விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சீதா, தன்னுடைய ஆபிஸில் வேலை செய்யும் ஒருவர் பணத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்து விட்டதை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அதற்கு மீனாவின் அம்மா, தவறு செய்பவரை விட அதை மறைக்க துணையாக இருப்பவர் செய்வதும் தவறு தான் என்றெல்லாம் சொல்வதால் மீனாவிற்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. பின் மீனா, ரோகிணி வீட்டிற்கு போனார். அங்கு லட்சுமி, ரோகினி செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டார். ஆனால் மீனா, லட்சுமியை திட்டிவிட்டு ரோகிணி இடம் தனியாக பேச வேண்டுமென்றார். அந்த சமயம் பார்த்து வித்யா வீட்டிற்கு வந்தார்.

வித்யா, உண்மை தெரியாமல் ரோகிணியை காப்பாற்றுவதற்காக ஏதேதோ பொய்களை சொல்லி சமாளித்தார். ஒரு கட்டத்தில் கோவப்பட்ட மீனா, ரோகிணி தான் கிரிஷ் உடைய அம்மா என்பது எனக்கு தெரியும் என்றால் இதைக் கேட்டு வித்யா ஷாக் ஆனார். அதற்கு பின் நடந்தது எல்லாம் மகேஸ்வரி சொன்னார். பின் வித்யா, மீனாவிடம் மன்னிப்பு கேட்டார். அதற்குப்பின் மீனா, எப்போதுதான் உண்மை சொல்லப் போகிறாய்? என்றார். அதற்கு ரோகினி, கிரிஷை மனோஜ் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு பிறகு நான் சொல்கிறேன் என்றார். அதற்கு மீனா, தனித்தனியாக இருந்தால் எப்படி ஏற்றுக்கொள்வார்.
சிறகடிக்க ஆசை:
கற்பனையில் உருவாக்கிய அம்மா உயிருடன் இருந்தால் என்ன, செத்தால் என்ன என்கிறார்.. உடனே ரோகினி, ஐடியா நன்றாக இருக்கிறது. நான் கிரிஷ் உடைய அம்மா இறந்து விட்டார்ன்னு சொல்கிறேன் என்றார். மீனா, ரோகிணியை பார்த்து முறைத்தார். இன்னொரு பக்கம் சுருதியை வெறுப்பேற்றுவதற்காக நீத்து ரவியை அழைத்துக் கொண்டு சுருதி ரெஸ்டாரண்டுக்கு போனார்கள். அப்போது நீத்து, ரவியை கட்டிப்பிடித்து உங்களால்தான் காம்பெடிஷனில் செலக்ட் ஆகி இருக்கிறேன். ரொம்ப நன்றி என்றெல்லாம் சுருதியை வெறுப்பேற்றும்படி பேசிக் கொண்டிருந்தார். ஆனால், ரவிக்கு ஒன்றுமே புரியவில்லை.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நீத்து,சுருதியை வெறுப்பேற்றுவதற்காகவே பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், அதை பெரிதாக சுருதி எடுத்துக் கொள்ளவில்லை. ரவிக்கு அங்கு என்ன நடக்கிறது என்று ஒன்றுமே புரியவில்லை. அதற்குப்பின் கிரிஷை அழைத்துக் கொண்டு லட்சுமி, முத்துவின் வீட்டிற்கு வருகிறார். ரோகினி உள்ளுக்குள் பயந்து கொண்டுதான் இருக்கிறார். பின் லட்சுமி, என்னுடைய மகள் இறந்து விட்டார். க்ரிஷ், முத்துவுடன் இருக்க ஆசைப்படுகிறான் என்று சொல்லி எமோஷனலாக கதைகளை சொல்கிறார். இதை எல்லாம் கேட்டு மீனாவிற்கு ரோகிணி மீதுதான் கோபம் அதிகமாகின்றது.

சீரியல் ட்ராக்:
அண்ணாமலை, முத்து எல்லோரும் கிரிஸை வீட்டில் தங்குவதற்கு ஒத்துக்கொள்கிறார்கள். வழக்கம் போல மனோஜ்- வித்யா தான் வேண்டாம் என்று சண்டை போடுகிறார்கள். பின் அண்ணாமலை, கிரிஷை அங்கேயே தங்க வைக்கிறார். அதற்குப்பின் விஜயா, கிரிஷை இங்கிருந்து எப்படியாவது அனுப்பி விடணும் என்று ரோகிணியிடம் பேசுகிறார். இன்னொரு பக்கம் பார்வதி- சிவன் இருவரும் சேர்ந்து குழந்தைகளுக்கு கதை சொல்லி வீடியோ எடுத்து போடுகிறார்கள். இது எல்லாம் பார்த்து விஜயாவிற்கு பயங்கர கோபம் வருகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது






