தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமாரிடம் பாடகி சுசித்ரா மன்னிப்பு கேட்டு போட்டிருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சுசித்ரா கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய சினிமாவில் பாடகியாக பயணித்து வருகிறார். இதற்கிடையே இவர் நடிகர் கார்த்திக் குமாரை 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து 12 ஆண்டுகள் ஒன்றாக தான் வாழ்ந்து வந்தார்கள். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள்.
மேலும், கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத், சஞ்சித் செட்டி, கார்த்திக் குமார் போன்ற பல பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை ‘சுச்சி லீக்ஸ்’ என்ற பெயரில் வெளியாக்கி பரப்பரப்பை ஏற்படுத்தி இருந்தார் சுசித்ரா. இது குறித்து பலருமே விமர்சித்து இருந்தார்கள். இருந்தாலும், தன் தரப்பு நியாயத்தை சுசித்ரா கூறியிருந்தார். இதனால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது நாம் அனைவரும் அறிந்ததே.
சுசித்ரா பேட்டி:
மேலும், கடந்த சில மாதங்களாக பாடகி சுசித்ரா அளித்து இருக்கும் பேட்டிதான் இணையத்தில் சர்ச்சையாகிஇருந்தது. குறிப்பாக இவர், என்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பணத்தை கொடுத்து என்னைப் பற்றி தவறாக பேசி வருகிறார். அவரும் தனுஷும் சேர்ந்து குடித்துவிட்டு ஒரு அறைக்குள் செல்வதை நான் பார்த்தேன். அந்த அறைக்குள் அவர்கள் சென்றால் என்ன செய்வார்கள் என்று எனக்கு தெரியும். அதேபோல், திருமணம் ஆகி இரண்டு வருடத்திலேயே என்னுடைய கணவர் ஓரினச் சேர்க்கையாளர் என்பது எனக்கு தெரிந்தது விட்டது என்று கூறியிருந்தார்.
கார்த்திக் குமார் எடுத்த நடவடிக்கை:
அதனைத் தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்பு நடிகர் கார்த்திக் குமார், சுசித்ரா மீது தன்னைப் பற்றி அவதூறாக பேசுவதற்காக மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், நான் ஒரு ஓரினச் சேர்க்கையாளராக இருந்தேன் என்றால் நிச்சயம் அதை பொதுவெளியில் வெளிப்படையாக சொல்வேன். அது சொல்வதற்கு எனக்கு எந்த கூச்சமும் கிடையாது என்று சுசித்ராவுக்கு பதிலடியும் கொடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது பாடகி சுசித்ரா தனது யூடியூப் சேனலில் மன்னிப்பு வீடியோ ஒன்று பகிர்ந்துள்ளார்.
சுசித்ரா வீடியோ:
அதில், இந்த மன்னிப்பு வீடியோவை பட்டினப்பாக்கம் போலீஸ் சொன்னதால் போடுகிறேன். பட்டினப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் கார்த்திக் குமார், நான் அவரை பேட்டிகளில் ஓரினச் சேர்க்கையாளர் என்று கூறியதற்காக என் மீது கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்காரு. மேலும், நான் அவரிடம் பப்ளிக்காகவும், மின்னஞ்சல் மூலமாகவும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்.பின், நிறைய நாளாக உன்கிட்ட கேட்டுட்டு இருக்கோம் ஆனால், மன்னிப்பை கேட்க மாட்டேங்கிற உன்னை தூக்கி உள்ளே வச்சுடுவேன் என்று பட்டினப்பாக்கம் எஸ்ஐ விஜயலட்சுமி மிரட்டுகிறார்கள்.
சுசித்ரா கேட்ட மன்னிப்பு:
அதனால், உங்களை ஓரினச்சேர்க்கையாளர் என்று சொன்னதுக்காக என்னை மன்னித்து விடுங்கள் கார்த்திக் குமார். அதை நான் இப்போது மாற்றி உலகத்திலே ஒரே ஆம்பளை நீங்கதான் என்று சொல்ல விரும்புகிறேன். மேலும் நான் உங்களை அப்படி சொன்னதால் உங்கள் தொழில் பாதிக்கப்படுகிறது என்று சொல்கிறார்கள், இப்போ நான் மன்னிப்பு கேட்டதால் உங்களுக்கு நிறைய படங்கள் வரும் என்று நினைக்கிறேன்.
புது மனைவி மீது கவனம் செலுத்த வேண்டும் :
மேலும், கார்த்திக் குமாரின் கேரியர் எப்படி இருக்கிறது என்று அவர் பண்ணும் காமெடி ஷோக்களின் ரெவியூகளை பார்த்தாலே தெரியும். ஆனால், நான் கொடுத்த பேட்டியால் அவர் கேரியர் போய்விட்டது என்று சொல்வதைப் பார்த்தால் எனக்கு கார்த்திக் குமார் நிறைய மதிப்பு கொடுக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் அவருடைய புது வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இதே மாதிரி மின்னஞ்சல் ஒன்றும் அனுப்பிவிடுகிறேன் என்று தனது ஸ்டைலில் மன்னிப்பு கேட்டு உள்ளார் சுசித்ரா.
Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.