விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ் செய்த வேலையை பற்றி ஜீவா சொன்னவுடன் எல்லோரும் அதிர்ச்சி ஆனார்கள். உடனே கோபத்தில் விஜயா, மனோஜின் சட்டையை பிடித்து கேட்க, ரோகினி சொல்லி தான் நான் செய்தேன் என்று சொன்னார். இதனால் ஆத்திரத்தில் விஜயா, ரோகினியை பளார் என்று அடித்தார். கடைசியில் வேறு வழி இல்லாமல் ரோகினி, உண்மையை ஒத்து கொண்டார். அதோடு ரோகினி, மனோஜை தரக்குறைவாக பேச, ஆத்திரம் தாங்க முடியாமல் விஜயா இன்னும் ரோகினியை அடித்தார். பின் ரவி - சுருதி, முத்து-மீனா நான்கு பேருமே ரோகினி- மனோஜ் செய்த வேலையை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

இதையெல்லாம் கேட்ட மனோஜ்க்கு ரொம்ப அவமானமாக இருந்தது. பின் இதை பற்றி அவர் ரோகினி இடம் கேட்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமானது. உடனே கோபத்தில் ரோகினி, மனோஜை திட்டி வீட்டை விட்டு கிளம்பி விட்டார். பின் இதைப் பற்றி மனோஜ், தன்னுடைய அம்மாவிடம் சொல்ல, அவர் இன்னும் கோபமாக இருந்தார். அதற்கு அண்ணாமலை, நீ ரோகினியை அடித்து இருக்கக்கூடாது. உன் மகன் செய்ததும் தவறு தான் என்று சொல்ல, ரொம்ப ஆக்ரோஷமாக விஜயா பேசினார். இன்னொரு பக்கம் தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்ற ரோகினி, நடந்த விஷயத்தை தன்னுடைய அம்மாவிடம் சொல்லி அழுதார்.
சிறகடிக்க ஆசை:
அதற்கு அவர், ரோஹினிக்கு ஆறுதல் செய்து அறிவுரை செய்தார். பின் வீட்டிற்கு வந்த ரோகினியை பார்த்தவுடன் தான் மனோஜ்க்கு நிம்மதி ஆனது. ஆனால், விஜயா மட்டும் கோபத்திலேயே இருந்தார். அதோடு மனோஜ் - ரோகினி இருவரையும் பேச விடாமல் விஜயா தடுத்தார். பின் ரோகினி, மன்னிப்பு கேட்டு விஜயாவிடம் பேச வந்தார். ஆனால், விஜயா இன்னும் ஆக்ரோஷத்தில் ரோகினியை திட்டி அனுப்பி விட்டார்.
நேற்று எபிசோடில் ரோகினிக்கு போன் செய்த ஸ்ருதியின் அம்மா, வீட்டில் நடந்ததை பற்றி விசாரித்தார்.

நேற்று எபிசோட்:
உடனே கோபத்தில் ரோகினி, எங்கள் வீட்டு விஷயத்தை பற்றி நீங்கள் பேச வேண்டாம் என்று போனை வைத்து விட்டார். பின் அவர், விஜயாவுக்கு போன் செய்து ரோகினி சொன்னதை சொல்ல, கொந்தளித்த விஜயா, ரோகினியை வெளுத்து வாங்கி இருந்தார். இதனால் கோபத்தில் ரோகினி, சுருதியிடம் சண்டை போட்டார். மீனா தடுத்துமே கேட்கவில்லை. பின் மனோஜ்க்கு ரோகினி போன் செய்ய, அவர் எடுக்கவே இல்லை. உடனே மனோஜ், தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் செய்து நடந்ததை சொன்னார். இன்னொரு பக்கம் முத்துவிடம் மீனா வீட்டில் நடப்பதை சொல்ல, கணவன்- மனைவியை பிரித்து பேச விடாமல் தடுப்பது ரொம்ப தப்பு என்றெல்லாம் பேசி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில் விஜயா வீட்டிற்கு வராதே என்று சொன்னதால் வேதனையில் மனோஜ் கடையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அந்த சமயம் வந்த முத்து, அவரிடம் விசாரிக்கிறார். ஆனால், மனோஜ் சரியாகவே பதில் சொல்லவில்லை. பின் முத்து, சாப்பாடு கொண்டு வந்து இருக்கிறேன். உன்னால் பசி தாங்க முடியாது. கோபத்தில் எதுவும் யோசிக்காதே என்று ஆறுதல் சொல்லி அவரை சாப்பிட வைக்கிறார். மனோஜூம் சாப்பிட்டுவிட்டு, நீ இந்த ஷோ ரூமை பங்கு கேட்க தான் இப்படி எல்லாம் செய்கிறாயா? என்று ரொம்ப மோசமாக பேசிவிடுகிறார்.
சீரியல் ட்ராக்:
இதனால் கோபப்பட்ட முத்து அவரை திட்டி விட்டு வந்து விடுகிறார். இன்னொரு பக்கம் மீனா, ரோகினிக்காக சமைத்துக் கொண்டு போய் தந்தார். அவர் சாப்பிட்டுவிட்டு, நான் திட்டு வாங்கினதெல்லாம் உங்களுக்கு சந்தோசமாக தான் இருக்கும். இதற்காகத்தானே காத்துக் கொண்டீர்கள் என்று கடுமையாக பேசினார். இதனால் மீனா-ரோகினி இடையே வாக்குவாதம் வந்தது. மறுநாள் மீனா, தன் வீட்டில் நடந்ததை பற்றி தன்னுடைய அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது சத்யா, ரோகினி இது மட்டும் இல்லாமல் நிறைய தில்லாலங்கடி வேலை எல்லாம் செய்கிறார். சிட்டியிடம் அவர் நிறைய கடன் வாங்கி இருக்கிறார் என்று சொல்லுடன் மீனாவுக்கு சந்தேகம் வருகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.






