கவுண்டமணியுடன் நடித்துள்ள சிறகடிக்க சீரியல் நடிகர் – காமெடி கிங்கிடம் இருந்தே வந்துள்ள பாராட்டு.

0
419
- Advertisement -

கவுண்டமணி படத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் நடிக்கருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் கதை. தற்போது சீரியலில் மனோஜ் பணத்தை ஏமாற்றி சென்ற ஜீவா இந்தியாவிற்கு மீண்டும் வருகிறார். பின் மனோஜிடம் ஜீவா வசமாக மாட்டிக் கொள்கிறார். அவர் மீது போலீசிலும் புகார் அளிக்கிறார்.

-விளம்பரம்-

போலீசில் ஜீவா பணம் கொடுக்க முடியாது என்று மறுக்கிறார். மனோஜ் – ரோகினி இருவருமே பணத்தை கொடுக்கவில்லை என்றால் கம்ப்ளைன்ட் கொடுப்பேன் என்று கூறுகிறார்கள். இதனால் வேறு வழி இல்லாமல் ஜீவாவும் பணத்தை கொடுத்து விடுகிறார். இனிவரும் நாட்களில் மனோஜ் கனடா செல்வரா? அவருக்கு பணம் கிடைத்த விஷயம் வீட்டிற்கு தெரிய வருமா? போன்ற பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலில் ஹீரோ முத்துவின் நண்பனாக செல்வம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் பழனியப்பா.

- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்:

இவர் முதன் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த லொள்ளு சபா நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக தான் மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகியிருந்தார். அதற்குப் பிறகு இவர் நிறைய படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். பின் இவர் 100க்கும் மேற்பட்ட சீரியல்களில் சின்ன ரோலில் நடித்திருந்தார். இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது சிறகடிக்க ஆசை சீரியல் தான். தற்போது இந்த சீரியல் மூலம் இவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.

பழனியப்பா செய்த செயல்:

நடிகர் கவுண்டமணி நடித்து வரும் ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் தான் பழனியப்பா நடிக்கிறார்.
இந்த படத்தில் கவுண்டமணி முன்பு நின்று பழனியப்பா ஒரு நீண்ட டயலாக் ஒன்று பேச வேண்டும். அதை பழனியப்பா எளிதாக பேசி அனைவரையுமே ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். இதை பார்த்து வியந்த கவுண்டமணியும் பழனியப்பாவை அழைத்து பாராட்டி இருக்கிறார். அதோட, நீ பெரிய நடிகராக வருவாய் என்றெல்லாம் புகழ்ந்து பேசி இருக்கிறார். தற்போது இந்த தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

ஒத்த ஓட்டு முத்தையா படம்:

ஒத்த ஓட்டு முத்தையா என்ற முழு நேர நகைச்சுவை திரைப்படத்தில் தான் கதாநாயகனாக கவுண்டமணி நடிக்க இருக்கிறார். இந்த படத்தை சிசி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. ராஜகோபால் இந்த படத்தை எழுதி இயக்கி இருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம்புலி, வையாபுரி, முத்துக்காளை, எதிர்நீச்சல் ஜான்சி ராணி, தாரணி, கூல் சுரேஷ், மறைந்த நடிகர் நாகேஷின் பேரன், மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

கவுண்டமணி குறித்த தகவல்:

தமிழ் சினிமா உலகில் காமெடியில் ஜாம்பவனாகவும், சக்கரவர்த்தியாகவும் திகழ்ந்தவர் கவுண்டமணி. அன்றும் இன்றும் என்றும் இவருடைய காமெடிக்கு எவரும் நிகரில்லை என்று சொல்லலாம். காமெடி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் முதலில் ஞாபகத்தில் வருவது கவுண்டமணி பெயர் தான். அந்தளவிற்கு தன்னுடைய நகைச்சுவை திறமையின் மூலம் மக்களை தன்வசம் படுத்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் கதாநாயகர்களுக்கு இணையாக ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்தவர். அதிலும், இவர் செந்திலுடன் இணைந்து பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்தார். கவுண்டமணி தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக சினிமாவில் எண்ட்ரியாக இருக்கிறார். – அமைச்சர்

Advertisement