விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் ரோகினி செய்த வேலையால் விஜயாவிற்கு ஆத்திரம் அடங்கவே இல்லை. பின் முத்து-மீனா இருவருமே ஸ்ருதி, ரவியிடம் வீட்டில் நடந்ததை பற்றி சொல்ல, அவர்கள் ஷாக் ஆனார்கள். சுருதி, நாங்கள் உடனே கிளம்பி வீட்டிற்கு வருகிறோம் என்றார்கள். இன்னொரு பக்கம் சோகத்தில் மனோஜ், பாரில் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்தார். நிலை தெரியாத அளவிற்கு குடித்து தன் மனைவி செய்த துரோகத்தை நினைத்து புலம்பி கொண்டிருந்தார். அதன் பின் மீனாவிற்கு போன் செய்த பார்வதி, விஜயா பற்றி சொல்லி இருந்தார்.

மனோஜ், நிறைய குடித்துவிட்டு நிலை தெரியாத அளவிற்கு தடுமாறிக் கொண்டிருந்தார். அவருடைய நண்பர் தான் மனோஜை பைக்கில் வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருக்க, வரும் வழியில் டிராபிக் போலீஸ் தடுத்து நிறுத்தி இருவரையுமே செக் பண்ணார்கள். ஆனால், மனோஜ் போதையில் போலீஸ் இடமே தகராறு செய்து கொண்டிருந்தார். மனோஜின் நண்பர் குடிக்கவில்லை என்றாலும் போலீஸ் அவரை ஊத சொல்லி கேட்டார்கள். இதனால் கோபப்பட்ட மனோஜ் போலீஸிடம் சண்டை போனார். பின் போலீஸ், மனோஜை கைது செய்து விட்டார்கள்.
சிறகடிக்க ஆசை:
போலீஸ் ஸ்டேஷனிலுமே மனோஜ் அமைதியாக இருக்காமல் போலீஸிடம் மன்னிப்பு கேட்க சொல்லி வம்பு இழுத்துக் கொண்டிருந்தார். உடனே அவர்கள் கோபத்தில் மனோஜின் சட்டையை கழட்டி ஓரமாக உட்கார வைத்து விட்டார்கள். ஆனாலுமே மனோஜ் அடங்காமல், என் தம்பி யார் தெரியுமா? அவன் வந்தால் ரகளையே நடக்கும் என்றெல்லாம் அலப்பறை செய்து கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் மனோஜ் வீட்டிற்கு வரவில்லை என்று முத்து, அண்ணாமலை இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் ரோகினி, மனோஜை நினைத்து வித்யாவிடம் புலம்பி கொண்டிருந்தார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் மனோஜ் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் விஷயத்தை அவருடைய நண்பர், முத்து- அண்ணாமலை இடம் சொன்னவுடன் வீட்டில் எல்லோருமே பதறி இருந்தார்கள். பின் முத்து- அண்ணாமலை இருவருமே போலீஸ் ஸ்டேஷன் வந்தார்கள். அங்கு மனோஜ் போலீஸ் இடம் அலப்பறை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்து மன வேதனையில் அண்ணாமலை, குடும்ப பிரச்சனையால் தான் அவன் இப்படி பண்ணி விட்டான் என்று மன்னிப்பு கேட்டார். அந்த சமயம் பார்த்து அருண் வந்தார். அருணை பார்த்தவுடன் முத்து ஷாக் ஆனார்.

சீரியல் ட்ராக்:
முத்துவின் அண்ணன் தான் மனோஜ் என்று தெரிந்தவுடன் வெளியே விடக்கூடாது என்று அருண் நினைத்தார். உடனே அங்கு வந்து எஸ் ஐ, மனோஜை வெளியே விட சொன்னார். அதற்கு பின் வீட்டிற்கு வந்த மனோஜ் மீண்டும் அலப்பறை செய்து கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்து அண்ணாமலைக்கு ரொம்பவே மனவேதனையாக இருந்தது. பின் அவர், நான் என் அம்மாவை வரவைக்கிறேன். இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டுகிறேன் என்று தன்னுடைய அம்மாவை அழைத்து வர சென்றார். இன்னொரு பக்கம் பஸ் ஸ்டாண்டில் சீதா, நின்று கொண்டிருந்தார். அவரை பார்த்தவுடன் அருண், என் காதலுக்கு எப்போதுதான் பதில் சொல்லுவாய்? நீ என் பைக்கில் வந்து ஏறினால் என்னை காதலிக்கிறாய் என்று அர்த்தம் என்று சொல்ல, சீதாவும் பைக்கில் ஏறி சென்றார்.
https://www.youtube.com/watch?v=0UWry5Wi5ws
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் புரோமோவில் பாட்டியை அண்ணாமலை வீட்டிற்கு அழைத்து வந்துவிடுகிறார். பின் மனோஜை விட்டு ரோகினிக்கு போன் செய்து வீட்டுக்கு வர வைக்கிறார்கள். அதற்கு பின் விஜயாவிற்கு ஃபோன் செய்து அண்ணாமலை வீட்டிற்கு வர சொல்கிறார். ஆனால் விஜயா, ரோகினியை பார்த்தால் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது என்று ஆக்ரோஷமாக கத்துகிறார். பின் ரோகினி இடம் பாட்டி, இனிமேல் எந்த உண்மையையும் மறைக்க மாட்டேன். இந்த வீட்டிற்கு நேர்மையாக இருப்பேன் என்று சத்தியம் செய் என்று சொல்ல, அவர் அமைதியாக இருக்கிறார். உடனே அண்ணாமலை, வேறு ஏதாவது எங்களிடம் மறைக்கப் பார்க்கிறாயா? எதுவாக இருந்தாலும் சொல்லிவிடு என்று கேட்கிறார். ஆனால், ரோகினி அமைதியாகவே இருக்கிறார்.






