விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் மேனேஜர் சாமியார் கெட்டப்பில் மனோஜிடம் முத்துவை பற்றி தவறாக சொல்லி இருந்தார். இதனால் கோபப்பட்ட மனோஜ் லெட்டர் மூலமாக நடந்த விஷயத்தை பற்றி சொல்ல, எல்லோரும் ஷாக் ஆனார்கள். ஆனால், மீனா- அண்ணாமலை அதை நம்பவில்லை. பிறகு மனோஜ் சொன்ன விஷயத்தை மீனா முத்துவிடம் சொல்ல, அவர் கோபப்பட்டு மனோஜை அடிக்க போனார். அப்போது மீனா, உங்களை மாட்டி விட்ட அந்த சாமியார் தான் இந்த வேலையை செய்திருக்கணும் என்று சொன்னவுடன் ரோகிணி பயந்தார்.
அந்த சாமியார் யார் என்று தெரிந்தால் எல்லா பிரச்சனையும் தீர்ந்து விடும். இந்த பிரச்சனைக்கு நானே முடிவு கட்டுகிறேன் என்று முத்து சொல்ல, ரோகிணி என்ன செய்வது என்று புரியாமல் அமைதியாக பயத்தில் இருந்தார். ரோகினி, முத்து மொபைலில் இருக்கும் சத்யா வீடியோவை எடுக்க வேண்டும் என்று தன் தோழிக்கு ஆர்டர் போட்டார். அவரும் முத்துவின் காரில் சவாரி போனார். அப்போது அவர், முத்துவின் போனை வாங்கி சத்யா வீடியோவை பார்த்து தன் மொபைலுக்கு மாற்ற பார்த்தார். ஆனால், அந்த நேரம் பார்த்து மீனா கால் செய்ததால், முத்து ஃபோனை வாங்கி விட்டார்.
சிறகடிக்க ஆசை:
இதற்கிடையில் முத்து கோயிலுக்கு சென்று அந்த பிராடு சாமியாரை விசாரித்து, அந்த நபர் யார் என்று தெரிந்து கொண்டார். பின் வீட்டில் முத்து, உனக்கு மொட்டை கடுதாசி கொடுத்த நபர் யார் என்று எனக்கு தெரிந்து விட்டது. உன்னுடைய கல்யாணத்தின்போது அவன் பெண்களைப் பற்றி ரொம்ப தவறாக பேசியதால் அடித்து துரத்தி விட்டேன். ரெண்டு மாதங்களுக்கு முன்பு ஓரு பாட்டி மீது வண்டி ஏத்தி மோதினான். அப்போது நான் தான் போலீசில் பிடித்துக் கொடுத்தேன் என்று சொன்னார். இதை கேட்ட ரோகினி, சிட்டி நம்மிடம் பொய் சொல்லி இருக்கிறான் என்று உள்ளுக்குள் பயந்தார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் முத்து, அவன் என்னைத்தான் மிரட்ட வேண்டும். தேவையில்லாமல் மனோஜை மிரட்டுகிறான் என்றால் இவன் தான் ஏதாவது தேவையில்லாத வேலை செய்து இருப்பான் என்று சொன்னவுடன் ரோகினி முகம் மாறி இருந்தது. எனக்கு தெரிந்த ஆளிடம் சொல்லி வைத்திருக்கிறேன். அவன் என் கையில் கிடைத்த உடனே உண்மையை கண்டுபிடிக்கிறேன் என்று சொல்ல, பயத்தில் ரோகினி அந்த இடத்தை விட்டு கிளம்பி இருந்தார். பின் கொலு வைப்பது பற்றி முத்து-மனோஜ் -ரவி எல்லோரும் பேசி கொண்டு இருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இன்னொரு பக்கம் சுருதி-மீனா- ரோகினி மூவருமே கொலு வைப்பது பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது சுருதி- மீனா பேசுவதை பார்த்து ரோகினிக்கு சந்தேகம் வந்தது. அதோடு முத்துவை மாட்ட வைக்க ரோகினி மீண்டும் திட்டம் போட்டார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து வீட்டில் கொலு வைக்கும் விழா சிறப்பாக நடைபெறுகிறது. மீனா எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்து இருக்கிறார். விழாவிற்கு உறவினர்கள், நண்பர்கள் என எல்லோருமே வருகிறார்கள். ரோகினியும் அவருடைய தோழியும், எப்படியாவது இந்த விழா முடிவதற்குள் முத்து மொபைலை எடுத்து விட வேண்டும் என்று பிளான் போடுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
இந்த விழாவிற்கு காதல் ஜோடிகளுமே வந்திருக்கிறார்கள். அதை பார்த்து மீனா முத்துவிடம் சொல்ல அவருக்கும் சந்தேகம் வந்தது. பின் விழாவில் விஜயா பாடுகிறார். விஜயா பாட்டை கேட்டவுடன் நாய் எல்லாம் குறைகிறது. விஜயா பாட்டை யாராலும் காது கொடுத்து கேட்கவில்லை. ஆனால், அண்ணாமலை மட்டும் ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர் என்று பாட சொல்லிக் கொண்டே இருக்கிறார். கடைசியில் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர், பயங்கரமாக திட்டி விட்டதால் விஜயா பாடுவதை நிறுத்திவிட்டார். அதற்குப்பின் மீனா பாடியதை கேட்டு எல்லோருமே பாராட்டி கைதட்டுகிறார்கள். இதற்கிடையில் முத்து போன் எடுக்க ரோகினி பார்த்தார். ஆனால், முத்து போனை கேட்டு வாங்கி கொள்கிறார். கடைசியில் முத்து-மீனா இருவரும் நடந்ததை பற்றி சந்தோஷமாக பேசி சிரித்து கொண்டிருக்கிறார்கள்.