சொல்வேன். மேலும், படத்தில் இசை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். ஆனால் பரவாயில்லை படம் அனைவரையும் கவர்கிறது என்று பதிவிட்டு இருந்தார்.
இணையவாசிகள் கருத்து:
பாடகர் ஸ்ரீனிவாஸின் பதிவைப் பார்த்த இணையவாசிகள், மகாராஜாவின் இசையமைப்பாளர் வேறு யாருமில்லை, ‘காந்தாரா’ படத்தின் மூலம் மிகப் பெரிய ஹிட் பாடல்களை கொடுத்த அஜனீஷ் லோக்நாத் தான். ஒரு பிரபல பாடகராக இருந்து கொண்டு, மிகப்பெரிய இசை அமைப்பாளர் குறித்து இதுபோல் பதிவிடுவது தவறு என்று பாடகர் ஸ்ரீனிவாஷை தங்களது கமெண்ட்களில் வறுத்தெடுத்து இருந்தனர்.
ஸ்ரீநிவாஸ் விளக்கம்:
அதை தொடர்ந்து பாடகர் ஸ்ரீநிவாஸ், நான் மகாராஜா படத்தின் இசையமைப்பாளர் பெயரை கூகுள் செய்து பார்த்து இருக்க வேண்டும். அது என்னுடைய தவறுதான். அஜனீஷ் ஒரு திறமையான இசையமைப்பாளர் தான். ஆனால், மகாராஜா படத்தில் இவரின் இசை என்னை பாதிக்கவில்லை. நான் ஒரு இசை ரசிகன், அதனால் சிறந்த இசையை உருவாக்கும் இளைஞர்களை எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
வருத்தப்பட்ட ஸ்ரீ நிவாஸ் :
மேலும், காந்தாராவில் அஐனீஷின் இசை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காந்தாரா குறித்து கூட நான் பதிவிட்டுருந்தேன். அதேபோல், ஒரு சில படங்களில் இயக்குனர்களை இசையின் மூலம் திருப்தி படுத்துவது எளிதல்ல. ஆனால, இறுதிவரை இப்படம் வன்முறையாக இருந்தாலும் பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. இதற்காக நான் அஜனீஷிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று பதில் அளித்துள்ளார். தற்போது இந்த செய்தி தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.