விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ புது டீலர், மனோஜுக்கு போன் செய்து கடையை இன்னும் ப்ரொமோட் செய்ய வேண்டும் என்றால் விளம்பரம் எடுக்க வேண்டும். அதற்கு உங்களுடைய குடும்ப ஆட்களை வைத்தே பண்ணுங்கள் என்று இரண்டு லட்சம் பணத்தை தருகிறேன் என்று சொன்னவுடன் மனோஜ் ஒத்துக் கொண்டார். ஆனால், இந்த பணம் விஷயத்தை வீட்டில் சொல்லாமல் மனோஜ் மறைத்தார். பின் வீட்டில் மனோஜ், டீலர் சொன்ன விஷயத்தை சொல்ல, எல்லோருமே ஒத்துக் கொண்டார்கள். மேலும், சூட்டிங் நடந்தது. டைரக்டர் ஒவ்வொருவருக்கும் டயலாக் கொடுத்து பேச, எல்லோருமே ஆரம்பத்தில் தப்பு தப்பாக பேசியதால் அவர் பயங்கரமாக திட்டி இருந்தார்.
குறிப்பாக அண்ணாமலையை திட்டுவது முத்துவிற்கு பிடிக்கவே இல்லை. இதனால் முத்து, அவரிடம் சண்டைக்கு போக, இயக்குனர் கோபப்பட்டு யாரும் ஓசியில் நடிக்கவில்லை. காசு வாங்கி தானே நடிக்க வந்தீர்கள் என்று சொன்னவுடன் எல்லோருமே ஷாக்கில் மனோஜை பார்த்தார்கள். பின் வீட்டில் இதை பற்றி எல்லோரும் கேட்க, சூட்டிங் முடிந்து தரலாம் என்று இருந்தேன் என்றார் மனோஜ். அதையே திருப்பி திருப்பி மனோஜ் சொல்ல, முத்து- ரவி இருவருமே மனோஜை அடிக்க போனார்கள். ஓரு வழியாக பணத்தை ரோகினி எல்லோருக்கும் அனுப்பி விட்டார்.
சிறகடிக்க ஆசை:
இன்னொரு பக்கம் பார்வதி பூ கேட்டதால் மீனா கொண்டு போய் தந்தார். அப்போது விஜயா, மீனாவை அவமானப்படுத்தி பார்வதி வீட்டு வேலையை செய்ய சொன்னவுடன் எதுவும் பேசாமல் செய்தார்.
மேலும், இன்றைய எபிசோட்டில் பீரோவில் பணம் இல்லை என்று பார்வதி சொன்னவுடன் விஜயா ஷாக் ஆகிறார். ரூமில் ரெண்டு பேருமே நன்றாக தேடிப் பார்க்கிறார்கள். ஆனால், அங்கு பணம் இல்லை. பார்வதி உடைய நகைகள், பணமெல்லாம் இருக்கிறது. ஆனால், விஜயா பணம் மட்டும் இல்லை.
இன்றைய எபிசோட்:
கடைசியில் விஜயா மீனா தான் துணி அடுக்கி வைத்தாள். அவள் தான் இந்த வேலையை செய்திருக்கணும் என்று சொன்னவுடன், பார்வதி அப்படி எல்லாம் இருக்காது பழி போடாதே என்று சொன்னார். இருந்தாலுமே விஜயா கேட்கவில்லை. பின் வீட்டில் விஜயாவிற்கு பார்வதி போன் செய்கிறார். அப்போது விஜயா, என்ன பணம் காணவில்லையா? மீனா எடுத்திருப்பார் என்று சந்தேகப்படுகிறாயா? என்று மீனா மீது பழி போடுகிறார். உடனே மீனாவுக்கு ஆத்திரம் தாங்க முடியலவில்லை, பயங்கரமாக அழுகிறார்.
சீரியல் ட்ராக்:
அண்ணாமலை-முத்து கோப்பப்பட்டு மீனாவிற்கு சப்போர்ட் செய்து பேசுகிறார்கள். ஆனால், விஜயா கேட்கவில்லை. மீண்டும் மீண்டும் மீனா மீது தான் பழி போட்டாள். ரோகினி எதுவும் பேசாமல் உள்ளுக்குள்ளே பயத்தில் அமைதியாக இருக்கிறார். பின் மீனா, முத்து இருவருமே நடந்ததை நினைத்து பேசிக் கொண்டிருக்கும்போது பார்வதி ஆண்டியிடம் விசாரிக்கலாம் என்று முத்து சொல்கிறார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து , உண்மையை கண்டுபிடிக்க பார்வதி வீட்டிற்கு செல்கிறார்.
சீரியல் ப்ரோமோ:
அப்போது பார்வதி, அது என்னுடைய பணம் இல்லை. சத்யா, கேஸ் விசயத்தில் வக்கீல் இரண்டு லட்ச ரூபாயை விஜயாவிற்கு கொடுத்தார் என்று சொன்னவுடன் கோபத்தில் வீட்டிற்கு வந்த முத்து, நடந்த எல்லாத்தையும் தன்னுடைய அப்பா அண்ணாமலையிடம் சொன்னார். உடனே அண்ணாமலை பயங்கரமாக கோபப்பட்டு, உன்னால் தான் முத்து-மீனாவிற்கு 5 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. நீதான் அந்த பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று சொன்னவுடன் விஜயா ஷாக் ஆனார்.