விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் மேனேஜர் சாமியார் கெட்டப்பில் மனோஜிடம் பேசுவதை பார்த்து ரோகினி பயத்தில் இருந்தார். அப்போது அந்த சாமியார், இந்த கடிதத்தை முத்து தான் கொடுத்தார் என்றவுடன் மனோஜுக்கு பயங்கர கோபம் வந்து வீட்டில் கத்தினார். இதுவரை லெட்டர் மூலமாக நடந்த விஷத்தை பற்றி மனோஜ்-விஜயா சொல்ல, எல்லோரும் ஷாக் ஆனார்கள். ஆனால், மீனா- அண்ணாமலை அதை நம்பவில்லை. பிறகு மனோஜ் சொன்ன விஷயத்தை மீனா முத்துவிடம் சொல்ல, அவர் கோபப்பட்டு மனோஜை அடிக்க போனார்.

உடனே மனோஜ், தன் அடியாளை கூப்பிட்டு முத்துவை அடிக்க வைத்தார். ஆனால், முத்து அந்த ஆளை அடித்து தூக்கி வெளியே போட்டு விட்டார். பின் முத்து, நான் எதற்கு உனக்கு கடிதம் கொடுக்கணும்? என்று சொன்னதற்கு, ரோகினி நடந்ததை சொன்னார். அப்போது மீனா, உங்களை மாட்டி விட்ட அந்த சாமியார் தான் இந்த வேலையை செய்திருக்கணும் என்று சொன்னவுடன் ரோகிணி பயந்தார். அந்த சாமியார் யார் என்று தெரிந்தால் எல்லா பிரச்சனையும் தீர்ந்து விடும். இந்த பிரச்சனைக்கு நானே முடிவு கட்டுகிறேன் என்று முத்து சொல்ல, ரோகிணி என்ன செய்வது என்று புரியாமல் அமைதியாக பயத்தில் இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில், ரோகினி தன் வீட்டில் நடந்ததைப் பற்றி அவருடைய தோழி இடம் சொல்லி, எப்படியாவது நீ முத்து மொபைலில் இருக்கும் சத்யா வீடியோவை எடுக்க வேண்டும் என்று ஆர்டர் போட்டார். மறுநாள் முத்துவின் வாடகையில் ரோகிணியின் தோழி சவாரி போனார். அப்போது அவர், முத்துவின் போனை வாங்கி சத்யா வீடியோவை பார்த்து தன் மொபைலுக்கு மாற்ற பார்த்தார். ஆனால், அந்த நேரம் பார்த்து மீனா கால் செய்ததால், முத்து தன் ஃபோனை வாங்கி விட்டார். இதற்கிடையில் முத்து கோயிலுக்கு சென்று அந்த பிராடு சாமியாரை விசாரித்தார். அப்போது கோயில் உள்ளவர்கள், அவர் பிராடு சாமியார் என்று தெரிந்ததும் அவரை அடித்து நாங்கள் வெளியே துரத்தி விட்டோம் என்று ஓரு வீடியோவை காண்பிக்க, முத்துவுக்கு அந்த நபர் யார் என்று தெரிந்தது.

நேற்று எபிசோட்:
பின் வீட்டிற்கு வந்த முத்து, மனோஜிடம் உனக்கு மொட்டை கடுதாசி கொடுத்த நபர் யார் என்று எனக்கு தெரிந்து விட்டது. அவன் எனக்கு தெரிந்தவன் தான். உன்னுடைய கல்யாணத்தின்போது வாடைக்கு என்னுடைய காரில் தான் வந்தான். அவன் பெண்களைப் பற்றி ரொம்ப தவறாக பேசியதால் அடித்து துரத்தி விட்டேன். ரெண்டு மாதங்களுக்கு முன்பு கூட ஒரு பாட்டி மீது வண்டி ஏத்தி மோதினான். அப்போது நான் தான் போலீசில் பிடித்துக் கொடுத்தேன் என்று சொன்னார். இதை கேட்ட ரோகினி, சிட்டி நம்மிடம் பொய் சொல்லி இருக்கிறான் என்று உள்ளுக்குள் பயப்படுகிறார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில், உன்னால் தான் பிரச்சனையும் வருகிறது என்று விஜயா சொன்னவுடன், உடனே முத்து, அவன் என்னைத்தான் மிரட்ட வேண்டும். தேவையில்லாமல் மனோஜை மிரட்டுகிறான் என்றால் இவன்தான் ஏதாவது தேவையில்லாத வேலை செய்து இருப்பான் என்று சொன்னவுடன் ரோகினி முகம் மாறுகிறது. எனக்கு தெரிந்த ஆளிடம் சொல்லி வைத்திருக்கிறேன். அவன் என் கையில் கிடைத்த உடனே உண்மையை வரவைக்கிறேன் என்று சொல்ல, பயத்தில் ரோகினி அந்த இடத்தை விட்டு கிளம்புகிறார். இன்னொரு பக்கம் ரவி-சுருதி ஷாப்பிங் முடித்துவிட்டு பைக்கில் வந்து கொண்டிருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:
அப்போது நீது, லிப்ட் கேட்டு ரவி பைக்கில் ஏறி கொள்கிறார். இதெல்லாம் சுருதிக்கு பிடிக்கவில்லை. கடைசியில் டிராபிக் போலீஸ் இடம் மாட்டி ரவி பைன் கட்டி விட்டு கிளம்புகிறார். நீது, போலீஸ் வண்டியிலேயே லிப்ட் கேட்டு செல்கிறார். கடைசியில் வீட்டில் முத்து-மனோஜ் -ரவி எல்லோரும் கொலு வைப்பதை பற்றி பேசி கொண்டு இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் சுருதி-மீனா- ரோகினி மூவருமே கொலு வைப்பது பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது சுருதி- மீனா தங்களுக்குள் இருக்கும் சண்டையை மறந்து விட்டு பேசுகிறார்கள். இதையெல்லாம் பார்த்து ரோகினிக்கு சந்தேகம் வருகிறது. அதோடு முத்துவை மாட்ட வைக்க ரோகினி மீண்டும் திட்டம் போடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






