கிரிஷ் பள்ளியில் வேலைக்கு சேர்ந்த அண்ணாமலை, பயத்தில் பதறும் ரோகினி – சிறகடிக்க ஆசை

0
167
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கோவிலில் விஜயா- மனோஜ் செய்த பரிகாரத்தை பார்த்து மொத்த குடும்பமே விழுந்து விழுந்து சிரித்தது. இன்னொரு பக்கம் பார்வதி, ரோகினி தான் 2 லட்சம் பணத்தை ஏற்பாடு செய்து தந்தார் என்று சொன்னதும் மீனா ஷாக் ஆகி முத்துவிடம் சொன்னார். அவர் ரோகினி மீது சந்தேகப்பட்டார். அதன் பின் ரோகினி இடம் இதை பற்றி மீனா கேட்க, அவர் ஏதேதோ சொல்லி சமாளித்தார். இதனால் மீனா-சுருதி இருவருக்குமே சந்தேகம் வந்தது. பின் மனோஜ் கடையில் திருஷ்டி பொம்மை என்று விஜயாவின் போட்டோவை விற்றார்கள். அதை நம்பி மனோஜ் அந்த புகைப்படத்தை வாங்கி இருந்தார்.

-விளம்பரம்-

பின் அந்த திருஷ்டி புகைப்படத்தை வீட்டிற்கு மனோஜ் கொண்டு வந்தார். அதை பார்த்து விஜயா பயங்கரமாக கோபப்பட்டு கத்தினார். ஆனால், மற்றவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். கோபத்தில் விஜயா, இதெல்லாம் மீனா செய்த வேலை தான் என்று வழக்கம் போல அவரே திட்டி இருந்தார். பின் ஷோரூமில் வேலை செய்பவர், விஜயாவின் புகைப்படத்துக்கு மாலை போட்டு பூஜை செய்தார். மனோஜ், அதை திட்டி எடுத்து வைத்தார். அந்த சமயம் பார்த்து மனோஜின் ஓனர் ஃபோன் செய்து, நல்ல பிராஃபிட் கிடைத்திருக்கிறது என்று சொன்னவுடன் ரொம்ப சந்தோஷப்பட்டார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

அப்போது வந்த மனோஜின் நண்பர், புது பங்களா விலைக்கு வருகிறது. வாங்கி போட்டு என்று சொல்ல, மனோஜும் சரி என்றார். நேற்று எபிசோடில், மீனாவை காதலிக்கும் முருகன், நேரடியாகவே முத்து வீட்டுக்கு சென்று அண்ணாமலை இடம் பெண் கேட்க, எல்லோருமே அதிர்ச்சியாகி இருந்தார்கள். அப்போது வந்த முத்து, இது எங்கள் வீடு. யாரை பார்க்க வந்தாய் என்று சொன்னவுடன், நான் இந்த பெண்ணை தான் காதலிக்கிறேன் என்று மீனாவை காண்பித்தார்.

நேற்று எபிசோட்:

இதை கேட்டவுடன் எல்லோருமே அதிர்ச்சி ஆகி இருந்தார்கள். உடனே மீனா, இவர் தான் என்னை பாலோ செய்கிறார் என்று முத்துவிடம் சொன்னார். அதற்கு முருகன், எங்க அண்ணன் சொன்ன ஐடியா தான் பாலோ செய்தேன் என்று சொன்னவுடன் மீனாவிற்கு கோபம் அதிகமாகி இருந்தது. உடனே அண்ணாமலை, இதற்கு நாங்கள் முடிவெடுக்க வேண்டியதில்லை. உங்கள் அண்ணா முடிவு தான் என்றார். கடைசியில் முத்து, அவளுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. அவள் என் பொண்டாட்டிடா என்று சொன்னவுடன் முருகன் அதிர்ச்சியானார்.

-விளம்பரம்-

சீரியல் ட்ராக்:

உடனே அவர், முத்து காலில் விழுந்து மன்னித்து விடு அண்ணா. எனக்கு தெரியாது என்று எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டார். கோபத்தில் மீனா, முத்துவிடம் சண்டை போட்டார். பின் கடையில் பிராஃபிட் வந்ததை வீட்டில் எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்து மனோஜ் சொல்ல, விஜயா ரொம்ப சந்தோஷப்பட்டு பெருமையாக பேசி இருந்தார். உடனே முத்து கிண்டல் அடிக்க, ரோகினி நக்கலாக பதிலளித்தார். இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் க்ரிஷ் படிக்கும் பள்ளிக்கூடத்தில் தான் அண்ணாமலை வேலைக்கு சேர்ந்து இருக்கிறார்.

சீரியல் ப்ரோமோ:

அப்போது ரோகினி, கிருஷை பள்ளிக்கு அழைத்து வரும்போது அண்ணாமலையை பார்த்து ஒளிந்து கொள்கிறார்கள். அந்த சமயம் பார்த்து முத்துவும் பள்ளிக்கு வருகிறார். இதனால் என்ன செய்வது என்று புரியாமல் ரோகினி பயத்தில் இருக்கிறார். அண்ணாமலை, முத்து போன பிறகு பள்ளியில் ரோகினி விசாரிக்கிறார். அதற்கு பின் தன்னுடைய அம்மாவிடம் நடந்ததை சொல்ல, அவர் நீ உண்மையை சொல்லிவிடு என்று சொல்கிறார். உடனே ரோகினி, மொத்தமாக என்னை வெளியில் அனுப்பி விடுவார்கள் பரவாயில்லையா? என்று கோபத்தில் பேசுகிறார்.

Advertisement