இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பரிமளா அண்ட் கோ. இந்த படத்தில் ஜெயராம், ஊர்வசி, மிஸ்கின், சஞ்சனா, சாண்டி, அனந்திகா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். காமெடி கலாட்டாவில் உருவாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தில் ஜெயராம்- ஊர்வசி இருவரும் கணவன் மனைவியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் சஞ்சனா, இரண்டாவது மகள் அனந்திகா. ஹீரோ ஜெயராம் வரவு செலவு கணக்குகளை எல்லாம் பார்த்து மிச்சம் பிடித்து வாழும் மிடில் கிளாஸ் ஃபேமிலி மேனாக இருக்கிறார். இப்படி இருக்கும் சூழ்நிலையில் தான் ஜெயராம் உடைய இளைய மகள் அனந்திகாவுக்கு காதல் தொல்லை கொடுத்து சாண்டி தொந்தரவு செய்கிறார்.

ஜெயராம் வீட்டிற்கு வந்தே சாண்டி தொல்லை செய்து கொண்டிருக்கிறார். ஜெயராம் குடும்பம் தெருவில் வரும் போதும், வீட்டுக்கு வந்தும் அத்துமீறி நடந்து கொள்கிறார் சாண்டி. அது மட்டும் இல்லாமல் ஜெயராம் குடும்பம் நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இதனால் சாண்டியை கொலை செய்து விடலாம் என்று ஜெயராம் குடும்பம் முடிவெடுக்கிறார்கள். இவர்கள் சொன்னது போலவே சாண்டியை கொலை செய்து விடுகிறார்கள்.
போலீஸ் தீவிரமாக குற்றவாளியை தேடுகிறார்கள். கடைசியில் சாண்டியை கொலை செய்தது யார்? ஜெயராம் குடும்பம் பிரச்சனையில் இருந்து தப்பித்தார்களா? அதற்கு பின்னணி என்ன? என்பது தான் படத்தினுடைய மீதி கதை. படத்தில் ஜெயராம்- ஊர்வசி இருவரும் பல ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து நடித்திருக்கிறார்கள். பஞ்சதந்திரம் படத்தில் பார்த்தது போலவே இவர்களுடைய டைமிங் வேற லெவலில் இருக்கிறது.
ஊர்வசி ஒன்னு சொல்ல அதற்கு ஜெயராம் கொடுக்கும் ரியாக்ஷன் சிறப்பாக இருக்கிறது. வசனங்களே இல்லாமல் இருவருடைய ரியாக்சனுமே பட்டையை கிளப்பி இருக்கிறது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை இருவருடைய காமெடி திரையரங்கில் சிரிப்பலையை உருவாக்கியிருக்கிறது. இவர்களுடைய மகள்களாக வரும் சஞ்சனா அனந்திகா இருவரும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து இருக்கிறார்கள்.
மேலும், படத்தில் வரும் மிஸ்கி,ன் சான்டினுடைய நடிப்பும் அட்டகாசமாக இருக்கிறது. படத்தில் நடிகர்களின் தேர்வும், கதாபாத்திரங்களின் பெயருமே அட்டகாசம். கதாபாத்திரங்களோட வடிவமைப்பு, இயக்கம் மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு நடிகர்களுடைய நடிப்பும்
கதையைக் கொண்டு சென்ற விதமும் நன்றாக இருக்கிறது. கதை ஆரம்பத்திலிருந்து இறுதிவரை விறுவிறுப்பாக நகர்கிறது. ஆனால், சில இடங்களில் இன்னும் கொஞ்சம் நிதானமாக காண்பித்திருக்கலாம். நகைச்சுவைகள் நன்றாக இருக்கிறது. சில காட்சிகள் பார்வையாளர்களை குழப்பும் வகையில் இருக்கிறது.

இருந்தாலும் சொல்ல வேண்டிய மெசேஜை இயக்குனர் சிறப்பாக சொல்லியிருக்கிறார். போதை பழக்கத்தால் சீரழிந்து போகும் இளைஞர் சமுதாயத்தை பற்றியும், அதனால் எத்தனை குடும்பங்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதையும் இயக்குனர் சொல்லி இருப்பது பாராட்டுக்குரிய விஷயம். பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம். மொத்தத்தில் எல்லோரும் சென்று பார்க்கும் படமாக தான் இருக்கிறது.
நிறை:
ஊர்வசி, ஜெயராம் நடிப்பு அட்டகாசம்
நடிகர்கள் எல்லோருமே தங்களுக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
கதாபாத்திர வடிவமைப்பு நன்றாக இருக்கிறது
நகைச்சுவை சூப்பர்
ஒளிப்பதிவு பின்னணி இசை படத்திற்கு பக்கபலம்
கிளைமாக்ஸ் காட்சி அருமை
சமூகத்திற்கு தேவையான மெசேஜ்

குறை:
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
சில காட்சிகளை பொறுமையாக கொண்டு சென்றிருக்கலாம்
சில காட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்திருக்கிறது
மொத்தத்தில் பரிமளா அண்ட் கோ - குடும்பம் கொண்டாடும் படம்






