விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி, இன்னும் எங்களுக்கு விவாகரத்து கிடைக்கவில்லை. அதற்குள் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா? என்று அழுதார். பின் கோர்ட்டில் நடந்ததை எல்லாம் ரோகினி ஹரணியிடம் சொன்னார். இன்னொரு பக்கம் முத்துவை சந்தித்த மீனாவின் அம்மா, ரேகா நம்ம குடும்பத்துக்கு வேணாம். அவங்க அம்மாவால் நிறைய பிரச்சனை வரும். தயவுசெய்து உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள் என்றார். உடனே முத்து, இதைப்பற்றி மீனாவிடம் விசாரித்தார். மீனா, நான் தான் நடந்ததை எல்லாம் அம்மாவிடம் சொன்னேன் என்றார்.

முத்து, எதற்குள் அவசரப்படுகிறாய்? சிந்தாமணி செய்த தவறுக்கு ரேகா என்ன செய்வாள் என்று எடுத்து சொல்லி புரியவைத்தார். ஆனால், மீனா கேட்கவில்லை. அதற்குப்பின் முத்து, மீனாவிற்காக தங்க தாலி செயினை வாங்கி தந்தார். வழக்கம் போல விஜயா ஏளனம் செய்தார். அந்த சமயம் பார்த்து ஹரணியின் குடும்பம் வந்தார்கள். அப்போது ஸ்வேதா, நீங்கள் இப்படி செய்வீர்கள் என்று நினைத்து பார்க்கவில்லை என்றார். ஹரணியின் அப்பா, அம்மா இருவருமே அண்ணாமலையை பார்த்து நீங்களும் இவ்வளவு பெரிய பொய் பித்தலாட்டம் செய்வீர்கள் என்று நினைக்கவில்லை என்று ரொம்ப மோசமாக பேசி விட்டார்கள். இதனால் அண்ணாமலைக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. விஜயா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
இன்றைய எபிசோட்டில் ஹரிணி, உங்களுக்கு இன்னும் விவாகரத்து கிடைக்கவில்லை. மாதம் மனோஜ், ரோகிணிக்கு 25 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று கோர்ட்டில் ஆர்டர் போட்டு இருக்கிறார்கள். அதோட ரோகிணி, மனோஜை ரொம்பவே காதலிக்கிறார். அவளுடனே சேர்ந்து வாழுங்கள் என்று சொல்கிறார். வீட்டில் உள்ள யாருக்குமே ஒன்றும் புரியவில்லை. அரணியின் அப்பா மீண்டும் மீண்டும் அண்ணாமலையை தான் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் அண்ணாமலை, எல்லோரிடமும் மன்னிப்பு கேட்கிறார்.

சீரியல் ட்ராக்:
பின் மனோஜின் திருமணமும் நின்று விடுகிறது. அதற்குப்பின் அண்ணாமலை, எதற்காக இப்படி செய்தாய்? என்பர் கேள்வி கேட்கிறார். விஜயாவும் ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். ஒரு கட்டத்தில் அண்ணாமலை, கோபத்தில் விஜயாவை அடிக்க செல்கிறார். முத்து தடுத்து விடுகிறார். பின் அண்ணாமலை, விஜயாவையும் மனோஜ் திட்டி விட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.
https://www.youtube.com/watch?v=vvntccpTPcA
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சிந்தாமணி, பைனான்சியர் இருவதும் வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது பைனான்சியர், அந்த 30 லட்சம் பணத்திற்கு மேலே உங்கள் மகனும் மனைவியும் சேர்ந்து பணம் வாங்கி இருக்கிறார்கள். அதற்காக உங்கள் வீட்டு பத்திரத்தை வைத்து இருக்கிறார்கள் என்கிறார். நான் கையெழுத்து போடவில்லையே என்று அண்ணாமலை சொல்கிறார். உடனே அந்த பைனான்சியர், உங்கள் மனைவிதான் நீங்கள் போட்டதாக பத்திரத்தை கொடுத்தார் என்று சொல்கிறார். அதைக் கேட்டு மொத்த வீடுமே ஷாக் ஆகிறது. கோபத்தில் அண்ணாமலை, மனோஜை அடிக்கிறார்






