விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சீதா- அருண் இரு வீட்டிலுமே திருமணத்தை பற்றி பேசிக்கொண்டார்கள். அப்போது அருண், எனக்கு எந்த வரதட்சணையும் வேண்டாம். ஆனால், எனக்கு ஒரு கண்டிஷன் மட்டும் தான். திருமணத்திற்கு என் உடன் வேலை செய்பவர்கள், உயர் அதிகாரிகள் எல்லோருமே வருவார்கள். அப்போது யாரும் குடித்துவிட்டு அமர்க்களம் செய்யக்கூடாது என்று சொன்னார். இதைக் கேட்டவுடன் முத்து, பத்திரிக்கை கொடுக்கும்போது குடிக்க கூடாது என்று சொல்ல முடியுமா? என்றார். உடனே அண்ணாமலை, அந்த மாதிரி எந்த பிரச்சினையும் வராது. பார்த்துக் கொள்ளலாம் என்று சமாதானம் செய்தார். அதற்கு பின் நல்லபடியாக அருண்- சீதா திருமண பேச்சு வார்த்தைகள் முடிந்து விட்டது.

இன்றைய எபிசோட்டில் சுருதி- ரவி இருவருமே ரெஸ்டாரன்ட் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ரவி, அனுபவம் கிடைத்த பிறகு ஸ்டார்ட் பண்ணிக்கலாம். தயவு செய்து இப்போதைக்கு ரெஸ்டாரண்ட் பேச்சை நிறுத்திவை என்கிறார். அதனால் ஸ்ருதி அமைதியாகி விடுகிறார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த அண்ணாமலை, சீதா திருமணத்தை பற்றி எல்லோரிடமும் பேசுகிறார். வழக்கம்போல விஜயா, மீனாவின் குடும்பத்தை பற்றி மோசமாக திட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது அண்ணாமலை, தன்னுடைய பென்ஷன் பணத்தை மீனாவிடம் கொடுத்து திருமண செலவிற்கு வைத்துக் கொள் என்கிறார். விஜயா வேண்டாம் என்று சொல்லியுமே அண்ணாமலை கொடுக்கிறார்.
சிறகடிக்க ஆசை:
பின் முத்து- மீனாவும் பணம் வேண்டாம் என்று சொல்கிறார்கள். ஆனால், அண்ணாமலை கேட்கவில்லை. அதற்கு பின் ரவி, சாப்பாடு செலவு மொத்தத்தையும் நானே பார்த்துக்கொள்கிறேன் என்கிறார். ஸ்ருதி, சீதாவிற்கு மூன்று பவுன் செயின் நான் வாங்கி கொடுக்கிறேன் என்கிறார். இதையெல்லாம் கேட்டு மனோஜ்- ரோகினி- விஜயா மூவருமே வயிறு எரிகிறார்கள். பின் மனோஜ் இடம் அண்ணாமலை, நீ என்ன செய்ய போகிறாய் என்று கேட்கிறார். அதற்கு மனோஜ், எதுவும் செய்ய முடியாது என்று தெனாவட்டாக பேசுகிறார். அதற்குப்பின் சுருதி- ரோகினி இருவரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

இன்றைய எபிசோட்:
அப்போது ரோகினி, நான் பணம் கேட்கும் போது இல்லை என்றீர்கள். மீனாவின் தங்கை திருமணத்திற்கு மூணு பவுன் செயின் வாங்கித் தர இருக்கிறீர்கள். நீங்கள் நியாயமாகவே நடந்து கொள்ளவில்லை என்கிறார். அதற்கு சுருதி, நீங்கள் பணம் கேட்டது எமர்ஜென்சி கிடையாது. அத்தைக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், மீனா என்னிடம் கேட்கவில்லை. சீதா என்னுடைய தோழி. அவளுக்காக நான் இதை செய்கிறேன் என்று சொல்கிறார். ரோகினிக்கு நோஸ்கட் கொடுக்கிற மாதிரி ஸ்ருதி பேசி இருக்கிறார்.
அதற்குப்பின் சிட்டி, மேனேஜரை விட்டு ரோகினிக்கு போன் பண்ண சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
அப்போது மேனேஜர், நான் முத்துவை பார்க்க தான் போகிறேன். ஓரு நாள் டைம் தருகிறேன். பணத்தை தரவில்லை என்றால் நான் முத்துவிடம் எல்லாத்தையும் சொல்லிவிட்டேன் என்று மிரட்டுகிறார். இதை கேட்டு ரோகிணிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை ரொம்பவே பதறிக்கிறார். அதற்கு பின் தூக்கத்தில் ரோகினி, வீட்டில் மேனேஜர் எல்லா உண்மையையும் சொன்னது போல் கனவு கண்டு கத்துகிறார். அப்போது வீட்டில் உள்ள எல்லோரும் வந்து விடுகிறார்கள். விஜயா, ரோகினியை அவமானப்படுத்துகிறார்.
https://www.youtube.com/watch?v=7wYDPuiaQoM
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் மேனேஜர், ரோகினிக்கு விடாமல் போன் செய்து பணம் கேட்டு தொந்தரவு செய்து கொண்டிருக்கிறார். இதனால் ரோகினி, மீனா தன்னுடைய தங்கையின் திருமணத்திற்காக நகைகள் எல்லாம் வாங்கி வீட்டில் வைத்திருக்கிறார். நான் சொல்லும் போது நீ யாருக்கும் தெரியாமல் வந்து நகையை எடுத்துக் கொள் என்று சொல்கிறார். இதனால் மேனேஜருமே வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து நகையை எடுக்கிறார். அந்த சமயம் பார்த்து மனோஜ் வீட்டிற்கு வர, மேனேஜரை பார்த்து திருடன் என்று கத்துகிறார். அந்த மேனேஜர் மனோஜை அடித்துவிட்டு தப்பிக்கும் போது சுருதி- மீனா இருவருமே வீட்டுக்கு வந்து திருடனை பிடித்து அடிக்கிறார்கள். அப்போது வீட்டிற்கு வந்த விஜயாவுமே திருடனை வெளுத்து வாங்குகிறார். அப்போது ரோகிணி வீட்டிற்கு வருகிறார். மீனா, திருடன் மாட்டிக் கொண்டான் என்று சொன்னவுடன் ரோகிணிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை பதறுகிறார்.






