விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் முத்து, தன்னுடைய மொபைலை சார்ஜ் போட்டு விட்டு குளிக்கப் போனார். உடனே ரோகினி, முத்து போனை யாருக்கு தெரியாமல் எடுத்து சத்யா வீடியோவை பார்த்து ஷாக் ஆகி, அதை தன்னுடைய மொபைலுக்கு அனுப்ப பார்த்தார். ஆனால், போன் சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்தது. பின் ரோகினி போனை வைத்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார். பின் மீனா, கொலு வைக்கும் விஷயத்தை வீட்டில் சொல்ல விஜயா ஒத்து கொண்டார்.

பின் வகுப்பில் காதல் ஜோடி தேவையில்லாத வேலைகளை செய்ததை பார்த்து மீனா திட்டினார். உடனே, விஜயா காதல் ஜோடி சொன்னதை நம்பி மீனாவை திட்டி அனுப்பி விட்டார். பின் வீட்டில் கொலு வைப்பதற்கு தேவையான பொம்மைகள் எல்லாம் முத்து வாங்கி வைத்திருந்தார். அப்போது மீனா வகுப்பில் நடந்ததை முத்துவிடம் சொல்ல, மீண்டும் விஜயா கோபப்பட்டு பேசி இருந்தார். உடனே மனோஜ்- ரோகினி இருவருமே சேர்ந்து கொண்டு மீனாவை தான் குறை சொல்லி இருந்தார்கள். உடனே அண்ணாமலை அறிவுரை சொல்ல, இனிமேல் மீனா சாப்பாடு கொண்டு வர தேவை இல்லை என்று விஜயா சொல்லி விட்டார். பின் வகுப்பில் விஜயா, அந்த காதல் ஜோடி மீது சந்தேகம் வந்து அவர்களை தனியாக பிரித்து வைத்தார்.
சிறகடிக்க ஆசை:
இன்னொரு பக்கம் மனோஜ், தனக்கு கடிதம் எழுதிய நபரை தேடி கோயிலுக்கு சென்றார். அங்கு பிளாக்மெயில் செய்யும் மேனேஜர் சாமியார் கெட்டப்பில் மனோஜிடம் பேச, இதையெல்லாம் பார்த்து ரோகினி பயத்தில் இருந்தார். அப்போது அந்த சாமியார், ஒரு கடிதத்தை கொடுத்து இது முத்து தான் கொடுத்தார் என்றவுடன் மனோஜுக்கு பயங்கர கோபம் வந்து வீட்டில் கத்துகிறார். இதுவரை லெட்டர் மூலமாக நடந்த விஷத்தை பற்றி மனோஜ்-விஜயா சொல்ல, எல்லோரும் ஷாக் ஆனார்கள். ஆனால், ரோகினிக்கு இது முத்து செய்யவில்லை என்று தெரியும்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோடில், விஜயா - மனோஜ் இருவரும் முத்து மீது தான் பழி போட்டார்கள். ஆனால், மீனா- அண்ணாமலை இருவரும் முத்துவுக்காக பேசி இருந்தார்கள். மனோஜ் சொன்ன வார்த்தையை நம்பி விஜயா, முத்து-மீனாவை வீட்டை விட்டு வெளியே போக சொன்னார். பிறகு மனோஜ் சொன்ன விஷயத்தை மீனா முத்துவிடம் சொல்ல, அவர் கோபப்பட்டு மனோஜை அடிக்க போனார். உடனே மனோஜ், தன் அடியாளை கூப்பிட்டு முத்துவை அடிக்க வைத்தார். ஆனால், முத்து அந்த ஆளை அடித்து தூக்கி வெளியே போட்டு விட்டார். இதையெல்லாம் பார்த்து மொத்த வீடுமே சிரிக்கிறது.

சீரியல் ட்ராக்:
பின் முத்து, நான் எதற்கு உனக்கு கடிதம் கொடுக்கணும்? என்று சொன்னதற்கு, ரோகினி நடந்ததை சொன்னார். அப்போது மீனா, உங்களை மாட்டி விட்ட அந்த சாமியார் தான் இந்த வேலையை செய்திருக்கணும் என்று சொன்னவுடன் ரோகிணி பயந்தார். அந்த சாமியார் யார் என்று தெரிந்தால் எல்லா பிரச்சனையும் தீர்ந்து விடும். இந்த பிரச்சனைக்கு நானே முடிவு கட்டுகிறேன். யார் அந்த குற்றவாளி என கண்டுபிடிக்கிறேன் என்று சொல்ல, ரோகிணி என்ன செய்வது என்று புரியாமல் அமைதியாக பயத்தில் இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=ZYpGNOSL9uc
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், மொட்ட கடுதாசி வந்ததற்கு என் மேல் பழி போட்ட, அவன் யார் என்று கண்டுபிடித்து விட்டேன். மனோஜ் கல்யாணம் நடக்கும் போது ஒருவனை நான் சவாரிக்கு அழைத்து வந்தேன். அவன் பெண்களைப் பற்றி தப்பு தப்பாக பேசியதால் அவனை அடித்து துரத்தி விட்டேன். இரண்டு மாதத்திற்கு முன் அவன் ஒரு வயதான பாட்டியை வண்டி ஏத்திவிட்டு தப்பிக்க பார்த்தான். அவனை போலீசில் பிடித்துக் கொடுத்தேன். அவன் தான் இந்த வேலையை செய்தான். அவன் என்னை பழி வாங்குவதற்கு எதற்கு மனோஜ்க்கு கடிதம் அனுப்புகிறான் என்று தெரியவில்லை. திருப்பி என் கையில் அவன் மாட்டினாள், ரெண்டு போட்டால் உண்மை வந்துவிடும் என்று சொல்ல, ரோகினி உள்ளுக்குள் கதி கலங்குகிறார்.






