ஜெயம் ரவி- ஆர்த்தி விவகாரம் குறித்து பாடகி சுசித்ரா வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே கோலிவுடில் பிரபலமான ஜோடிகளின் விவாகரத்து குறித்த செய்தி தான் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சி கொடுத்திருக்கிறது. சமந்தா- நாக சைதன்யா, தனுஷ்- ஐஸ்வர்யாவை தொடர்ந்து சமீபத்தில் ஜிவி பிரகாஷ்- சைந்தவி விவாகரத்து பெறுவதாக அறிவித்திருந்தார்கள். இந்த விவகாரம் முடிவதற்குள் பிரபல நடிகர் ஜெயம் ரவி-ஆர்த்தி இருவரும் பிரிய இருப்பதாக வந்திருக்கும் செய்தி தான் தற்போது ரசிகர்களுக்கு பேரடியாக இருக்கிறது.
தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் ஆர்த்தி என்பவரை காதலித்து 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதில் இவருடைய மூத்த மகன் ஆரவ் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி இருந்த ‘டிக் டிக் டிக்’ என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும், ஜெயம் ரவி தன்னுடைய குடும்பத்துடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. அதோடு தமிழ் சினிமாவில் சிறந்த ஜோடிகளாக ஜெயம் ரவி- ஆர்த்தி திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஜெயம் ரவி- ஆர்த்தி சர்ச்சை:
சமீபத்தில் நடந்த பேட்டியில் ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தி குறித்து பெருமையாக பேசி இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் ஜெயம் ரவி- ஆர்த்தி இருவரும் பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதற்குக் காரணம் ஆர்த்தி பயோவில் இருக்கும் தன்னுடைய கணவருடைய ஐடியை நீக்கி இருக்கிறார். அதேபோல், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து ஜெயம் ரவியுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை அனைத்தும் நீக்கி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இன்னொரு பக்கம், ஜெயம் ரவி ஆர்த்தியின் பிரிவிற்கு பல காரணங்களை சோசியல் மீடியாவில் கூறிக் கொண்டு வருகிறார்கள்.
பிரிவுக்கு காரணம்:
அந்த வகையில் ஜெயம் ரவியின் உடைய அடுத்த படத்தை அவருடைய மாமியார் சுஜாதா தான் தயாரிக்க இருப்பதாக இருந்தது. அதற்காக ஜெயம் ரவி, அவரிடம் 25 கோடி கேட்டதாகவும் அதற்கு சுஜாதா தர மறுத்திருக்கிறாராம். இதனால் ஆர்த்திக்கும் ஜெயம் ரவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டிருக்கிறது. அதே சமயம் ஆர்த்தியின் அம்மா சுஜாதாவிற்கு ஷங்கர் என்ற வளர்ப்பு மகன் இருக்கிறார். அவர் தான் சுஜாதா நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனத்தின் உடைய பணிகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
ஜெயம் ரவி-ஆர்த்தி சண்டை:
சங்கர் சொல்வதை ரவி கேட்க வேண்டும் என்று சுஜாதா ஆர்டர் போட்டிருக்கிறார். இதனால் தான் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஈகோவாக மாறி ஆர்த்தி- ஜெயம் ரவி இடையே சண்டை ஏற்பட்டு பிரிகிறார்கள் என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் பாடகி சுசித்ரா தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், இந்த பிரச்சனையில் என்னுடைய ஆதரவு ஜெயம் ரவிக்கு தான் கொடுப்பேன். ஆர்த்தி கூட எப்பவுமே வாழ முடியாது. அவர் இவ்வளவு நாள் வாழ்ந்ததே பெரிய விஷயம். ஆர்த்தி ரொம்ப ஆடம்பரமான பொண்ணு.
பாடகி சுசித்ரா பேட்டி:
இதனாலே ஜெயம் ரவி இரவு பகல் பார்க்காமல் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்படியே வீட்டுக்கு வந்தாலும் ஆர்த்தி என்ன மனநிலையில் இருப்பார்? என்று சொல்லவே முடியாது. அவர் ஏதோ அழகா இருந்ததால் இத்தனை ஆண்டுகள் ஜெயம் ரவி அவரின் முகத்தைப் பார்த்து வாழ்ந்து விட்டார். ஆனால், எத்தனை நாளைக்கு தான் அழகு இருக்கும். அதுமட்டுமில்லாமல் ஜெயம் ரவி குடும்பம் மற்றவர்கள் போல் இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டு சினிமாவில் முன்னுக்கு வந்த குடும்பம். அவர்களுடைய குடும்பம் எப்போதும் மற்றவர்களை மதிக்கக்கூடியவர்கள் என்று கூறியிருக்கிறார்.