விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அண்ணாமலை, எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டார். பின் மனோஜின் திருமணமும் நின்று விட்டது. அதற்குப்பின் அண்ணாமலை, எதற்காக இப்படி செய்தாய்? என்று கேள்வி கேட்கிறார். விஜயாவும் ஏதேதோ சொல்லி சமாளித்தார். ஒரு கட்டத்தில் அண்ணாமலை, கோபத்தில் விஜயாவை அடிக்க சென்றார். முத்து தடுத்து விட்டார். பின் அண்ணாமலை, விஜயாவையும் மனோஜ் திட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். விஜயா, மனோஜ் செய்த விஷயத்தை சொல்லி மீனா வருத்தப்பட்டார்.

முத்து, இதை எல்லாம் அவர்கள் செய்வது புதிது கிடையாது. இருவருமே இப்படித்தான் என்றார். இன்னொரு பக்கம் சுருதி, ரோகிணி- மனோஜ் இருவருமே காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார்கள். இப்போவரையும் ரோகிணி, மனோஜ்காக தான் காத்துக்கொண்டிருந்தார். இருவரையும் சேர்த்து வைக்கலாம் என்றார். ரவி, அதெல்லாம் தேவையில்லை. ரோகினி, நிறைய தவறான வேலை செய்திருக்கிறார் என்றார். மனோஜ், தன்னுடைய திருமணம் நின்று போனது நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருந்தார்.
சிறகடிக்க ஆசை:
அதற்குப்பின் சத்யா, ரேகா இருவரும் முத்துவை சந்தித்து பேசி இருந்தார்கள். அப்போது சத்யா, வீட்டில் பயங்கர பிரச்சினையாக இருக்கிறது என்றார். முத்து, எதுவாக இருந்தாலும் பார்த்து தான் ஆகணும் என்று சமாதானம் செய்தார். பின் முத்து, வரும் வழியில் மீனாவை கத்தியால் குத்திய நபரை பார்த்து விட்டார். பின் முத்து, அந்த நபரை அடித்து வெளுத்து வாங்கி உண்மையை கேட்டார். அந்த நபருமே சிந்தாமணி சொல்லி தான் செய்ய சொன்னேன் என்று உண்மையை ஒற்றுக்கொண்டார். அதற்குப்பின் முத்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து விட்டார். சிந்தாமணியை போலீஸ் கைது செய்தார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பைனான்சியர், எனக்கு 48 லட்சம் ரூபாயை செட்டில் செய்ய வேண்டும். இல்லை என்றால் போலீசை வர வைப்பேன் என்று சொல்கிறார். முத்து முடியாது என்று பிரச்சனை எல்லாம் செய்கிறார். அண்ணாமலை, நான் கையெழுத்து போடவில்லை என்கிறார். ஆனால், பைனான்சியர் கேட்கவே இல்லை. அந்த பணத்திற்கு உங்கள் மகன் முத்து பொறுப்பேற்க வேண்டும். நீங்கள் கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டும். மூன்று மாதம் தான் டைம் இல்லை என்றால் இந்த வீட்டை நான் எடுத்துக் கொள்வேன் என்று சொல்கிறார். அண்ணாமலையால் எதுவுமே பேச முடியவில்லை.

சீரியல் ட்ராக்:
விஜயா அமைதியாக இருக்கிறார். எல்லோரும் கையெழுத்து போட்டு கொடுக்கிறார்கள். அண்ணாமலை, விஜயாவின் கன்னத்திலேயே ஓங்கி அறைகிறார். நீ இவ்வளவு பெரிய துரோகத்தை செய்வாய் என்று நான் நினைக்கவே இல்லை. இந்த வீட்டை மீட்க போவது முத்து-மீனா தான். ஆனால், மனோஜ்க்கு இந்த வீட்டில் இருந்து ஒரு சல்லி பைசா கூட கிடையாது என்று சொல்லிவிடுகிறார். இதனால் மனோஜ்க்கு கோவம் தான் வருகிறது. அதற்குப்பின் அண்ணாமலை ரொம்பவே வருத்தத்தில் இருக்கிறார். விஜயா பேச வருகிறார். அண்ணாமலை எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்புகிறார். முத்து-மீனா இருவரும் வீட்டை எப்படி மீட்பது என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.






