விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் பங்களா வீட்டினுடைய போலி ஓனர், மனோஜை ஏமாத்தி மீதி பணத்தை வாங்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆனார்கள். ஆனால், முத்துவிற்கு அவர்கள் மீது சந்தேகம் வந்தது. பின் எல்லோருமே பங்களாவை சுத்திப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
பின் மனோஜ், நியூமராலஜிஸ்ட், கூஸ்ட் லேடி என்று அட்ராசிட்டி செய்து இருந்தார். பின் மனோஜ், புது பங்களா மீது லோன் போட்டு ரெண்டு கோடி ரூபாய் வரை லோன் வாங்குகிறார். பேங்க் மூலம் வந்தவர்கள் வீட்டை சுற்றி பார்த்தார்கள்.

இன்னும் 70 லட்சம் பணம் தேவை என்பதால் தன்னுடைய அப்பாவிடம் மனோஜ் கேட்டார். அப்போது அவர், வீட்டை விற்று எனக்கான சேர் கொடுங்கள். நான் இந்த வீட்டை வாங்கணும் என்றவுடன் எல்லோரும் ஷாக் ஆகி இருந்தார்கள். பின் முத்து- ரவி எல்லோருமே கோபப்பட்டார்கள். உடனே அண்ணாமலை, இது என்னுடைய வீடு இல்லை. விஜயா தான் முடிவெடுக்க வேண்டும். அது அவருடைய அப்பா தந்தது என்று சொன்னவுடன் மனோஜ் தன்னுடைய அம்மாவிடம் கேட்க, அவர் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
இதனால் முத்து, மனோஜ் இடையே சண்டை நடந்தது. அதற்குப்பின் முத்து, ரோகினி உடைய அப்பாவிடம் வாங்கி இந்த வீட்டை வாங்கு என்று சொன்னவுடன் எல்லோருமே ரோகினி பக்கம் திரும்பி இருந்தார்கள். ரோகினி, தன் மாமாவிடம் பேசுவது போல் வித்யாவிற்கு ஃபோன் செய்து பணம் கேட்டு நடித்தார். ஆனால், கடைசியில் பணம் இல்லை என்று சொன்னார். இது எல்லாம் கவனித்த மீனாவிற்கு சந்தேகம் வந்து முத்துவிடம் சொன்னார். இன்னொரு பக்கம் ரவி, மனோஜ் செய்த வேலையை நினைத்து புலம்பி கொண்டிருந்தார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் ரோகினி- மனோஜ் இருவருமே ரவியிடம் பணம் கேட்டார்கள். அதற்கு ரவி, என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று சொல்ல, உடனே ரோகினி, ஸ்ருதி அப்பாவிடம் கேட்டு வாங்கி தாருங்கள். நாங்கள் கடனாக கேட்கிறோம் என்று சொன்னார். அதற்கு ஸ்ருதி, நான் எங்களுக்காகவே அப்பாவிடம் கேட்க மாட்டோம். அவரிடம் பணம் கேட்பதெல்லாம் பிடிக்காது என்றார். பின் ரவி, நான் என்னுடைய ஹோட்டலுக்காக கூட அவரிடம் பணம் கேட்க மாட்டேன். என்னை அடமானம் வைத்து பணம் வாங்க மாட்டேன் என்றார். இருந்தும் ரோகினி- மனோஜ் விடாமல் அவர்களை கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

சீரியல் ட்ராக்:
ஒரு கட்டத்தில் சுருதி- ரவி இருவருமே முடியாது என்று மறுத்து விடுவதால் கோபப்பட்டார்கள். பின் எப்படியாவது இந்த வீட்டை வாங்க வேண்டும் என்று ரோகினி, மனோஜை உஷ்பேத்தி இருந்தார். இன்னொரு பக்கம் முத்து-மீனா இருவருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது மீனா, தனக்கு எப்படி எல்லாம் வீடு வேணும் என்று சொன்னார். பின் தூங்கிக் கொண்டிருக்கும் போது ரோகினி, விஜயா அடித்து வீட்டை விட்டு துரத்துவது போல கனவு கண்டார். பயத்தில் ரோகினி கத்த, மனோஜ் அவரை எழுப்பி விட்டார். அதற்கு பின் சவாரிக்கு முத்து, மனோஜினுடைய முன்னாள் காதலி ஜீவாவை அழைத்துக் கொண்டு போனார்.
https://www.youtube.com/watch?v=-GGVW-DNg7s
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் முத்து போனை பார்த்த சீதா, உங்களுடைய கல்யாணத்தின்போது உங்கள் அண்ணா இவரோடு தான் பேசிக் கொண்டிருந்தார் என்றவுடன் மீனாவுக்கு சந்தேக வருகிறது. ஒரு வேலை இவர்தான் மனோஜ் உடைய காதலியாக இருப்பாரா? என்று மீனா சொல்கிறார். உடனே முத்து, ஜீவாவை சந்தித்து பேசினார். அப்போது ஜீவா, ஆமாம். உங்க அண்ணனை தான் நான் காதலித்தேன் என்கிறார். என்னுடைய அப்பா பணம் எங்கே என்று முத்து கேட்க, மனோஜ் இடம் எல்லாம் கொடுத்து விட்டேன் என்றார். இதை வீட்டில் சொல்வாயா? என்று ,முத்து கேட்டதற்கு, எனக்கு அவர்கள் இருவரிடமும் கணக்கு தீர்க்க வேண்டிய வேலை இருக்கிறது, வருகிறேன் என்கிறார் ஜீவா.






