அப்போ இருந்த இயக்குனர்கள் இப்போ இல்லை- மனம் திறந்த சிறகடிக்க ஆசை டப்பிங் ஆர்ட்டிஸ்ட்

0
281
- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியல் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் தான். இந்த சீரியல், கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த கதை. மேலும், இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது சீரியலில் மூணு ஜோடிகள் காம்பிடிஷனில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதில் ஒவ்வொரு ஜோடியும் தங்களுடைய திறமையை காண்பித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

வழக்கம் போல் மனோஜ், குருட்டு தனமாக வெற்றி பெற திட்டம் போடுகிறார். இருந்தாலுமே நடுவர்களிடம் மாட்டிக்கொண்டு அசிங்கப்பட்டார். இறுதியில் முத்து- மீனா தான் போட்டியில் வெற்றி பெறுகிறார்கள். மேலும், இந்த சீரியலில் மாமியார் விஜயா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அனிலாவுக்கு டப்பிங் கொடுப்பவர் தான் கல்யாணி அன்பழகன். இவர் பல ஆண்டு காலமாக டப்பிங் ஆர்டிஸ்டாக பணியாற்றி வருகிறார். இவர் பல நடிகைகளுக்கு குரல் கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு சின்னத்திரை விருதுகள் 2023க்கான விழாவில் சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட் என்று சிறகடிக்க ஆசை தொடருக்காக இவருக்கு வழங்கப்பட்டது.

- Advertisement -

கல்யாணி அன்பழகன் பேட்டி :

இது தொடர்பாக கல்யாணி அன்பழகன் அளித்த பேட்டியில், நான் முதன் முதலாக வாங்கின விருது. இதை நினைத்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. திருமதி செல்வம் சீரியல் வந்த நேரத்தில் சீரியலில் நடித்த எல்லோருக்குமே விருது கிடைத்தது. நம்ம இவ்ளோ கஷ்டப்பட்டு செய்கிறோம். ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று கொஞ்சம் வருத்தமாக இருந்தது. மெட்டி ஒலி சீரியல் எல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு பேசியிருந்தேன். ஆனாலும், எனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

விருது குறித்து சொன்னது:

டப்பிங் ஆர்டிஸ்ட் என்று என்னுடைய பெயர் கூட வெளியே தெரியாது. ஆனால், இத்தனை வருடம் கிடைக்காத அங்கீகாரம் எனக்கு இப்போது சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் கிடைத்திருக்கிறது என்றால் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த வெற்றியை பார்க்க என்னுடைய கணவர் என்னுடன் இல்லாதது வருத்தமாக இருக்கிறது. அவரை தான் ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். அவரும் நானும் டிராமாவில் தான் சந்தித்தோம். அதற்குப் பிறகு நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். குழந்தை பிறந்த பிறகு நான் ட்ராமாவில் நடிப்பதை விட்டு விட்டேன்.

-விளம்பரம்-

கணவர் குறித்து சொன்னது:

அதற்குப் பின் டப்பிங் ஆர்டிஸ்டாக பணியாற்றினேன். டப்பிங் பேசும் போது எவ்வளவு நேரம் ஆனாலுமே எனக்காக பொறுமையாக காத்திருந்து என்னை கூட்டிட்டு போவார். என்னுடைய வாழ்க்கை பயணத்தில் முக்கால்வாசி அவர்தான் இருந்தார். என்னுடைய பையன், மருமகள், பேரன் என எல்லோருமே வேலைக்காக வெளிநாட்டில் இருக்கார்கள். விருது வாங்கும் போது அதை பார்ப்பதற்காக என்னுடைய மகன் வந்து என் கூடவே இருந்தான். அவனுக்கும் ரொம்ப சந்தோஷம். நான் என்னுடைய 18 வயசில் தான் டப்பிங் பேசினேன்.

டப்பிங் குறித்து சொன்னது :

ஆரம்பத்தில் எனக்கு டப்பிங் பேசுவது தெரியாது. இயக்குனர்கள் சொல்லிக் கொடுத்து அதில் இருந்து தான் நான் கற்றுக்கொண்டேன். இப்போது பேசுற மாதிரி தனித்தனியாக பேசுற மாதிரி எல்லாம் இருக்காது. நாலைந்து பேர் ஒரே மைக்கில் பேசவோம். அதில் யாராவது ஒருவர் தவறு செய்து விட்டாலும் மறுபடியும் எல்லோருமே முதலில் இருந்து பேசணும். அப்படித்தான் டப்பிங் சார்ந்த விஷயங்கள் எல்லாம் கற்றுக் கொண்டேன். முதலில் சிறகடிக்க ஆசை சீரியலுக்காக என்னைக் கூப்பிட்ட போது செட்டாகுமா? என்று தான் கேட்டேன். அதற்குப் பின் முழு மனதோடு செய்தேன் என பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்

Advertisement