விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கோர்ட்டில் மலேசியா மாமாவாக நடித்த மணியை விசாரித்தார்கள். மணியும் எல்லா உண்மையும் சொன்னார். அப்போது ரோகிணி, இவரும் பொய் சொன்னார். என் கணவர் அவருக்கு பணம் கொடுத்து நடிக்க சொன்னார் என்றார். ரோகிணி ஏற்கனவே மனோஜ் மொபைலில் இருந்து பணம் அனுப்பி இருந்தார். அந்த ஆதாரத்தை ரோகினி கோர்ட்டில் காட்டினார். இதனால் எல்லா சாட்சிகளும் மனோஜ்க்கு எதிராகவே திரும்பி நிற்கிறது.

நீதிபதி, மனோஜ் தரப்பில் கொண்டு வந்த ஆதாரங்கள் எதுவும் செல்லாதது. அடுத்து இவர்கள் இருவரையும் கவுன்சிலிங் அனுப்பி வையுங்கள் என்றார். வக்கிலுமே மனோஜை திட்டிவிட்டு அங்கிருந்து சென்றார். ரோகினி, தயவு செய்து என்னை மன்னித்து வாழவிடுங்கள் என்றார். விஜயா, அது உன் கனவில் கூட நடக்காது என்றார். பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது. அதன் பின் வீட்டிற்கு வந்த விஜயா, மனோஜை திட்டிக் கொண்டிருந்தார். அண்ணாமலை, ரோகினி வேண்டாம் என்று முடிவெடுத்த பிறகு ஆர்டர் வேண்டாம். அவளை கடையில் சேர்க்காதே என்றார்.
சிறகடிக்க ஆசை:
மனோஜ், நான் நிறைய கடன் வாங்கி இருக்கிறேன். அந்த ஆர்டர் வேண்டும் என்றார். இதனால் கொந்தளித்த விஜயா, மனோஜை அடித்தார். வீட்டில் உள்ள எல்லோருமே மனோஜ் கடன் வாங்கியதற்காக திட்டிக் கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் மனோஜ்-விஜயா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது விஜயா, உனக்கு எவ்வளவு கடன் இருக்கிறது என்று சொல். நான் சிந்தாமணியிடம் சொல்லி ஏற்பாடு செய்து தருகிறேன் என்றார். இதை எல்லாம் கேட்ட மீனா, முத்துவிடம் சொன்னார். அதற்குப்பின் கடைக்கு வந்த ரோகினியை உள்ளே விடாமல் மனோஜின் நண்பரும் பிஏவும் தடுத்தார்கள். ஆனால், ரோகினி கேட்கவில்லை.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மனோஜ், இனிமேல் நீ இங்கே வராதே. உன் மூலமாக வந்த ஆர்டரும் வேண்டாம். ஆடர் மூலம் கிடைத்த பணத்தை நான் தந்து விடுகிறேன். ஒழுங்கு மரியாதையாக கிளம்பு என்கிறார். இருந்தாலும் ரோகிணி கேட்காமல் நான் உன்னை காதலிக்கிறேன். இருவரும் சேர்ந்து வாழ போகிறோம் என்றெல்லாம் சொல்கிறார். அதற்குப் பின் பார்வதியின் கதை செல்லும் வீடியோ பிரபலமாகி இருப்பதால் அவருக்கு விருது தருவதாக சொல்கிறார்கள். இதை கேட்டு விஜயாவிற்கு கோபம் தான் வருகிறது. பின் விஜயாவை பார்க்க சிந்தாமணி வருகிறார். அப்போது விஜயா, மனோஜ் வாங்கி இருக்கும் கடனை பற்றி சொல்லி பணம் கேட்கிறார்.

சீரியல் ட்ராக்:
சிந்தாமணி, உங்கள் வீட்டு பத்திரத்தை கொடுங்கள். நான் ஏற்பாடு செய்து தருகிறேன் என்கிறார். பின் இதைப்பற்றி பேசுவதற்காக விஜயா, மனோஜ் கடைக்கு செல்கிறார். அங்கு விஜயா, பத்திரத்தை எடுப்பதற்கு அப்பா கையெழுத்து போட்ட மாதிரி பணத்தை வாங்குவதற்கும் போட்டு விடு. நீ இந்த கடன் தொல்லையிலிருந்து நீங்கி நிம்மதியாக சந்தோஷமாக வாழ வேண்டும் என்கிறார். மனோஜும் தன் அம்மா சொல்வதற்கு ஒத்துக்கொள்கிறார். அதற்குப்பின் ரவி, ஸ்ருதியின் ஹோட்டலில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது போன் செய்த நீத்து ஆர்டர் சொல்கிறார். ரவியும் ஆர்டரை எடுத்துக்கொண்டு இருக்கிறார். இதை பார்த்து சுருதிக்கு கடுப்பாகிறது






