விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி எதற்காக இப்படி செய்யணும் என்று ஸ்ருதி-ரவி கேட்டார்கள். முத்து, மனோஜை தன் வலையில் விழ வைக்க தான் இப்படி எல்லாம் செய்தார். அதோடு இந்த புகார் கூட ரோகினி தான் கொடுத்து இருக்கனும் என்றார். உடனே மனோஜ், ரோகிணி செய்த செயலை பாராட்டி பெருமையாக பேசிக் கொண்டிருந்தார். அண்ணாமலைக்கு ஒன்றுமே புரியவில்லை. கோபத்தில் விஜயா, மனோஜை திட்டி அவள் மூலம் வந்த எந்த உதவியும் தேவையில்லை. அவளை பெருமையாக பேசுவதை நிறுத்து என்றெல்லாம் சொன்னார்.

விஜயா, ரோகினி எப்படிப்பட்டவள் என்று எனக்கு தெரியும். அவளுக்கு சப்போர்ட் செய்து இந்த வீட்டில் பேசாதே என்று மனோஜ்க்கு எச்சரிக்கை விட்டு சென்றார். பின் முத்து-மீனா இருவரும் ரோகிணியின் அடுத்த திட்டம் என்னவாக இருக்கும். இதற்கு பின்னாடி சிந்தாமணி தான் இருப்பாள் என்று பேசிக் கொண்டார்கள். பின் மீனா, சிந்தாமணிக்கு எதிராக ஆதாரங்களையும் திரட்டிக்கொண்டு அவருடைய வீட்டிற்கு போனார். அப்போது சிந்தாமணி, ரொம்ப நக்கலாக மீனாவையும் அவருடன் இருக்கும் ஆட்களையும் பேசி இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
மீனா, நீ வட்டிக்கு பணம் கொடுத்து அவர்கள் அதிகமாக வட்டி கட்டியும் பத்திரத்தையும் தராமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய். ஒழுங்கு மரியாதையாக அவர்களுடைய பத்திரத்தை கொடுக்க வேண்டும். இல்லை என்றால் நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போவேன் என்றார். சிந்தாமணியும் சவால் விட்டார். ஒரு கட்டத்தில் சிந்தாமணி அவருடைய வீட்டு பத்திரத்தை எல்லாம் திருப்பிக் கொடுத்து விட்டார். இன்னொரு பக்கம் ரோகினி, மனோஜை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். மீண்டும் வீட்டுக்குள் வருவதைப் பற்றி எல்லாம் ரோகினி பேசி இருந்தார். மனோஜ், என் அம்மா உன்னை வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டார்கள் என்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் மனோஜ் கொஞ்சம் கொஞ்சமாக ரோகினி சொல்வது எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார். பின் மனோஜ்-ரோகினி இருவரும் சேர்ந்து ஸ்ருதியின் ஹோட்டலுக்கு போகிறார்கள். அங்கு முத்து, மீனா எல்லோருமே இருக்கிறார்கள். இருவரையும் ஒன்றாக பார்த்து முத்துவிற்கு பயங்கர கோபம் வருகிறது. எல்லோருமே மாற்றி மாற்றி மனோஜை கேள்வி கேட்கிறார்கள். மனோஜ், ரோகினிக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார். இதனால் முத்துவிற்கு ரோகிணியின் சதி வேலை புரிந்து விட்டது.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் சிந்தாமணி, முத்து- மீனாவை பழி வாங்குவதற்காக உடனடியாக 38 லட்சம் பணத்தை கொடுக்க வேண்டும் என்று வக்கீல் இடம் நோட்டீஸில் அனுப்ப சொல்கிறார். பின் முத்துவின் வீட்டிற்கும் அந்த நோட்டீஸ் வருகிறது. 24 மணி நேரத்தில் மொத்த பணத்தை கொடுக்க வேண்டும் என்று நோட்டீசில் இருக்கு. அதை பார்த்து மொத்த வீடுமே பயப்படுகிறது. வழக்கம் போல மனோஜ் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கிண்டல் செய்கிறார். அண்ணாமலை உடைந்து போய் என்ன என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கிறார். எப்படியாவது இந்த வீட்டை மீட்க வேண்டும் என்று முத்துவிடம் சொல்கிறார்.






