விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் செல்வத்திற்கு பணம் வேண்டும் முத்து, மீனாவிடம் கேட்க, அவர் முடியாது என்று அறிவுரை சொன்னார். இன்னொரு பக்கம், ரோகினி தனக்கு ஒரு லட்சம் பணம் வேண்டும் என்று மனோஜ் இடம் கேட்டார். உடனே அவர் ஷாக் ஆகி முடியாது என்று மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை வந்தது. பின் வட்டிக்கு பணம் கொடுப்பதாக மனோஜ் சொன்னவுடன் ரோகிணி சந்தோசப்பட்டார். மறுநாள் கடையில் ரோகினியின் தோழி ட்ராமா செய்து மீண்டும் மனோஜிடம் வட்டிக்கு பணத்தை வாங்கி விட்டார்.
பின் வெளியில் வந்த ரோகினி, 1 லட்ச ரூபாயை வீட்டு வாடகைக்கு கொடுத்துவிடு, மீதி 75 ஆயிரத்தை கிரிஷ் படிப்பு செலவுக்கு கொடுத்து விடு என்று சொன்னார். அதை அடுத்து மீனா, செல்வத்தை சந்தித்து சூழ்நிலையை எடுத்துச் சொல்லி புரிய வைத்தார். பின் முத்து, பணத்தை ரெடி பண்ணி செல்வத்திடம் கொடுக்க, அவர் வாங்க மறுத்தார். ஆரம்பத்தில் சொல்ல தயங்கிய செல்வம் இறுதியில் மீனா வந்து சென்ற விஷயத்தை முத்துவிடம் சொல்ல, முத்து கோபப்பட்டு மீனாவிடம் கேட்டார். இதனால் முத்து -மீனா இருவருக்கும் இடையே வாக்குவாதம் சண்டை வந்தது.
சிறகடிக்க ஆசை:
இந்த வாரம் எபிசோடில், கோபத்தில் முத்து மீனாவை அடிக்க கை ஒங்கி இருந்தார். பின் அந்த பணத்தை மீனாவிடம் சொல்லாமல் முத்து கொடுத்து விட்டார். மறுநாள் செல்வம் வீட்டு விசேஷத்திற்கு முத்து, மீனா போனார்கள். அங்கு தடபுடலாக விசேஷம் நடந்தது. இன்னொரு பக்கம் எல்லோருமே குடித்துக் கொண்டு அமர்க்களம் செய்து இருந்தார்கள். இதை பார்த்த முத்து எதுவுமே பேசாமல் அமைதியாக சாப்பிடும் இடத்திற்கு சென்றார். அப்போது பிரியாணி சரி இல்லை என்று சண்டை நடந்தது. உடனே தன் நண்பனுக்காக முத்து சண்டைக்கு போனார். இதனால் செல்வம் உறவினர்களுக்கும் முத்துவுக்கும் இடையே கலவரம் அதிகமாகி இருந்தது.
நேற்று எபிசோட்:
மீனா எவ்வளவு தடுத்துப் பார்த்தும் முடியவில்லை. நேற்று எபிசோடில் செல்வத்தின் உறவினர்கள் முத்துவை அடித்து அசிங்கப்படுத்தி வெளியே தள்ளி விட்டார்கள். பின் மீனா அவரை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்து சென்றார். இன்னொரு பக்கம் ரோஹிணிக்கு பிளாக்மெயில் செய்யும் மேனேஜர் போன் பண்ணி, கிர்ஷை வைத்து மிரட்டி பணத்தை கேட்டார். ரோகினிக்கு என்ன செய்வதென்று புரியாமல் இருந்தார். கடைசியில் செல்வம் தன்னுடைய மொய் பணத்தை மொத்தத்தையும் முத்துவிடம் கொடுத்து மன்னிப்பு கேட்டார். அதை முத்து, மீனாவிடம் கொடுத்து தன் நட்பை பற்றி பெரிதாக பேசி இருந்தார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில், ரவி வேலை செய்யும் இடத்தில் அவருடைய முதலாளியின் மகள் தான் ஹோட்டலின் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.
இன்றைய எபிசோட்:
அந்த சமயம் வந்த ஸ்ருதி இதையெல்லாம் பார்த்து அமைதியாக இருக்கிறார். பின் ஸ்ருதியிடம் ரவி பேசுவதை பார்த்த ஓனர் மகள், உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா? என்று கேட்க, ஆமாம் என்று ரவி சொன்னவுடன் அவருக்கு முகம் மாறியது. ஸ்ருதிக்கும் முதலாளியின் மகளை பிடிக்கவே இல்லை. பின் ரோகினி தன் தோழியுடன் மேனேஜர் பார்த்து பேசி இருந்தார். அப்போது அவர் 30 லட்சம் வேணும் என்றவுடன் ரோகினி ஷாக்காகி முடியாது என்று மறுத்தார். உடனே அவர், உண்மையை சொல்லி விடுவேன் என்று மிரட்டி விட்டு சென்றார்.
சீரியல் ட்ராக்:
இதனால் ரோகினி சிட்டியை பார்க்கணும் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் தன் அம்மா வீட்டிற்கு மீனா சென்று இருந்தார். அப்போது சத்யா செய்யும் தேவை இல்லாத வேலை பற்றி மீனா அம்மா சொல்ல, கோபம் வந்து மீனா சிட்டி இடம் சண்டை போடுகிறார். சண்டையில் சிட்டி மீனாவை கீழே தள்ளி விடுகிறார். இருந்தும் மீனா, சிட்டி இடம் சண்டைக்கு போனவுடன் அவரை அடிக்க சிட்டி கை ஓங்குகிறார். அந்த சமயம் வந்த முத்து, சிட்டியை வெளுத்து வாங்குகிறார். பின் கீழே தள்ளியதில் மீனாவிற்கு அடிபட்டதால் ஹாஸ்பிடலுக்கு செல்கிறார்கள். கடைசியில் நடந்த விவரத்தை மீனா அம்மாவிடம் முத்து சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.