விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா, மனோஜை திட்டி யாருக்காகவும் இந்த வீட்டை விற்க முடியாது. உன் கடனை நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார். அதற்குப்பின் கோபத்தில் இருக்கும் மனோஜ், கிரிஷை அடித்தார். ரோகினி, ஏன் அடித்தாய்? என்றார். அதற்கு மனோஜ், ரோகினி கழுத்தை பிடித்து திட்டிக் கொண்டிருந்தார். பின் அது கல்யாணி பேய் இல்லை என்றவுடன் மனோஜ், ரோகிணி மீது கையை எடுத்து விட்டார். இன்னொரு பக்கம் அண்ணாமலை வேதனையில் புலம்ப முத்து ஆறுதல் சொன்னார்.

ரோகிணி, பார்வதி இடம் பண உதவி கேட்டார். பார்வதி, நான் உனக்கு உதவி செய்கிறேன். ஆனால், உனக்கு மீனா கேரண்டி கொடுக்க வேண்டும் என்றார். பின் ரோகினி, மீனாவை தனியாக அழைத்து சென்று பேசினார். ஆனால், மீனா முடியாது என்று அங்கிருந்து சென்று விட்டார். அதற்குப்பின் வீட்டில் முத்து, பொய் சொல்லக்கூடாது. ஒரு பொய் சொன்னால் அதை மறைப்பதற்கு பல பொய்கள் சொல்ல வேண்டும் என்றெல்லாம் கிரிஷிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இது எல்லாம் கேட்ட மீனா, தன்னுடைய கணவரிடம் ரோகிணி பற்றி எல்லா உண்மையும் சொன்னார். ஆனால், முத்து அங்கு இல்லை.
சிறகடிக்க ஆசை:
இது எல்லாம் கேட்ட ரோகிணி கோபப்பட்டு கையை அறுத்துக் கொள்வது போல டிராமா செய்தார். உடனே அந்த இடத்திற்கு வந்த முத்து, என்ன பிரச்சனை? என்றார். அதற்கு ரோகிணி, மனோஜ் கடன் தொல்லை என்றெல்லாம் பொய் சொல்லி சமாளித்து விட்டார். மறுநாள் காலையில் அண்ணாமலை தன்னுடைய நண்பர், வக்கீல் எல்லாம் வீட்டிற்கு வர வைத்து சொத்தை நான்கு பங்காக பிரிப்பது பற்றி பேசி இருந்தார். முத்து-மீனா, சுருதி- ரவி எல்லோருமே வேண்டாம் என்று தடுத்தார்கள். மனோஜ், யாரும் இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம். சொத்தை பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து- ரவி இருவரும் சொத்தை பிரிக்க வேண்டாம் என்று சொல்கிறார்கள். மனோஜ் சொத்தை பிரிக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். வக்கீல், இப்படி எல்லோருமே மாற்றி மாற்றி சொன்னால் சொத்தை பிரிக்க முடியாது. பிரச்சனை வரும் என்கிறார். கடைசியில் மனோஜ், சொத்தை பிரிக்க முடியாது என்றால் நான் கோர்ட்டின் மூலம் சந்தித்துக் கொள்கிறேன் என்று சொல்வதால் வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் ஆகிறார்கள். கோபத்தில் முத்து, மனோஜை அடிக்கிறார். இருவருக்கும் இடையே கலவரம் அதிகமாகிறது. ஒரு கட்டத்தில் அண்ணாமலை, முத்துவை அமைதியாக சொல்லிவிட்டு சொத்தை பிரிப்பதற்கு ஏற்பாடு செய்ய சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
மறுநாள் காலையில் வீட்டில் அண்ணாமலை இல்லை என்று எல்லோருமே தேடுகிறார்கள். பின் அண்ணாமலை எழுதிய கடிதத்தை பார்த்த மீனா படிக்கிறார். அதில், என்னை யாரும் தேட வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். இதை பார்த்து விஜயா ரொம்பவே பதறிப் போய் மனோஜை திட்டுகிறார். முத்து, ரவி இருவரும் அண்ணாமலை தேடி போகிறார்கள். ஆனால், மனோஜ் மட்டும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அமைதியாக இருக்கிறார். ரோகிணி, எதற்காக சொத்தை பிரிக்க சொன்னாய் என்று திட்டுகிறார். கோபத்தில் மனோஜ், உன்னால் தான் இந்த பிரச்சனை என்று கோபப்பட்டு சண்டை போடுகிறார்.






