விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் விஜயா, நீ எப்படியாவது பணத்தை ரெடி பண்ணி கொடுத்துவிடு. இந்த பிரச்சனை முடிந்து விடும் என்று ரோகினியை மிரட்டி இருந்தார். இன்னொரு பக்கம் முத்து- மீனா இருவரும் கதிரை கண்டுபிடிக்க திட்டம் போட்டார்கள். சிந்தாமணி நடிகரின் வீட்டில் ஆர்டர் வாங்கப் போனார். அந்த சமயம் வந்த மீனா, பூ தினமும் போடுவதாக அந்த நடிகரிடம் சொல்ல, இதை எல்லாம் பார்த்து சிந்தாமணிக்கு கோபம் வந்து சண்டை போட்டார். ஆனால், கதிரை பிடிக்கத்தான் அந்த நடிகரின் வீட்டிற்கு மீனா போனார்.

அதற்குப்பின் வீட்டிற்கு வந்த ரோகினியிடம் விஜயா, பணத்தை ஏற்பாடு செய்தீர்களா? உன்னுடைய சொந்தக்காரர்களிடம் கேட்டு பணத்தை ரெடி பண்ணு என்று சொல்ல, ரோகினியால் எதுவும் சொல்ல முடியவில்லை. பின் அண்ணாமலை, கதிர் விஷயம் பற்றி கேட்க, மீனா செய்யும் சிஐடி வேலை பற்றி முத்து சொன்னார். உடனே மனோஜ், பணம் கிடைத்தவுடன் என்னிடம் கொடு என்றவுடன் முத்து, மனோஜை திட்டி விட்டார். நேற்று எபிசோட்டில் முத்து, சீக்கிரமாகவே கதிரை பிடிக்க பார்க்கிறோம். அதற்காகத்தான் மீனாவும் நானும் தீவிரமாக அலைந்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னார். அதற்குப்பின் மீனாவை விஜயா சமைக்க சொல்ல, உடனே முத்து, ரோகியை சமைக்க சொல்லுங்கள் என்று கிளம்பி விட்டார்.
சிறகடிக்க ஆசை:
இதனால் விஜயா, நீ பணத்தை ரெடி பண்ணும் வரை இந்த வீட்டில் இவ்வளவுதான் நம்மளுக்கு மரியாதை. சீக்கிரம் ரெடி பண்ணு என்று திட்டி இருந்தார். பின் கிச்சனில் ரோகினி தோசை சுட தெரியாமல் சுட்டுக் கொண்டிருந்தார். இதை பார்த்து சுருதிக்கு சிரிப்புதான் வந்தது. ரோகினி சமைத்த சாப்பாட்டை வாயில் வைக்க முடியாமல் விஜயா-மனோஜ் எழுந்து சென்று விட்டார்கள். இதனால் ரோகினிக்கு பயங்கர கோபம் வந்தது. அப்போது மீனா, சிட்டியிடம் நீங்கள் ஏன் கடன் வாங்கி இருக்கிறீர்கள்? என்று சொன்னவுடன் ரோகினிக்கு முகமே மாறி வியர்த்து போய்விட்டது. என்ன சொல்வது என்று புரியாமல் அங்கிருந்து ரோகினி கிளம்பி விட்டார்.

நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் முத்து, சிட்டியிடம் ரோகினி பணம் வாங்கி இருக்கும் விஷயத்தை ரவியிடம் சொல்ல, இருவருமே மனோஜிடம் கேட்டார்கள். ஆனால், மனோஜ் அதை பற்றி பெரிதாக கண்டுகொள்ளாமல்
இருவரையும் திட்டி விட்டு போனார். பின் இதைப் பற்றி மனோஜ், ரோகினி இடம் கேட்க அவரால் எதுவுமே பதில் சொல்ல முடியவில்லை. இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ரோகினி, நீ வேலையில்லாமல் இருந்தபோது வீட்டு செலவிற்கெல்லாம் பணம் கொடுக்கணும். அதனால்தான் நான் கடன் வாங்கி கொடுத்தேன் என்றார். பின் மனோஜ், அவனிடம் வைத்துக் கொள்ளாதே, உனக்கு எவ்வளவு கடன் இருக்கிறது சொல் என்றார்.

இன்றைய எபிசோட்:
அதற்கு ரோகினி, எல்லாவற்றையும் நீ அடைத்து விடுவாயாக என்று கோபமாக கேட்க, மனோஜால் எதுவும் பேச முடியவில்லை. இன்னொரு பக்கம் மீனா, ரோகினி மீது சந்தேகமாக இருக்கிறது. அவர் என் கேள்விக்கு ஒழுங்காக பதில் சொல்லாமல் கிளம்பிவிட்டார் என்றவுடன் முத்து, சத்யா வீடியோ விஷயத்திற்கும் ரோகினிக்கும் எதாவது சம்பந்தம் இருக்கும். சீக்கிரமாக கண்டுபிடிக்கிறேன் என்கிறார். மறுநாள் காலையில் கதிரை கண்டுபிடிப்பதற்காக நடிகரின் வீட்டிற்கு முத்து-மீனா இருவருமே போகிறார்கள். அங்கு மீனா, தன்னுடைய கணவரை அறிமுகப்படுத்தி பொறுமையாக பேசுகிறார். அப்போது முத்து, பங்களா விஷயத்தை பேசிய உடன் அந்த நடிகர், கதிர் பற்றி சொன்னார்.

சீரியல் ட்ராக்:
பின் முத்து, தன்னுடைய அண்ணன் ஏமாந்த உண்மையை எல்லாம் சொல்ல, அவர் ஆறுதல் சொல்லி கதிர் பற்றி தனக்கு தெரிந்த விஷயத்தை சொல்கிறார். அந்த சமயம் பார்த்து சிந்தாமணி ஆர்டருக்காக வருகிறார். உடனே அந்த நடிகர், மீனா-சிந்தாமணிக்கு வேலையை பிரித்து கொடுக்கிறார். இதனால் கோபத்தில் சிந்தாமணி, மீனாவிடம் சவால் விட்டார். முத்து, நாங்கள் வளர்ந்து காட்டுவோம் என்று அவரிடம் பதிலுக்கு பதில் சவால் விடுகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் சாப்பாடு செய்யவில்லை என்று விஜயா பயங்கர கலவரமே செய்து கொண்டிருக்கிறார். அந்த சமயம் வந்து மீனா, எல்லாம் சமைத்து வைத்து தான் போனேன். கதிர் விஷயமாக தான் போயிருந்தோம். கூடிய விரைவில் கண்டுபிடிப்போம் என்று சொன்னவுடன் ரோகினி,இனி நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் அதை விடுங்கள் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






