விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் ரோகினி, சிட்டியை சந்தித்து மேனேஜரை ஏதாவது பண்ண சொல்லி கேட்க, முத்து போனில் இருக்கும் சத்யா வீடியோவை எடுத்து வர சொன்னவுடன் ரோகினி ஒத்துக் கொண்டார். இன்னொரு பக்கம், மீனா-மூத்து ஸ்கூட்டியில் போவதை பார்த்த சிட்டி, அவர்கள் மீது காரை விட்டு மோத பார்த்தார். ஆனால், அந்த சமயம் பார்த்து குறுக்கே வேறொரு வண்டி வந்ததால் முத்து-மீனா இருவருமே சிட்டியிடம் இருந்து தப்பித்து விட்டார்கள். இந்த வாரம் முத்து, தன்னுடைய மொபைலை சார்ஜ் போட்டு விட்டு குளிக்கப் போனார். உடனே ரோகினி, முத்து போனை யாருக்கு தெரியாமல் எடுத்து செக் பண்ணார்.

அப்போது சத்யா வீடியோவை பார்த்து ஷாக் ஆகி, அதை தன்னுடைய மொபைலுக்கு அனுப்ப பார்த்தார். ஆனால், போன் சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்தது. பின் ரோகினி போனை வைத்துவிட்டு அங்கிருந்து தப்பித்து மாடிக்கு சென்று விட்டார். இன்னொரு பக்கம் ரவி, தன்னுடைய ஓனர் உடன் சேர்ந்து ஹோட்டலுக்கு தேவையான பொருள் வாங்க சென்று இருந்தார். இதை பார்த்த ஸ்ருதி அம்மா கோபப்பட்டு ஸ்ருதியிடம் ரவியை பற்றி தவறாக சொல்லி இருந்தார். பின் மீனா, கொலு வைக்கும் விஷயத்தை முத்துவிடம் சொல்ல, அவரும் ஒத்துக் கொண்டு விஜயாவிடம் கேட்டார்.
சிறகடிக்க ஆசை:
முதலில் மறுத்த விஜயா கடைசியில் ஒத்து கொண்டார். வீட்டில் கொலு வைப்பது பற்றி விஜயா, பார்வதி இடம் பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த காதல் ஜோடிகள் தேவையில்லாத வேலைகளை செய்ததை பார்த்து மீனா திட்டினார். உடனே, விஜயா அந்த காதல் ஜோடிகள் சொன்னதை நம்பி மீனாவை திட்டி அனுப்பி விட்டார். பின் வீட்டில் கொலு வைப்பதற்கு தேவையான பொம்மைகள் எல்லாம் முத்து வாங்கி வைத்திருந்தார். நேற்று எபிசோட்டில், கொலு வைக்கும் முறையை பற்றி ஸ்ருதிக்கு மீனா அழகாக எடுத்துச் சொல்லி இருந்தார். அதைக் கேட்ட ஸ்ருதி ஆச்சரியப்பட்டு மீனாவை பாராட்டியிருந்தார்.

நேற்று எபிசோட்:
அதற்கு பின் மீனா வகுப்பில் நடந்ததை முத்துவிடம் சொல்ல, மீண்டும் விஜயா கோபப்பட்டு பேசி இருந்தார்.
உடனே மனோஜ்- ரோகினி இருவருமே சேர்ந்து கொண்டு மீனாவை தான் குறை சொல்லி இருந்தார்கள். பின் முத்து கேட்டதால் விஜயா, அந்த பரத பாவத்தை செய்தார். ஆனால் மீனா, அந்த மாணவர்கள் இப்படி செய்யவில்லை என்றவுடன் விஜயா கோபப்பட்டார். அண்ணாமலை, நீ கவனமாக இரு. ஏதாவது தவறு நடந்தால் உன் மேல் தான் பழி வரும் என்று சொல்ல, இனிமேல் மீனா சாப்பாடு கொண்டு வர தேவை இல்லை என்று விஜயா சொல்லி விட்டார்.

இன்றைய எபிசோட்:
பின் வகுப்பில் விஜயா சொல்லிக் கொடுக்கும் போது அந்த காதல் ஜோடிகள் செய்வதை கவனிக்கிறார். அவர்கள் வகுப்பை கவனிக்காமல் தேவையில்லாத வேலைகளை செய்தவுடன் விஜயாவிற்கு சந்தேகம் வருகிறது. இந்நிலையில் இன்று எபிசோட்டில், விஜயா, அந்த ஜோடிகளை தனியாக பிரித்து வைத்து நடனம் ஆடுங்கள் என்று சூசகமாக சொல்கிறார். இதனால் அவர்கள் இரண்டு பேருமே கோபப்படுகிறார்கள். அதற்கு பின் பார்வதி இடம் விஜயா, வீட்டில் நடந்ததை சொல்ல, அவரும் எனக்கு சந்தேகமாக இருக்கிறது. பிரச்சினையில் மாட்டிக் கொள்ளாதே என்று அறிவுரை சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் மனோஜ் தனக்கு கடிதம் எழுதிய நபரை தேடி கோயிலுக்கு செல்கிறார். அங்கு பிளாக்மெயில் செய்யும் மேனேஜர் சாமியார் கெட்டப்பில் மனோஜிடம் பேசுகிறார். இதையெல்லாம் பார்த்து ரோகினி பயத்தில் அமைதியாக நிற்கிறார். அப்போது உங்களுக்கு ஒரு கடிதம் இருக்கிறது. அதை முத்து தான் கொடுத்தார் என்று சாமியார் சொல்ல, மனோஜ்க்கு கோவம் வந்து வீட்டில் கத்துகிறார். இதுவரை லெட்டர் மூலமாக நடந்த விஷத்தை பற்றி மனோஜ்-விஜயா சொல்கிறார்கள். ஆனால், ரோகினிக்கு இது முத்து செய்யவில்லை என்று தெரியும். இது எல்லாம் கேட்டு மீனா, அண்ணாமலை இருவருமே கோபப்பட்டு முத்துவுக்காக பேசுகிறார்கள். பின் என் கணவர் வரட்டும் அப்போது பேசுங்கள் என்று மீனா சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






