விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா, ரோகினியை அடித்தார். அண்ணாமலை வேண்டாம் என்று தடுத்து விட்டார். மனோஜ், ரோகினியை வீட்டை விட்டு வெளியே போக சொன்னார். ரோகினி, போகமாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று எல்லோர் காலிலும் விழுந்து கெஞ்சினார். ஆனால், விஜயா- மனோஜ் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் விஜயா, அவளுடைய கழுத்தில் இருக்கும் தாலியை அறுத்தெறிந்து அவளை வெளியே அனுப்புடா என்றார்.

மனோஜ், ரோகிணி கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார். ரோகினி, ரொம்ப நன்றி மீனா.எல்லா உண்மையும் முத்துவிடம் சொல்லிவிட்டீர்கள் தானே என்றார். இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே மீனா பக்கம் திரும்பினார்கள். முன்னாடியே உண்மை தெரியுமா என்று விஜயா, முத்து, அண்ணாமலை எல்லோரும் மாத்தி மாத்தி மீனாவை கேள்வி கேட்டார்கள். ஒரு கட்டத்தில் மீனா நடந்ததை எல்லாம் சொல்லி விட்டார். விஜயா, எல்லோரும் சேர்ந்து என் மகன் வாழ்க்கையை அழித்து விட்டீர்கள் என்றார். முத்து, ரோகிணி செய்தது தவறு என்றால் நீ செய்ததும் தவறுதான் என்றார்.
சிறகடிக்க ஆசை:
முத்து, பயங்கரமாக கோபப்பட்டு மீனாவை திட்டிக் கொண்டிருந்தார். ஸ்ருதி- ரவி எல்லோருமே மீனாவிற்கு எதிராக தான் பேசினார்கள். மீனா, தன் பக்கம் இருக்கும் ஞாயத்தை எடுத்துச் சொல்லி புரிய வைத்தார். ஆனால், யாருமே கேட்பதாக இல்லை. அதற்குப்பின் ஸ்ருதி, நீங்கள் எதுவாக இருந்தாலும் வீட்டில் சொல்லி இருக்கணும். அட்லீஸ்ட் என்னிடம் ஆவது சொல்லி இருக்கணும் என்று சொன்னார். மீனா, என்ன நடந்தாலும் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று எமோஷனலாக பேசி அழுதார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் மனோஜ், ரோகினி உடைய நினைவுகளை அழுது கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் மீனா, மகேஸ்வரியின் வீட்டிற்கு சென்று நடந்ததை எல்லாம் சொன்னார். இதைக்கேட்ட மகேஷ்வரின் கணவர், உன் தோழி இங்கு தங்கத் தேவையில்லை. அவர்கள் வேறு எங்காவது தங்கி கொள்ளட்டும் என்றார். இதை கேட்ட ரோகிணி அங்கிருந்து சென்று விட்டார். அதற்குப்பின் வித்யா வீட்டிற்கு சென்ற ரோகிணி நடந்தது எல்லாம் சொன்னார். அப்போது முருகன், முத்து அண்ணன் ரொம்ப பழக்கம். ரோகினி இங்க தங்குவதற்கு நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்றார் இதனால் இடிந்து போய் ரோகிணி உட்கார்ந்து கொண்டிருந்தார்.
https://www.youtube.com/watch?v=ke32QBq6Y7Q
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ரோகினி, பார்வதி வீட்டில் தங்குவதற்கு உதவி கேட்கிறார். பார்வதி கொஞ்சம் பணத்தை கொடுத்து, நீ செய்தது பெரிய தவறு. என்னால் உனக்கு உதவி செய்ய முடியாது என்று சொல்கிறார். பின் ரோகினி, சிந்தாமணியின் வீட்டிற்கு சென்று முத்து- மீனாவை பழிவாங்க வேண்டும். அதற்கு என்ன வேணாலும் செய்யுங்கள் என்கிறார். சிந்தாமணி, ரோகினியை பகடைக்காயாக வைத்து மீனாவை பழி வாங்கி, முத்து வீட்டை எழுதி வாங்க திட்டம் போடுகிறார்.






