விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கல்லூரியில் தேர்வு எழுத முடியாததால் சத்யா வீட்டுக்கு வந்திருந்தார். இதை அறிந்த முத்து, எப்படியாவது சத்யாவை கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்று நினைத்து, நான் குடித்து உன்னை அடிப்பது போல் நடிக்கிறேன். சத்யாவை கல்லூரியில் ஏற்றுக்கொள்வார்கள் என்று சொல்ல மீனாவும் ஒத்துக் கொண்டார். மறுநாள் கல்லூரி முதல்வர் முன்பு முத்து குடிப்பது போல நடித்து மீனாவை அடித்தார். உடனே அந்த கல்லூரி முதல்வர், உன் குடும்ப சூழ்நிலை எனக்கு தெரியவில்லை.

மீண்டும் நீ கல்லூரியில் சேர்ந்து கொள் என்று சொல்ல மீனா-சத்யா சந்தோசப்படுகிறார்கள். ஆனால், முத்து மீது போலீசில் புகார் கொடுத்து விடுவதால் அவரை போலீஸ் கைது செய்து விடுகிறது. பின் நடந்த உண்மையை மீனா போலீசிடம் சொல்ல, அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பின் முத்துவை எப்படியாவது வெளியே கொண்டு வர வேண்டும் என்று மீனா, ஸ்ருதிக்கு போன் செய்து நடந்ததை சொல்லி உதவி கேட்டார். ஸ்ருதி தன்னுடைய அப்பாவிடம் உதவி கேட்க, அவர் முடியாது என்று மறுத்து விட்டார். இதுதான் சந்தர்ப்பம் என்று ஸ்ருதி அம்மா, ஒன்னுக்கு ரெண்டு ஆக முத்து அம்மாவிடம் பேசி இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
உதவி எதுவும் கிடைக்காததால் மீனா வேதனையில் வீட்டிற்கு வந்துவிட்டார். அப்போது வீட்டில் எல்லோருமே ஒன்று கூடி மீனாவை டார்கெட் செய்து பேச, அண்ணாமலை, நீங்கள் நல்லதுக்கே செய்தாலும் ஒரு வார்த்தை என்னிடம் கேட்டிருக்க வேண்டும். நீங்கள் பண்ண முறை தப்பு என்று கோபப்பட்டு பேசி இருந்தார். இதை பார்த்து விஜயா ரொம்ப சந்தோஷப்பட்டார். மறுநாள் போலீஸ் ஸ்டேஷனில் முத்து எந்த தவறும் செய்யவில்லை என்று அவரை விடுதலை செய்தார்கள். கடந்த வாரம் எபிசோட்டில் முத்துவை மீனா வீட்டிற்கு அழைத்து வந்தார்.

கடந்த வாரம் எபிசோட்:
அதை பார்த்த விஜயா வழக்கம்போல் இருவரையும் திட்டிக் கொண்டிருந்தார். கடைசியில் அண்ணாமலை, இனி இந்த தவறு செய்யாதே என்று சொல்லி அனுப்பி விட்டார். அதற்குப்பின் ஸ்ருதிக்கு உடம்பு சரியில்லாததால் வேலைக்கு லீவு போட சொல்லி கேட்க, ரவியின் ஓனர் கண்டிப்பாக வந்தே தீர வேண்டும் என்று சொல்வதால் ரவி கிளம்பி விட்டார். இதனால் கோபப்பட்ட ஸ்ருதி வீட்டை விட்டு கிளம்பி இருந்தார். மீனா எவ்வளவு தடுத்துமே சுருதி கேட்கவில்லை. அப்போது வந்த விஜயா, மீனாவை திட்டிவிட்டு சுருதியை சமாதனம் செய்தார்.

சீரியல் ட்ராக்:
ஸ்ருதி கேட்காமல் சென்று விட்டார். இதனால் விஜயாவிற்கு பயங்கர கோபம் வந்து ரவிக்கு போன் செய்து நடந்ததை சொல்லி, நீ அவளை கூப்பிட போகாதே. அவளாக வரட்டும் என்றெல்லாம் தேவையில்லாததை சொல்லித் தந்தார். இந்நிலையில் இன்று எபிசோட்டில், சுருதியை எப்படியாவது சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வா என்று மீனா அறிவுரை சொல்கிறார். ரவியும் மீனா சொல்வதை பற்றி யோசிக்கிறார். அதற்குப்பின் மீனாவின் உறவினர் வீட்டிற்கு வருகிறார்கள். அவர்களுக்கு சாப்பாடு போட்டு மீனா உபசரித்து கவனித்துக் கொண்டிருக்கிறார்.

இன்றைய எபிசோட்:
இதை பார்த்த விஜயா வழக்கம் போல் மீனாவையும் அவருடைய உறவினர்களையும் ரொம்ப கேவலமாக பேசுகிறார். இதனால் அவர்கள் பாதி சாப்பாட்டிலேயே எழுந்து சென்று விடுகிறார்கள். இந்த கோபத்தில் மீனா வேலைக்கு வந்து விட்டார். அங்கு நடந்ததை தன்னுடைய தோழிகளிடம் சொல்ல, அவர்கள் உன் மாமியாரை பெல்ட் எடுத்து வெளுத்து வாங்கு அப்பதான் உன் வழிக்கு வர மாட்டார் என்று சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் மனோஜ்க்கு ஜலதோஷம் இருக்கு நண்டு சூப்பு வை என்று மீனாவை செய்ய சொல்லி விஜயா கேட்கிறார். ஆனால், மீனா முடியாது என்று மறுத்ததால் விஜயா- மீனாவிற்கு இடையே வாக்குவாதம் வருகிறது. அதற்குப்பின் கோபத்தில் மனோஜ், மீனாவையும் அவருடைய குடும்பத்தையும் பற்றி கண்டமேனிக்கு பேசுகிறார். இதனால் கோபத்தில் மீனா பெல்ட்டை எடுத்துக்கொண்டு வருகிறார்.






