விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் மனோஜ்- ரோகினி செய்த வேலையால் விஜயா ரோகினி இடம் மிகவும் கண்டிப்பாக இருக்கிறார். பின் விஜயா, ரோகினி- மனோஜ் இருவரையும் பேசவிடாமல் தடுக்கிறார். ரோகினி, மன்னிப்பு கேட்டும் விஜயா ஏற்றுக்கொள்ளவில்லை. பின், ரோகினிக்கு போன் செய்த ஸ்ருதியின் அம்மா, வீட்டில் நடந்ததை பற்றி விசாரிக்கிறார். உடனே கோபத்தில் ரோகினி, எங்கள் வீட்டு விஷயத்தை பற்றி நீங்கள் பேச வேண்டாம் என்று போனை வைத்து விட்டார்.

அதற்குப் பிறகு விஜயாவுக்கு போன் செய்து ரோகினி சொன்னதை ஸ்ருதியின் அம்மா சொல்ல, விஜயா ரோகினியை வெளுத்து வாங்கி இருந்தார். இதனால் ரோகிணி, ஸ்ருதியிடம் சண்டை போட்டார். பின், மனோஜ்க்கு ரோகினி போன் செய்ய, அவர் எடுக்கவே இல்லை. உடனே மனோஜ், தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் செய்து நடந்ததை சொன்னார். அதற்கு விஜயா, வீட்டிற்கு வராதே என்று சொன்னதால் வேதனையில் மனோஜ் கடையில் இருந்தார். அடுத்த நாள் மீனா, தன் வீட்டில் நடந்ததை பற்றி தன்னுடைய அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது சத்யா, ரோகிணி இது மட்டுமில்லாமல் நிறைய தில்லாலங்கடி வேலை செய்யலாம் செய்கிறார்.
சிறகடிக்க ஆசை :
மேலும், சிட்டியிடம் அவர் நிறைய கடன் வாங்கி இருக்கிறார் என்று சொன்னவுடன் மீனாவிற்கு சந்தேகம் வந்தது. இந்நிலையில் நேற்றைய எபிசோடில், ரோகினி ரூமில் இருந்து வெளியே வரவில்லை என்று விஜயா கோபத்தில் பயங்கரமாக கட்டியிருந்தார். பின் வெளியே வந்த ரோகினி, அசந்து தூங்கிவிட்டேன் என்று சொல்ல, விஜயா திட்டி விடுகிறார். பின் மனோஜ் ரெடியாக உள்ளே போனவுடன் ரோகினி கதவை மூட உள்ளே உடனே விஜயா, கதவு திறந்து இருக்கட்டும். நீ உன் வேலையை மட்டும் பார் என்று இருவரையும் பேசவிடாமல் தடுக்கிறார். இது எல்லாம் பார்த்து முத்துவிற்கு பயங்கர கோபம் வருகிறது.

நேற்று எபிசோட் :
அதற்குப்பின் வீட்டிற்கு வந்த அண்ணாமலை இடம் ரோகினி மன்னிப்பு கேட்கிறார். அதற்கு அவர், நீ என்ன சொன்னாலும் நீ செய்தது தவறு என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். பின் எல்லாரும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ரோகிணி சாப்பிட வர, விஜயா அவரை திட்டிவிடுகிறார். எல்லோருமே ரோகினியை சாப்பிட சொல்லியும் அவர் கேட்கவே இல்லை. அதற்குப் பிறகு ரோகினி பார்வதியிடம் விஜயா செய்ததை பற்றி சொல்லி புலம்பி அழுகிறார். பார்வதியும் ரோகினிக்கு ஆறுதலாக பேசுகிறார்.
இன்றைய எபிசோட் :
இந்நிலையில் இன்றைய எபிசோடில், மீனா தனது டெக்கரேஷன் பிசினஸுக்காக புது மாடல்களை செய்து மண்டபத்திற்கு கொண்டு செல்கிறார். அப்போது முத்து, நானும் வருகிறேன் என்று சொல்ல, மீனா, நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிடுகிறார். பின், தான் கொண்டு வந்த புது மாடல்களை மண்டபத்தின் மேனேஜரிடம் மீனா காட்டுகிறார். அந்த சமயம் அங்கு வந்த, மீனாவை தொழிலில் எதிரியாக நினைக்கும் ரவுடிகள் அங்கே வந்து, மீனாவின் மாடல்களை எல்லாம் உடைத்து விடுகிறார்கள்.

சீரியல் ட்ராக் :
அதற்கு மீனா எப்படியாவது நான் இந்த தொழிலில் ஜெயித்துக் காட்டுகிறேன் என்று அவர்களிடம் சபதம் போட்டுவிட்டு செல்கிறார். மறுபக்கம், தன் வீட்டிற்கு வந்த விஜயாவிடம் பார்வதி ரோகினிக்கு சப்போர்ட் செய்வது போல் பேசுகிறார். ரோகினிக்கு பணம் வந்தவுடன் மனோஜை தனியாக கூட்டிட்டு போய்விடுவார் என்பது போல் பயம் காட்டுகிறார். பின், வேலையை முடித்துவிட்டு அண்ணாமலை வீட்டுக்கு வர, மீனா, வீட்டில் நடந்த விஷயத்தை எல்லாம் கூறி வருத்தப்படுகிறார். அந்த சமயம் பார்த்து விஜயா வர, என்னை பற்றி தப்பு தப்பாக என் புருஷனிடம் போட்டு கொடுக்கிறாயா என்று மீனாவை திட்டுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






